மேலும் அறிய

தமிழாசிரியர் பணிக்கு இந்தி, சமஸ்கிருதம் கட்டாயம்?- தமிழர்களுக்கு எதிரான விதிகளைத் திரும்பப் பெற வலியுறுத்தல்

தமிழாசிரியர்களாகப் பணியாற்றத் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான ஆள்தேர்வு விளம்பரத்தை வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய பண்பாட்டு உறவுகளுக்கான குழு வெளியிட்டுள்ளது.  

வெளிநாடுகளில் தமிழாசிரியராக பணியாற்ற இந்தியும், சமஸ்கிருதமும் தெரிந்திருக்க வேண்டுமா என்று கேள்வி எழுப்பி உள்ள பா.ம.க.  நிறுவனர் ராமதாஸ், தமிழர்களுக்கு எதிரான விதிகளை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு:

''வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்கள் மற்றும் பண்பாட்டு மையங்களில் தேவைப்படும் காலங்களில் மட்டும் ஒப்பந்த அடிப்படையில் தமிழாசிரியர்களாகப் பணியாற்றத் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான ஆள்தேர்வு விளம்பரத்தை வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய பண்பாட்டு உறவுகளுக்கான குழு வெளியிட்டுள்ளது.  

அதில் தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டமும், கல்வியலில் இளநிலைப் பட்டமும் பெற்றிருக்க வேண்டும் என்பதுடன், இந்தி மற்றும் சமஸ்கிருத மொழியறிவு விரும்பத்தக்க தகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழர்களுக்கு எதிரான இந்த நிபந்தனைகள் கண்டிக்கத்தக்கவை.

வெளிநாடுகளில் உள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைப்புகளில் தமிழ் மொழி படிக்க விரும்புபவர்களில் பலர் தமிழ் தெரியாதவர்களாக இருப்பார்கள் என்பதால் தமிழாசிரியர்களுக்கு பிறமொழி அறிவு அவசியம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதற்காகத்தான் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஆழ்ந்த அறிவு பெற்றிருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்பில்லாத இந்தி, சமஸ்கிருதம் எதற்கு?

இந்தத் தகுதி பெற்றிருந்தால், ஆங்கிலத்தின் வழியாக யாருக்கு வேண்டுமானாலும் தமிழ் மொழியைக் கற்றுக் கொடுக்க  முடியும். தமிழ் மொழியை கற்றுக் கொடுப்பதற்கு அதற்கு சற்றும் தொடர்பில்லாத இந்தி மற்றும் சமஸ்கிருத மொழியறிவு ஏன் தேவை? என்பது புரியவில்லை.

வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களில் பணியாற்றுவதற்கான தமிழாசிரியர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்? என்பது குறித்த வெளிப்படையான நடைமுறைகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. இந்த ஆள்தேர்வைப் பொறுத்தவரை இந்திய பண்பாட்டு உறவுகளுக்கான குழுவின் அதிகாரிகள் வைத்ததுதான் சட்டம் ஆகும். அவர்கள் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு வாய்ப்புக் கொடுப்பதற்காகவே இந்தத் தேவையற்ற நிபந்தனைகளை திணித்திருப்பார்களோ? என்று எண்ணத் தோன்றுகிறது.

அப்பட்டமான இந்தி, சமஸ்கிருதத் திணிப்பு

இந்தி ஆசிரியர் பணிக்கோ, சமஸ்கிருத ஆசிரியர் பணிக்கோ தமிழ் மொழியறிவு விரும்பத்தக்க தகுதியாக அறிவிக்கப்படாத நிலையில், தமிழாசிரியர் பணிக்கு மட்டும் இந்தி, சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்பது அப்பட்டமான இந்தி, சமஸ்கிருதத் திணிப்பு ஆகும். இதை அனுமதிக்க முடியாது. எனவே, தமிழாசிரியர் நியமனம் தொடர்பான விளம்பர அறிவிப்பில் இந்தி மற்றும் சமஸ்கிருத மொழியறிவு விரும்பத்தக்க தகுதி என்ற நிபந்தனையை இந்திய வெளியுறவுத்துறை நீக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்''.

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

10 வருடம் கூட்டுறவுதுறை அமைச்சராக இருந்தேன்; ஒரு ஊழல் குற்றச்சாட்டு சொல்ல முடிந்ததா? - செல்லூர் ராஜூ கேள்வி!
10 வருடம் கூட்டுறவுதுறை அமைச்சராக இருந்தேன்; ஒரு ஊழல் குற்றச்சாட்டு சொல்ல முடிந்ததா? - செல்லூர் ராஜூ கேள்வி!
Breaking News LIVE, 20 Sep :  நாளை அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி - எதற்கு தெரியுமா?
Breaking News LIVE, 20 Sep : நாளை அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி - எதற்கு தெரியுமா?
Tata Curvv Hyperion Review: டாடா கர்வ்வ் பெட்ரோல் ஹைபீரியன் 1.2 டர்போ மேனுவல் கார்..!  எப்படி இருக்கு?
Tata Curvv Hyperion Review: டாடா கர்வ்வ் பெட்ரோல் ஹைபீரியன் 1.2 டர்போ மேனுவல் கார்..! எப்படி இருக்கு?
NPS Vatsalya Calculator: குழந்தைகளுக்கான என்பிஎஸ் வாத்சல்யா - ரூ.10,000 போதும், ரூ.2.75 கோடிக்கு அதிபதி, எப்படி சாத்தியம்?
NPS Vatsalya Calculator: குழந்தைகளுக்கான என்பிஎஸ் வாத்சல்யா - ரூ.10,000 போதும், ரூ.2.75 கோடிக்கு அதிபதி, எப்படி சாத்தியம்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Trichy News | திமுக கொடியுடன் ஆடு திருடும் கும்பல்..தீவிரமாக தேடும் போலீஸ்VCK vs PMK  | Graph-ஐ உயர்த்திய திருமா! விசிக ரூட்டில் பாமக?அன்புமணி மாஸ்டர் பிளான்Shakthi Vasudevan | GP Muthu Fight | ரகளை செய்த GP முத்து..BEEP-ல் பூசாரியுடன் சண்டை..என்ன காரணம் தெரியுமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
10 வருடம் கூட்டுறவுதுறை அமைச்சராக இருந்தேன்; ஒரு ஊழல் குற்றச்சாட்டு சொல்ல முடிந்ததா? - செல்லூர் ராஜூ கேள்வி!
10 வருடம் கூட்டுறவுதுறை அமைச்சராக இருந்தேன்; ஒரு ஊழல் குற்றச்சாட்டு சொல்ல முடிந்ததா? - செல்லூர் ராஜூ கேள்வி!
Breaking News LIVE, 20 Sep :  நாளை அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி - எதற்கு தெரியுமா?
Breaking News LIVE, 20 Sep : நாளை அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி - எதற்கு தெரியுமா?
Tata Curvv Hyperion Review: டாடா கர்வ்வ் பெட்ரோல் ஹைபீரியன் 1.2 டர்போ மேனுவல் கார்..!  எப்படி இருக்கு?
Tata Curvv Hyperion Review: டாடா கர்வ்வ் பெட்ரோல் ஹைபீரியன் 1.2 டர்போ மேனுவல் கார்..! எப்படி இருக்கு?
NPS Vatsalya Calculator: குழந்தைகளுக்கான என்பிஎஸ் வாத்சல்யா - ரூ.10,000 போதும், ரூ.2.75 கோடிக்கு அதிபதி, எப்படி சாத்தியம்?
NPS Vatsalya Calculator: குழந்தைகளுக்கான என்பிஎஸ் வாத்சல்யா - ரூ.10,000 போதும், ரூ.2.75 கோடிக்கு அதிபதி, எப்படி சாத்தியம்?
Sri Lanka Elections: தேர்தல் பரபரப்பு - இலங்கையின் அடுத்த அதிபர் யார்? மீண்டும் ராஜபக்‌ஷ குடும்பத்தின் ஆதிக்கமா?
Sri Lanka Elections: தேர்தல் பரபரப்பு - இலங்கையின் அடுத்த அதிபர் யார்? மீண்டும் ராஜபக்‌ஷ குடும்பத்தின் ஆதிக்கமா?
என்னய்யா பித்தலாட்டம் இது? போன் நம்பர் வாங்கி பாஜகவில் இணைத்த கும்பல்! புதுச்சேரியில் அதிர்ச்சி!
என்னய்யா பித்தலாட்டம் இது? போன் நம்பர் வாங்கி பாஜகவில் இணைத்த கும்பல்! புதுச்சேரியில் அதிர்ச்சி!
தமிழகத்தில் இன்று ( 20.09.24 ) மின் தடை ஏற்படும் பகுதிகள் - லிஸ்ட் இதோ
தமிழகத்தில் இன்று ( 20.09.24 ) மின் தடை ஏற்படும் பகுதிகள் - லிஸ்ட் இதோ
Rasi Palan Today, Sept 20: மிதுனத்துக்கு மகிழ்ச்சியான நாள், மன வருத்தங்கள் நீங்கும்.. உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan: மிதுனத்துக்கு மகிழ்ச்சியான நாள், மன வருத்தங்கள் நீங்கும்.. உங்கள் ராசிக்கான பலன்
Embed widget