(Source: ECI/ABP News/ABP Majha)
Spiritual: நல்லாடை சுந்தர நாயகி சமேத அக்னீஸ்வரர் கோயில் மண்டல அபிஷேக பூர்த்தி விழா
இரண்டாம் ராஜராஜ சோழனால் 900 ஆண்டுகளுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்ட நல்லாடை பரணி நட்சத்திர ஆலயமான, சுந்தர நாயகி சமேத அக்னீஸ்வரர் கோயிலில் மண்டல அபிஷேக பூர்த்தி விழா வெகுவிமரிசையாக நடைபெற்றுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா நல்லாடை கிராமத்தில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த சுந்தர நாயகி சமேத அக்னிஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. மார்க்கண்டேயனை பெறுவதற்காக குழந்தை வரம் வேண்டி மிருகண்ட மகரிஷி யாகம் செய்த ஆலயமாகவும், பார்வதியின் சாபத்தால் ஒளியை இழந்த அக்ணி பகவான் இறைவனின் வரத்தால் இத்தலத்தின் தெற்கே இருக்கும் தீர்த்தத்தில் நீராடி இழந்த ஒளியை பெற்றதாக கோயில் வரலாறு கூறுகிறது.
இவ்வாலயத்தை 900 ஆண்டுகளுக்கு முன்பு சோழவள நாட்டை ஆட்சி செய்த இரண்டாம் ராஜராஜ சோழன் கருங்கல் ஆலயமாக புதுப்பித்தார். இது குறித்த கல்வெட்டுகள் ஆலயத்தின் கருவறை சுவர்களில் காணப்படுகிறது. பரணி நட்சத்திரக்காரர்களின் பரிகார ஆலயமாக விளங்கும் சிறப்பு மிக்க இந்த ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் கடந்த மே மாதம் 24 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றது. இதனை தொடர்ந்து 48 நாட்கள் கடந்து மண்டல அபிஷேக பூர்த்தி விழா நடைபெற்றது.
அதனை முன்னிட்டு கோயில் வளாகத்தில் யாக குண்டம் அமைக்கப்பட்டு, நவகிரக சாந்தி ஹோமம், மகாமிர்த்யுஞ்சய ஹோமம், சுதர்சன ஹோமம், உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி அம்பாளுக்கு சிறப்பு மகா அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்