மேலும் அறிய

மாயூரநாதர் கோயிலில் நலங்கு உற்சவம் - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

மாயூரநாதர் ஆலயத்தில் துலா உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியாக நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தின் தொடர்ச்சியாக நடைபெற்ற நலங்கு உற்சவத்தில் நலுங்கு பாடல்கள் பாடி பக்தர்கள் பரவசத்துடன் வழிபாடு செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் நடைபெறும் காவிரி துலா உற்சவம் மிகவும் புகழ் பெற்றதாகும். ஐப்பசி மாதம் காவிரியில் கங்கை முதலான புண்ணிய நதிகள் நீராடி தங்கள் பாவத்தை போக்கிக்கொண்டதாக புராணம் கூறுகிறது. இதனால் ஐப்பசி மாதம் 30 நாட்களும் காவிரிதுலா உற்சவம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில்  இந்தாண்டு துலா உற்சவம் பார்வதி தேவி மயில் உருவில் சிவனை பூஜித்து சாபவிமோசனம் அடைந்த மிகவும் பழமைவாய்ந்த 1500 ஆண்டுகள் பழமையான மாயூரநாதர் ஆலயம் மற்றும் வதான்யேஸ்வரர், உள்ளிட்ட பல்வேறு சிவாலயங்களில் கொடியேற்றம் செய்யப்பட்டு 10 நாள் உற்ச்சவம் நடைபெற்று வருகிறது.

Jammu Kashmir Bus Accident: ஜம்மு & காஷ்மீரில் கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 36 பேர் பலியான சோகம் - பிரதமர் மோடி இரங்கல்

மாயூரநாதர் கோயிலில் நலங்கு உற்சவம் - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

இந்நிலையில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் பாடல்பெற்ற பழைமை வாய்ந்த மாயூரநாதர் ஆலயத்தில் துலா உற்சவ விழாவின் முக்கிய நிகழ்வாக கடந்த ஏழாம் தேதி திருக்கொடியேற்றம் செய்யப்பட்டு பத்து நாள் உற்சவத்தில் ஏழாம் திருநாளாக நேற்று மாயூரநாதர் அவையாம்பிகை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று நலங்கு உற்சவம் நடைபெற்றது. நலங்கு உற்சவத்தை முன்னிட்டு சாமி அம்பாள் திருமண கோலத்தில் எழுந்தருள செய்யப்பட்டு நலங்கு விளையாட்டு நடைபெற்றது. சுவாமி அம்பாளுக்கு காலில் மருதாணி இடப்பட்டு, வெத்தலை பாக்கு தாம்பூலம் கொடுத்தல், அரிசி கொடுத்து பருப்பு வாங்குதல், பூப்பந்து எரிந்து விளையாடுதல், தேங்காய் உருட்டி விளையாடுதல், தலை சீவி விட்டு அழகு பார்த்து கண்ணாடியில் முகம் பார்த்தல், போன்ற பல்வேறு விளையாட்டுகள் நடைபெற்றது.

Karthigai Deepam: ஐஸ்வர்யாவுக்கு அதிர்ச்சி கொடுத்த சாமியார்.. அபிராமி செய்யப்போவது என்ன? கார்த்திகை தீபம் இன்று!

மாயூரநாதர் கோயிலில் நலங்கு உற்சவம் - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

இந்த நலங்கு உற்சவத்தின் போது சிறுவர், சிறுமிகள் முதல் பெண்கள் வரை நலங்கு பாடல்களை பக்தி பரவசத்துடன்  பாடியது பக்தர்களை பரவசப்படுத்தியது. தொடர்ந்து சோடச தீபாராதனை செய்யப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் சுவாமி அம்பாள் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடைபெற்றது‌. இதில் மயிலாடுதுறையை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்  செய்தனர். தொடர்ந்து விழாவின் சிகர நிகழ்வான கடைமுக தீர்த்தவாரி 16 -ம் தேதி நடைபெற உள்ளது. மேலும் அன்றைய தினம் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி அறிவித்துள்ளார்.

Rohit Sharma Record: உலகக்கோப்பையில் 50 சிக்ஸர்கள்! புதிய வரலாறு படைத்த ஹிட் மேன் ரோகித்சர்மா!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan : Bus Accident : போதை தலைக்கேறிய அரசு ஓட்டுநர் காவல் நிலையத்தில் புகுந்த பஸ் சென்னை அடையாறில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Adani TNEB: அதானி உடன் கைகோர்த்த திமுக அரசு? வெடிக்கும் லஞ்ச விவகாரம் -  அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
Adani TNEB: அதானி உடன் கைகோர்த்த திமுக அரசு? வெடிக்கும் லஞ்ச விவகாரம் - அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
Vijay vs Thirumavalavan: விஜய்க்கு வில்லனா? தளபதியா? திருமா முடிவுக்காக தி.மு.க. வெயிட்டிங்!
Vijay vs Thirumavalavan: விஜய்க்கு வில்லனா? தளபதியா? திருமா முடிவுக்காக தி.மு.க. வெயிட்டிங்!
Embed widget