மகாதானபுரம் சடையப்ப சித்தர், ஓசைமணி காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா
மகாதானபுரம் கிராமத்தில் புங்க மரத்தடியில் சமாதி அடைந்துள்ள சடையப்ப சித்தர் கோயில் மற்றும் ஓசைமணி காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த மூவலூர் மகாதானபுரம் கிராமத்தில் அமைந்துள்ளது பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற ஓசைமணி காளியம்மன் கோயில். இக்கோயிலின் மணியை ஒலித்து வேண்டுதல்கள் வைப்போருக்கு வேண்டிய பிரார்த்தனைகள் உடனடியாக நிறைவேறும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை. இந்த கோயிலில் உள்ள புங்க மரத்தடியில் சடையப்பர் என்ற சித்தர் சமாதி அமைந்துள்ளது. சடையப்ப சித்தர் சமாதி அடைந்ததால் இந்தப் புங்கமரம் வேறு எங்கும் இல்லாதவகையில் விழுதுகளுடன் காணப்படுகிறது. இத்தகைய பல்வேறு சிறப்புக்குரிய இந்த ஆலயம். இக்கோயிலில் கடைசியாக கடந்த 2009 -ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.
அதனை தொடர்ந்து 14 ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது மீண்டும் ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பாபிஷேகம் விழாவை நடத்த ஊர் முக்கியஸ்தர்களும், பொதுமக்களும் முடிவெடுத்தனர். அதனை தொடர்ந்து ஊர்மக்கள் பங்களிப்புகளுடன், வண்ணம் தீட்டுதல், சிற்ப வேலைப்பாடுகள் என கோயில் திருப்பணி தொடர்பாக பல்வேறு பணிகள் நடைபெற்றன. தொடர்ந்து திருப்பணி பணிகள் நிறைவு பெற்றதை அடுத்து இன்று மகா கும்பாபிஷேகம் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதனை அடுத்து கும்பாபிஷேகம் கடந்த 7ஆம் தேதி முதல் கால யாகசாலை பூஜைகளுடன் தொடங்கி கும்பாபிஷேக தினமான இன்று நான்காம் கால யாகசாலை பூஜை நிறைவுற்று மஹாபூர்ணாஹூதி செய்யப்பட்டு மற்றும் மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்கள் மேள தாள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, விமான கோபுர கலசங்களை அடைந்தது.
அங்கு வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் ஓத புனித நீர் கோபுர கலத்தின் மீது ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித நீரை பக்தர்கள் காணிக்கை செலுத்தி வாங்கி சென்றனர்.
Naatu Naatu Song: ஆஸ்கருக்கு சென்ற நாட்டு நாட்டு பாடல்.. ஏன் இந்தியாவில் படமாக்கப்படவில்லை தெரியுமா?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்