பக்தர்கள் வெள்ளத்தில் நடைபெற்ற எலந்தங்குடி வெற்றி விநாயகர் கோயில் குடமுழுக்கு....!
மயிலாடுதுறை அருகே எலந்தங்குடி வெற்றி விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை அருகே எலந்தங்குடியில் அமைந்துள்ள வெற்றி விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசம் பொங்க குடமுழுக்கு நிகழ்வை கண்டு தரிசனம் செய்தனர்.
எலந்தங்குடி வெற்றி விநாயகர் கோயில்
மயிலாடுதுறை மாவட்டம் எலந்தங்குடி கிராமத்தில் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற வெற்றி விநாயகர் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் குடமுழுக்கு விழா செய்ய அவ்வூர் பொதுமக்கள் முடிவெடுத்தனர். அதனைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினருடன் உதவிகளுடன் கோயில் திருப்பணிகளை தொடங்கினர். கோயில் கட்டிட வேலை, சிற்பம் வடிவமைப்பு, வண்ணம் தீட்டுதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று திருப்பணிகள் அனைத்தும் செய்து முடிக்கப்பட்டது.
Soorasamharam: அரோகரா! இன்று சூரசம்ஹாரம்! காலை முதலே முருகன் கோயில்களில் குவிந்த பக்தர்கள்!
நான்கு கால யாகசாலை பூஜைகள்
அதனை அடுத்து இன்று கும்பாபிஷேகத்திற்கான நல்நாள் குறிக்கப்பட்டது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த நவம்பர் 4 -ஆம் தேதி பூர்வாங்க பூஜையும், 5 -ஆம் தேதி முதல் கால யாகசாலை பூஜையும் தொடங்கின. தொடர்ந்து இன்று 4 -ஆம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து, பூர்ணாஹுதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் யாகசாலையில் இருந்து யாகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் அடங்கிய கடம் புறப்பாடு செய்யப்பட்டது.
கும்பாபிஷேக நிகழ்வு
புனிதநீர் அடங்கிய கடங்களை வேத விற்பன்னர்கள் தலையில் சுமந்து மேளதாள மங்கள வாத்தியங்கள் முழங்க கோயிலை சுற்றி வலம் வந்து பின்னர் விமான கலசத்தை அடைந்தனர். அங்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத, மங்கள வாத்தியங்கள் இசைக்க விமான கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்பட்டது. அப்போது ஒரே நேரத்தில் தட்சிணாமூர்த்தி, பாலமுருகன், ஜெயவீர ஆஞ்சநேயர், துர்க்கை அம்மன், பிரம்மா மற்றும் பரிவார தெய்வங்களின் சன்னதிகளுக்கும் கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்பட்டது.
Thug Life Release Date : 37 வருட ரசிகர்களின் காத்திருப்பு...டீசருடன் வெளியானது தக் லைஃப் ரிலீஸ் தேதி
கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட திரளான பக்தர்கள்
தொடர்ந்து மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில் மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பூஜைகளை சாம்பசிவ சிவாச்சாரியார் தலைமையிலானோர் செய்து வைத்தனர்.