New Year 2025: ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பு ... கோயில்களில் பிரபலங்கள் சாமி தரிசனம்
மயிலாடுதுறை மாவட்டம் உள்ள கோயில், சர்ச்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது
புத்தாண்டை முன்னிட்டு மயிலாடுதுறை அத்தி வரதர் எனப்படும் கோழி குத்தி வானமுட்டி பெருமாள் ஆலயத்தில், சுவாமிக்கு சொர்ண அபிஷேகம் செய்யப்பட்டது. அதில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
புத்தாண்டு சிறப்பு தரிசனம்:
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த சோழம்பேட்டை ஊராட்சியில் கோழிகுத்தி என்ற இடத்தில் மிகப் பழமை வாய்ந்த 16 அடி உயரத்தில் ஒரே அத்தி மரத்தால் செய்யப்பட்ட வானமுட்டி பெருமாள் கோயில் அமைந்துள்ளது. மயிலாடுதுறையின் அத்திவரதர் என்று அழைக்கப்படும் இந்த ஆலயத்தில் புத்தாண்டை முன்னிட்டு அதிகாலை நடை திறக்கப்பட்டு சொர்ண அபிஷேகம் செய்யப்பட்டது.மேலும் புத்தாண்டை முன்னிட்டு பக்தர்கள் காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்
இதையும் படிங்க: Mettur Dam: புத்தாண்டில் ஒரு ஹாப்பி நியூஸ்... முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை..
இதுபோல் மயிலாடுதுறை நகரில் புகழ்பெற்ற வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயகருக்கு தங்க காப்பும், உற்சவருக்கு வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு சிறப்பு தீபாரதனை செய்யப்பட்டது. இதில் மயிலாடுதுறையை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
வைத்தீஸ்வரன் கோவிலில் சிறப்பு வழிபாடு:
ஆங்கில புத்தாண்டையொட்டி வைத்தீஸ்வரன் கோயில், திருவெண்காடு கோயில்களில் குடும்பத்தினருடன் பொதுமக்கள் சாமி தரிசனம். ஆங்கில புத்தாண்டு இன்று பிறந்துள்ளது முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த நவக்கிரகங்களில் செவ்வாய் ஸ்தலமான தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாத சுவாமி கோயிலுக்கு திரளான பக்தர்கள் வருகை புரிந்தனர். புத்தாண்டையொட்டி பலர் தங்கள் குடும்பத்தினருடன் கோயிலுக்கு வருகை புரிந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஆதி வைத்தியநாத சுவாமி, வைத்தியநாதர்- தையல்நாயகி அம்மன் , கற்பக விநாயகர், செல்வமுத்துக்குமார சுவாமி, ஆகிய அம்மன் அங்காரகன் ஆகிய சுவாமி சன்னதிகளில் நெய் தீபங்கள் ஏற்றியும், தங்களது குடும்பங்களின் பெயர்களில் அர்ச்சனைகள் செய்தும் வழிபட்டு செல்கின்றனர்.
இதேபோல் சீர்காழி அருகே உள்ள புதன் ஸ்தலமான பிர்ம்ம வித்யாம்பியகை உடனாகிய சுவேதாரண்யேஸ்வர சுவாமி கோயிலிலும் ஆங்கில புத்தாண்டு ஒட்டி காலை முதலே பக்தர்கள் கூட்டமும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் கூட்டம், சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் கூட்டம் என அதிகளவு பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோயிலில் உள்ள முக்குளங்களில் சில பக்தர்கள் நீராடி சுவாமிகளை தரிசனம் செய்து செல்கின்றனர்.
இதையும் படிங்க: Manipur Issue: கேள்விக்கு சம்மந்தமே இல்லாத பதில்..! பிரதமர் மோடி.. மன்னிப்பு கேட்ட மணிப்பூர் முதலமைச்சர்
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சீர்காழி அருகே நவக்கிரகங்களில் செவ்வாய் ஸ்தலமான வைத்தீஸ்வரன் கோயிலில் பின்னணி பாடகர் வேல்முருகன் மற்றும் சுட்டி அரவிந்த் சாமி தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நவக்கிரகங்களில் செவ்வாய் ஸ்தலமும் நோய் தீர்க்கும் ஸ்தலமாக விளங்கிவரும் வைத்தீஸ்வரன் கோயிலில் தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாதர்சுவாமி அருள் பாலிக்கிறார். இங்கு தனி சன்னதியில் செல்வமுத்துக்குமாரசாமி, அங்காரகன், தன்வந்திரி சுவாமிகள் காட்சி தருகின்றனர். பிரசித்தி பெற்ற இக்கோயிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அதிகாலை முதல் திரளான பக்தர்கள் கோயிலுக்கு வருகை புரிந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: Pongal Parisu 2025: மக்களே! பொங்கல் பரிசுத்தொகுப்பு டோக்கன் வாங்க ரெடியா? எப்போ தர்றாங்க?
இதனிடையே ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு திரைப்பட பின்னணி பாடகர் வேல்முருகன், சின்னத்திரை பல்சுவை நடிகர் சுட்டி.அரவிந்த் ஆகியோர் வைத்தீஸ்வரன் கோவில் வருகை புரிந்தனர். தொடர்ந்து சுவாமி -அம்மன், செல்வ முத்துக்குமாரசாமி, அங்காரகன் ஆகிய சுவாமி சன்னதிகளில் வழிபாடு செய்தனர். பின்னணி பாடகர் வேல்முருகன் சுவாமி சன்னதி முன்பு மனமுருகி பக்திப் பாடல் பாடி வழிபாடு செய்தார். கோயிலுக்கு வருகை புரிந்து இருந்த பக்தர்கள் பின்னணி பாடகர் வேல்முருகன் மற்றும் அரவிந்த் ஆகியோருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.