மேலும் அறிய

பிரசித்தி பெற்ற பட்டணப் பிரவேசம் விழா - வெள்ளி நாற்காலி பல்லக்கில் எழுந்தருளினார் தருமபுரம் ஆதீனம்

தருமபுரம் ஆதீனத்தில் புகழ்பெற்ற பட்டணப் பிரவேசம் விழாவின் 10 நாள் நிகழ்வாக முந்தைய ஆதீனங்களின் குரு மூர்த்தங்களில் தற்போதைய ஆதீனகர்த்தர் வழிபாடு நடத்தினர்.

தருமபுரம் ஆதீனம் குரு முதல்வர் குருபூஜை விழாவை முன்னிட்டு தருமபுரம் ஆதீனகர்த்தரை வெள்ளி நாற்காலி பல்லக்கில் பக்தர்கள் தூக்கி செல்ல முந்தைய ஆதீனங்களின் குருமூர்த்தங்களில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர்.

16 -ஆம் நூற்றாண்டை சேர்ந்த தொன்மை திருமடம்

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த தருமபுரத்தில் 16 -ஆம் நூற்றாண்டை சேர்ந்த தொன்மை வாய்ந்த தருமபுரம் ஆதீனத் திருமடம் அமைந்துள்ளது. சைவத்தையும், தமிழையும் வளர்க்கும் ஆதீனத்தில், ஆண்டுதோறும் ஸ்ரீ ஞானபுரீஸ்வரசுவாமி கோயில் பெருவிழா, குருபூஜைவிழா, பட்டணப் பிரவேசம் விழா ஆகிய மூன்றும், வைகாசி மாதம் 11 நாட்கள் கொண்டாடப்படும். 


பிரசித்தி பெற்ற பட்டணப் பிரவேசம் விழா - வெள்ளி நாற்காலி பல்லக்கில் எழுந்தருளினார் தருமபுரம் ஆதீனம்

பட்டணப் பிரவேசம் 

இதில் 11-ம் திருநாள் அன்று ஆதீனத்தை தோற்றுவித்த ஸ்ரீலஸ்ரீ குருஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் குருபூஜை விழா மற்றும் பட்டணப் பிரவேசம் நிகழ்ச்சியும் பாரம்பரியமாக நடப்பது வழக்கம். இவ்விழாவில் தருமை ஆதீனம் குருமகா சன்னிதானத்தை பல்லக்கில் அமரவைத்து பக்தர்கள் தூக்கி சென்று ஆதீன திருடத்தின் நான்கு வீதிகளில் சுற்றி பட்டிணப் பிரவேசம் வலம் வருவது நடைமுறை.


பிரசித்தி பெற்ற பட்டணப் பிரவேசம் விழா - வெள்ளி நாற்காலி பல்லக்கில் எழுந்தருளினார் தருமபுரம் ஆதீனம்

விழாவிற்கு விதிக்கப்பட்ட தடை

இந்நிலையில், மனிதனை மனிதன் தூக்கிசெல்லும் பல்லக்கு நிகழ்ச்சிக்கு தடைவிதிக்க வேண்டுமென்று சில அமைப்புகள் கோரிக்கை விடுத்தை அடுத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பல்லக்குதூக்கும் (பட்டிணப் பிரவேசம்) நிகழ்ச்சிக்கு மயிலாடுதுறை அப்போதைய கோட்டாட்சியர் பாலாஜி தடைவிதித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த இந்து அமைப்பினர், பக்தர்கள், பல்வேறு அரசியல் கட்சியினர் மதவழிபாட்டு முறைகளுக்கு அரசு தடைவிதிப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சட்டசபையில் கவனஈர்ப்பு தீர்மானமும் கொண்டுவரப்பட்டது. பல்வேறு ஆதீனங்கள் முதல்வரை சந்தித்து பட்டிணப் பிரவேசம் தடையை நீக்க கோரிக்கை வைத்த நிலையில், பல்லக்கு தூக்கும் நிகழ்விற்கு விதிக்கப்பட்ட தடையை விலக்கி கொள்வதாக அப்போதைய மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி ஆணைபிறப்பித்தார். இதனால், பட்டிணப் பிரவேசம் நிகழ்வு தமிழகம் முழுவதும் பிரபலமானது. 


பிரசித்தி பெற்ற பட்டணப் பிரவேசம் விழா - வெள்ளி நாற்காலி பல்லக்கில் எழுந்தருளினார் தருமபுரம் ஆதீனம்

நாடுமுழுவதும் பிரபலம் 

வழக்கமாக கடந்த காலங்களை ஆதீனத்தை சுற்றியுள்ள மக்கள் மட்டுமே குறைவாக கலந்துகொண்ட நிலையில், பட்டிணப் பிரவேசம் நிகழ்ச்சிக்கு தடைவிதிக்கப்பட்ட பின்னர் நடைபெறும் பட்டிணப் பிரவேசம் நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் பல மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் வருகின்றனர். உலகளவில் பட்டணப்பிரவேசம் நிகழ்ச்சியும் பிரபலம் அடைந்துள்ளது.

இந்தாண்டு விழா

இந்நிலையில் இந்தாண்டு வைகாசி பெருவிழாவானது கடந்த 9 -ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான 10-ஆம் நாள் விழாவான இன்று தருமபுரம் ஆதீனத்தை தோற்றுவித்த குரு ஞானசம்பந்தரின் குருவான கமலை ஞானப்பிரகாசர் குருபூஜை திருநாள் இன்று கொண்டாடப்படுகிறது.


பிரசித்தி பெற்ற பட்டணப் பிரவேசம் விழா - வெள்ளி நாற்காலி பல்லக்கில் எழுந்தருளினார் தருமபுரம் ஆதீனம்

வெள்ளி நாற்காலி பல்லக்கில் எழுந்தருளிய ஆதீனம் 

இதை முன்னிட்டு தருமபுரம் மேல வீதியில் உள்ள முந்தைய ஆதீனங்களின் குரு மூர்த்தங்களுக்கு தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள், வெள்ளி நாற்காலி பல்லக்கில் எழுந்தருளி பக்தர்கள் சுமந்து செல்ல, மூன்று யானைகள், குதிரை ஆகிய மங்கல சின்னங்கள் முன் செல்ல, ஆதீனத் திருக்கூட்டத்து அடியவர்களுடன் ஊர்வலமாக சென்று வழிபாடு நடத்தினார். பெருவிழாவின் சிகர நிகழ்வாக 11 -ஆம் நாளான நாளை தருமபுரம் ஆதீனகர்த்தரை பக்தர்கள் சிவிகை பல்லக்கில் எழுந்தருளச் செய்து சுமந்து ஆதீனத்தின் நான்கு வீதிகளை சுற்றி வலம் வரும் பட்டிணப்பிரவேசம் நிகழ்வு இரவு 9 மணி அளவிலும், மறுநாள் அதிகாலையில் ஞான கொலு காட்சியும் நடைபெற உள்ளது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

பக்தர்களின் ‘ஓம் சக்தி’ கோஷம்! காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் தங்கத்தேர் உற்சவம்!
பக்தர்களின் ‘ஓம் சக்தி’ கோஷம்! காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் தங்கத்தேர் உற்சவம்!
ஆடி வெள்ளி... அம்மன் அருள் பொங்கும் புனித நாட்கள்! சிறப்புகள் என்ன?
ஆடி வெள்ளி... அம்மன் அருள் பொங்கும் புனித நாட்கள்! சிறப்புகள் என்ன?
மதுரை மீனாட்சியம்மன் கோயில் ஆடி முளைக்கொட்டு திருவிழா: கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்!
மதுரை மீனாட்சியம்மன் கோயில் ஆடி முளைக்கொட்டு திருவிழா: கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்!
அகத்திய முனிவருக்கு சிவன் திருக்கல்யாணக் காட்சி தந்த புனிதத்தலம் எங்கிருக்கு தெரியுங்களா?
அகத்திய முனிவருக்கு சிவன் திருக்கல்யாணக் காட்சி தந்த புனிதத்தலம் எங்கிருக்கு தெரியுங்களா?

வீடியோ

நாகர்கோவில் LOCKUP DEATH உடற்கூராய்வில் அதிர்ச்சி! 3 போலீஸார் அதிரடி கைது!
பட்டப்பகலில் திருட்டு !கல்லாப்பெட்டி சூறையாடல்..மர்ம நபர் கைவரிசை..
+2 மாணவனுக்கு கத்திக்குத்து!சக மாணவர்கள் வெறிச்செயல்..அரசு பள்ளியில் பயங்கரம்
தவணை தொகை கட்ட தாமதம்! அசிங்கபடுத்திய வங்கி ஊழியர்கள்.. விவசாயி தற்கொலை
பெண் நிர்வாகி மீது தாக்குதல் !ஆடையை கிழித்த தவெகவினர்..கோவையில் வெடித்த மோதல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Govt: ”ப்ராஜெக்ட் மேகாலயா” தவெக ஆட்சிக்கு போட்ட ஸ்கெட்ச் - விசாரணையில் பிரபல ஊடகவியலாளர்
”ப்ராஜெக்ட் மேகாலயா” தவெக ஆட்சிக்கு போட்ட ஸ்கெட்ச் - விசாரணையில் பிரபல ஊடகவியலாளர்
DMK vs BJP : பாஜகவிற்கு ஆதரவா.? நாடாளுமன்றத்தில் திமுகவின் நிலை என்ன.? ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை
பாஜகவிற்கு ஆதரவா.? திமுகவின் நிலை என்ன.? ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை
TNPSC: க்ரூப்-1 தேர்வு தேதியை மாற்றி அறிவித்த டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் - எப்போது? எத்தனை பணியிடங்கள்?
க்ரூப்-1 தேர்வு தேதியை மாற்றி அறிவித்த டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் - எப்போது? எத்தனை பணியிடங்கள்?
TN Weather Update: 4 மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும் - சென்னையில் மழை? தமிழக வானிலை எச்சரிக்கை
4 மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும் - சென்னையில் மழை? தமிழக வானிலை எச்சரிக்கை
Ather EL Scooter: ஏதரின் புதிய மலிவு விலை குடும்ப ஸ்கூட்டர், 105KM ரேஞ்ச் - டிவிஎஸ், பஜாஜ் மாடல்கள் தாங்குமா?
ஏதரின் புதிய மலிவு விலை குடும்ப ஸ்கூட்டர், 105KM ரேஞ்ச் - டிவிஎஸ், பஜாஜ் மாடல்கள் தாங்குமா?
Sabarivarman Custodial Death : அரசு வேலையையும், நிவாரணத்தை நிராகரித்த சபரிவர்மன் குடும்பத்தினர்.! திரும்பிய அமைச்சர்கள்- நடந்தது என்ன.?
அரசு வேலையையும், நிவாரணத்தை நிராகரித்த சபரிவர்மன் குடும்பத்தினர்.! திரும்பிய அமைச்சர்கள்- நடந்தது என்ன.?
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
TASMAC shops Liquor : டோட்டலா மாறப்போகுது டாஸ்மாக்.! குவியப்போகுது 54 புதிய வகை சரக்குகள்- மதுப்பிரியர்களுக்கு இனி ஜாலி தான்
டோட்டலா மாறப்போகுது டாஸ்மாக்.! குவியப்போகுது 54 புதிய வகை சரக்குகள்- மதுப்பிரியர்களுக்கு இனி ஜாலி தான்
Embed widget