மேலும் அறிய
Advertisement
மானாமதுரை நாச்சாண்டியம்மன் கோயிலில் விவசாயம் செழிக்க முளைப்பாரி உற்சவ விழா
விழா நாள்களில் நாச்சாண்டி அம்மனுக்கு பூஜைகள், தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டு முளைப்பாரி ஊா்வலம் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை யூனியனுக்குட்பட்ட தெ. புதுக்கோட்டையில் அமைந்துள்ள நாச்சாண்டியம்மன் கோயிலில் தெ.புதுக்கோட்டை மற்றும் கோச்சடை இரண்டு கிராமங்கள் இணைந்து நடத்தும் முளைப்பாரி விழா நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை யூனியனுக்குட்பட்ட தெ. புதுக்கோட்டையில் அமைந்துள்ள நாச்சாண்டியம்மன் கோயிலில் புதுக்கோட்டை மற்றும் கோச்சடை இரண்டு கிராமங்கள் இணைந்து நடத்தும் முளைப்பாரி விழா நடைபெற்றது.
— arunchinna (@arunreporter92) October 5, 2023
Further reports to follow -@abpnadu @LPRABHAKARANPR3 @HariharanSuloc1 @abplive pic.twitter.com/UCBuRpAoeQ
நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி இந்தக் கோயிலில் கடந்த வாரம் 26 ம் தேதி முளைப்பாரி உற்சவ விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி ஏராளமானோா் காப்பு கட்டி விரதம் தொடங்கினா். பெண்கள் கோயிலில் முத்து பரப்பி முளைப்பாரி வளா்த்தனா். விழா நாள்களில் தினமும் இரவு கோயிலில் பெண்கள் கூடி முளைப்பாரி சட்டிகளை சுற்றி வந்து கும்மிப் பாடல்கள் பாடினாா். விழா நாள்களில் நாச்சாண்டி அம்மனுக்கு பூஜைகள், தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டு முளைப்பாரி ஊா்வலம் நடைபெற்றது.
மேலும் மதுரை மாவட்டம் தொடர்பான செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - மதுரை கோரிப்பாளையத்தில் தர்ஹா சந்தனக் கூடு விழா கோலாகலம்; மதவேறுபாடின்றி அனைத்து சமுதாயத்தினரும் பங்கேற்பு
இந்த முளைப்பாரி ஊா்வலத்தில் திரளான பெண்கள் முளைப்பாரி சட்டிகளை தலையில் சுமந்து ஊா்வலம் சென்று மீண்டும் கோயிலை வந்தடைந்து முளைப்பாரி கரைத்தல் நிகழ்வு நடைபெற்றது. ஆண்கள் ஒயிலாட்டம் அடியும் பெண்கள் கும்மி அடித்து முளைப்பாரி சட்டிகளை சுமந்து வயல்வெளிகளை கடந்து சென்று சுமார் 100க்கும் மேற்பட்ட முளைப்பாரிகளை நீா் நிலையில் கரைத்தனா்.
இதுகுறித்து தெ. புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த கோப்பெருந் தேவி கூறுகையில், ”மானாமதுரை பகுதியில் நாச்சாண்டியம்மன் கோயில் பிரசித்து பெற்றது. தெ.புதுக்கோட்டை, கோச்சடை கிராமங்கள் மட்டுமின்றி சுற்றுவட்டார கிராமங்களும் இந்த துடியான தெய்வத்தை வேண்டிக் கொள்கின்றனர். நினைத்த காரியத்தை நிறைவேற்றும். நாங்கள் வீடு கட்ட வேண்டும் என வேண்டியிருந்தோம். அதே போல் நல்லபடியாக வீடு கட்டியதும். வேண்டுதல் நிறைவேற்றதை தொடர்ந்து நாச்சாண்டியம்மனுக்கு முளைப்பாரி எடுத்தோம். இதற்காக விரதம் இருந்து முளைப்பாரிக்கு பயிரிட்டு வளர்த்தோம். முளைப்பாரி அனைவருக்கும் செழிப்பாக வந்திருந்தது. இதனால் ஊர் ஒன்று கூடி முளைப்பாரி ஊர்வலத்தில் கலந்து கொண்டோம். முளைப்பாரி ஊர்வலத்திற்கு முன்னதாக தினமும் இரவில் கும்மி கொட்டும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடர்ந்து பொதுமக்களுக்கு கோயில் சார்பாக பிரசாதங்களும் வழங்கப்பட்டது. கோயில் திருவிழா இந்தாண்டு சிறப்பாக நடைபெற்றது” எனத் தெரிவித்தார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Sivagangai: திருப்பாச்சேத்தியில் வாமனச் சின்னம் பொறித்த நிலதானக்கல் கண்டுபிடிப்பு ; தொல்நடை குழுவிற்கு பாராட்டு
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Crime: பழிக்குப்பழி.. பெங்களூரில் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்ட தி.மு.க. முன்னாள் மண்டலத் தலைவர்.. பகீர் சி.சி.டி.வி.காட்சி..!
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
Calculate The Age Through Age Calculator
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion