மேலும் அறிய

Maha Shivaratri 2026: மகா சிவராத்திரி.. சிவபெருமானுக்கு படைக்கக்கூடாத 5 பொருட்கள்!

2026 மகா சிவராத்திரி வரும் பிப்ரவரி 15ம் தேதி கொண்டாடப்படும் நிலையில் இந்நாளில் இறை வழிபாட்டில் ஈடுபடுபவர்கள் படைக்கக்கூடாத 5 பொருட்கள் பற்றிக் காணலாம்.

சிவபெருமானை வழிபடும் மிக முக்கியமான நாளான மகா சிவராத்திரி வழிபாட்டில் நாம் செய்யக்கூடாத விஷயங்கள் பற்றிக் காணலாம். 

2026 மகா சிவராத்திரி

இந்து மதத்தில் பூஜை வழிபாடு என்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். எந்த பண்டிகை, எத்தகைய விசேஷ நாட்கள் என்றாலும் விரதமிருந்து, வழிபாடு செய்வது என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. இப்படியான நிலையில் மாசி மாதம் பிப்ரவரி 13ம் தேதி பிறக்கிறது. இந்த மாதம் வந்து விட்டாலே நம் அனைவருக்கும் மகா சிவராத்திரி தான் நினைவுக்கு வரும். இத்தகைய நாள் சிவபெருமானுக்குரிய நாளாகும். 

மகா சிவராத்திரி நாளில் மக்கள் இரவு முழுவதும் கண் விழித்து விரதம் இருந்து வழிபடுகிறார்கள். பிரம்மாவுக்கும், விஷ்ணுவுக்கும் இருந்த நான் தான் பெரியவன் என்ற அகந்தையை அழிக்க சிவபெருமான் ஜோதி வடிவில் தோன்றிய நாளாக மகா சிவராத்திரி பார்க்கப்படுகிறது. இன்றைய நாளில் வீட்டிலும், அருகிலுள்ள சிவலாயங்களிலும் நாம் விரதமிருந்து வழிபடலாம். அப்படி செய்வதால் சிவபெருமான் அருள் பெற்று வாழ்க்கையில் இருக்கும் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி மகிழ்ச்சி, செல்வ செழிப்பு ஆகியவை அமையும் என சொல்லப்படுகிறது.  

 

2026ம் ஆண்டு மகா சிவராத்திரி பண்டிகையானது பிப்ரவரி 15ம் தேதி கொண்டாடப்படுகின்றது. அன்று மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை சிவாலயங்களில் 4 கால பூஜை வழிபாடு வெகுவிமரிசையாக நடைபெறும். 

சிவ வழிபாட்டில் படைக்கக்கூடாத பொருட்கள்

சிவபெருமானுக்கு பூஜை வழிபாட்டில் நாம் தாழம்பூ சாற்றக்கூடாது. காரணம் சிவபெருமான் ஜோதி பிழம்பாக தோன்றி தன்னுடைய அடி முடியை கண்டறிபவர் யாரோ அவரே பெரியவன் என விஷ்ணுவையும், பிரம்மாவையும் சோதித்தார். அப்போது தாழம்பூ சிவபெருமானின் தலைமுடியை கண்டதாக பொய் சாட்சியம் அளித்ததால் அது சிவபூஜையில் தடை செய்யப்பட்டுள்ளது. 

அடுத்ததாக லட்சுமி தேவியின் வடிவமாக அறியப்படும் துளசியை நாம் ஒருபோது சிவ வழிபாட்டில் பயன்படுத்தக்கூடாது என கூறப்படுகிறது. விஷ்ணுவுக்கு உகந்தது துளசி என்பதாலும் படைக்கப்படுவதில்லை.

சாஸ்திரத்தின்படி குங்குமப்பூ சிவ வழிபாட்டில் மட்டும் படைக்கக்கூடாது. அதனை பார்வதி தேவியுடன் இருக்கும்போது படைப்பது உகந்தது. இது வாழ்க்கையில்  செல்வத்தையும், ஆரோக்கியத்தையும் பெற்றுத்தரும் என்பது நம்பிக்கையாகும். சங்கு சிவபெருமான் இறை வழிபாட்டில் இடம்பெறுவது முக்கியத்துவம் என்றாலும், மகா சிவராத்திரி நாளில் இரவில் சிவலிங்கத்திற்கு சங்கு நீரை பயன்படுத்து அபிஷேகம் செய்வது அசுபமாக கருதப்படுகிறது. 

சிவனுக்கு அரிசி படைப்பது என்பது மிகப்பெரிய சம்பிராதயமாக பார்க்கப்படுகிறது. மஞ்சள் கலந்த முழு அரிசி படைக்கலாம், அரிசியை சாதமாக்கி படைக்கலாம். அதைவிடுத்து அரிசியை உடைத்து படைக்கக்கூடாது. அதேபோல் நெல் தானியங்களையும் படைக்க வேண்டாம் என சொல்லப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

வளையல்களால் மூழ்கிய வல்லக்கோட்டை அம்மன் சந்நிதி! சிலிர்க்க வைக்கும் ஆடிப்பூரம் வைபவம்! 
வளையல்களால் மூழ்கிய வல்லக்கோட்டை அம்மன் சந்நிதி! சிலிர்க்க வைக்கும் ஆடிப்பூரம் வைபவம்! 
அம்மனை நாடி அலைகடலென திரண்ட பக்தர்கள்! ஏகௌரியம்மன் கோயிலில் ஆடி வெள்ளி சிறப்பு வழிபாடு
அம்மனை நாடி அலைகடலென திரண்ட பக்தர்கள்! ஏகௌரியம்மன் கோயிலில் ஆடி வெள்ளி சிறப்பு வழிபாடு
ஆடிப்பூர வளைகாப்பு உற்சவம்: விழுப்புரம் மாவட்டமே ஆன்மிகக் கடலில் மூழ்கியது!
ஆடிப்பூர வளைகாப்பு உற்சவம்: விழுப்புரம் மாவட்டமே ஆன்மிகக் கடலில் மூழ்கியது!
எமனை வென்ற திருக்கடையூரில் சிலிர்க்க வைத்த ஆன்மீக வைபவம்! என்ன தெரியுமா..?
எமனை வென்ற திருக்கடையூரில் சிலிர்க்க வைத்த ஆன்மீக வைபவம்! என்ன தெரியுமா..?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Embed widget