மேலும் அறிய

Maha Shivaratri 2024: மகா சிவராத்திரியில் தஞ்சை பெரிய கோயிலில் என்னென்ன பூஜைகள் நடக்கும் ?

இந்த ஆண்டு மகா சிவராத்திரி வரும் மார்ச் 8ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நாளில் சிவபெருமானை வழிபடுவதும், சிவலிங்கத்திற்கு பலவிதமான பொருட்களால் அபிஷேகம் செய்வதும் ஒரு பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வருகிறது.

தஞ்சாவூர்: இந்த ஆண்டு மகா சிவராத்திரி வரும் மார்ச் 8ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நாளில் சிவபெருமானை வழிபடுவதும், சிவலிங்கத்திற்கு பலவிதமான பொருட்களால் அபிஷேகம் செய்வதும் ஒரு பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில் உலக பிரசித்தி பெற்ற பெரிய கோயிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தாண்டு ஏற்பாடுகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

மகா சிவராத்திரி நாளில் சிவபெருமானின் ஆசியை பெற பக்தர்கள் கடுமையாக விரதம் இருந்து, இரவு முழுவதும் கண் விழிந்து, சிவனுக்கு மந்திரங்கள், சிவ புராணம் போன்றவற்றை பாராயணம் செய்வர். ஒவ்வொரு மாதமும் சிவராத்திரி வந்தாலும், மாசி மாதம் கிருஷ்ண பட்ச சதுர்த்தசியன்று வரும் சிவராத்திரி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த சிவராத்திரியை மகா சிவராத்திரி என்று அழைப்பர். இந்துக்களால் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் சிவபெருமானுக்குரிய ஒரு விரதம் தான் மகா சிவராத்திரி. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் மகா சிவராத்திரி வரும். மற்ற அனைத்து சிவராத்திரிகளை விடவும், இந்த சிவராத்திரி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

Maha Shivaratri 2024: மகா சிவராத்திரியில் தஞ்சை பெரிய கோயிலில் என்னென்ன  பூஜைகள்  நடக்கும் ?

தஞ்சாவூரில் காவிரியின் தென்கரையில் அமைந்திருக்கும் இந்தக் கோயில், ராஜராஜேச்சரம், பெருவுடையார் கோயில், பிரஹதீஸ்வரர் ஆலயம் என பல பெயர்களில் குறிப்பிடப்படுகிறது. 1003க்கும் 1010ஆம் ஆண்டிற்கும் இடையில் சோழ மன்னனான ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இந்தக் கோயில், திராவிடக் கோயில் கலையின் உன்னதமான சான்றாகக் கருதப்படுகிறது.

கோயிலின் சில பகுதிகள் பிற்காலப் பாண்டியர்கள், விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்டன. முன்தாழ்வாரம், நந்தி மண்டபம், அம்மன் சன்னிதி, சுப்ரமணியர் சன்னிதி போன்ற இந்தப் பகுதிகளைத் தவிர கோயில் மற்ற பகுதிகள் ராஜராஜ சோழன் காலத்திலேயே கட்டப்பட்டவை. இக்கோயிலுக்கு தஞ்சை மட்டுமின்றி பிற மாவட்ட, மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர். இதேபோல் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப்பயணிகள் பெரியகோயிலுக்கு வந்து அதன் கட்டிடக்கலையை கண்டு மகிழ்ந்து செல்கின்றனர்.

இத்தகைய பெருமை வாய்ந்த இக்கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு பெருவுடையாருக்கு பால், சந்தனம், தயிர், எலுமிச்சை சாறு உள்ளிட்ட அபிஷேக பொருட்களைக் கொண்டு அபிஷேகம் நடக்கும். இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்வர்.

மகா சிவராத்திரியை ஒட்டி தஞ்சை பெரிய கோயிலில் காலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடக்கும். தஞ்சை மட்டும் அல்லாது பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்வர். பெருவுடையாருக்கு விபூதி, பால், சந்தனம், தயிர், எலுமிச்சை சாறு, மஞ்சள்  திரவிய பொடி உள்ளிட்ட அபிஷேக பொருட்களைக் கொண்டு பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கும். பின்னர் சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும்.

மகா சிவராத்திரியை முன்னிட்டு பக்கதர்கள் வரிசையில் நின்று தரிசனம் செய்வதற்கு தடுப்புகள் அமைக்கப்படும். பொதுமக்கள் ஒருவழி பாதையாக செல்ல ஏற்பாடு செய்யப்படும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"ரஜினி பத்தி தெரியாது.." ரஜினியை அவமானப்படுத்தினாரா நயன்தாரா ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"ரஜினி பத்தி தெரியாது.." ரஜினியை அவமானப்படுத்தினாரா நயன்தாரா ?
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில்  கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில் கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Embed widget