மேலும் அறிய

Maha Shivaratri 2023: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இன்று மகா சிவராத்திரி பெருவிழா..! குவியும் பக்தர்கள்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இன்று நள்ளிரவு நடைபெறக்கூடிய மகா சிவராத்திரி லிங்கோத்பவர் பூஜையில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி

பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்க கூடியவையாகவும் நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாகவும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் விளங்குகின்றது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறுகின்ற மகா சிவராத்திரி விழா சனி சிறப்புடையதாகும். சிவபெருமானின் அடி முடி காணாத விஷ்ணு,பிரம்மா ஒருமுறை படைப்புக் கடவுளான பிரம்மனும், காக்கும் கடவுளான பெருமாளும் தங்களுள் யார் பெரியவர் என்ற போட்டி நிலவியது.

இருவருக்கும் உண்மையை உணர்த்த சிவபெருமான் அவர்கள் முன்பாகத் தோன்றினார். என்னுடைய அடி அல்லது முடிகளில் ஏதாவது ஒன்றை யார் முதலில் கண்டு திரும்புகிறார்களோ அவரே பெரியவர் என்று கூறினார் சிவபெருமாள்; இருவரும் ஒப்புக்கொண்டனர். மகாவிஷ்ணு, சிவபெருமானின் அடியைக் காண வராக உருவம் எடுத்து பூமியைக் குடைந்து கொண்டு சென்றார்.

Maha Shivaratri 2023: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இன்று மகா சிவராத்திரி பெருவிழா..! குவியும் பக்தர்கள்

பின்னர் பிரம்மதேவன் சிவபெருமானின் முடியைக் காண அன்னப் பறவை வடிவம் எடுத்து மேல்நோக்கி பறந்து சென்றார். வெகு உயரம் சென்ற பிறகும் சிவபெருமானின் முடியைக் காண முடியவில்லை. அப்போது சிவபெருமானின் முடியில் இருந்து விழுந்த தாழம்பூ கீழ் நோக்கி வந்து கொண்டிருந்தபோது தாழம்பூவைக் கண்ட பிரம்மன் அதனிடம் தான் சிவபெருமானின் திருமுடியைக் கண்டதாக சொல்லும்படி கூறினார். அதே சமயம் அடியைக் காண சென்ற பெருமாள் காண முடியாமல் திரும்பி தன்னுடைய தோல்வியை சிவபெருமானிடம் ஒப்புக்கொண்டார்.

பிரம்மனோ தான் முடியைக் கண்டு திரும்பியதாக பொய் தெரிவித்தார் அவருக்கு தாழம்பூ பொய்சாட்சி கூறியது. அனைத்தும் அறிந்த சிவபெருமான் செய்த தவறுக்கு தண்டனையாக பிரம்மதேவருக்கும், தாழம்பூவுக்கும் சாபம் வழங்கியதாக புராணம் கூறுகிறது. பிரம்மனுக்கு பூவுலகில் திருக்கோவில் எதுவும் இருக்காது எனவும் மற்றும் பொய் சாட்சி உரைத்த தாழம்பூவை சிவபூஜையில் இருந்து நீக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்த தாழம்பூ ஆனது ஆண்டுக்கு ஒரு முறை அதாவது சிவ ராத்திரி தினத்தன்று சிவபெருமானின் பூஜையில் வைக்கப்படுகிறது. அதேபோல் முடி காணாத ஜோதிப் பிழம்பாய் எழுந்தருளிய இன்று மகா சிவராத்திரி ஆகும்.

Maha Shivaratri 2023: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இன்று மகா சிவராத்திரி பெருவிழா..! குவியும் பக்தர்கள்

மேலும் நான் எனும் அகந்தை அடங்கினால் மட்டுமே பரம்பொருளை அடைய முடியும் என்பதை உணர்த்த லிங்கோத்பவ மூர்த்தியாக சிவராத்திரி நாளன்று அண்ணாமலையார் எழுந்தருளினார். எனவே சிவராத்திரி எழுந்தருளிய திருத்தலமான திருவண்ணாமலையில் நடைபெறும் சிவராத்திரி விழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். அதன்படி அண்ணாமலையார் கோவிலில் மகா சிவராத்திரி விழா (பிப் 18) இன்று விமர்சியாக கொண்டாடப்படவுள்ளது.

இதனையொட்டி அன்று அதிகாலை 3 மணிக்கு கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். பின்னர் அதிகாலை 5 மணி முதல் மதியம் 12 மணிவரையில் அண்ணாமலையார் சன்னதியில் லட்சார்ச்சனை நடைபெறும். பக்தர்கள் சார்பில் லட்சார்ச்சனை நடைபெறுவது வழக்கம். மேலும் நள்ளிரவு 12மணிக்கு சுவாமி கருவறைக்கு மேற்கு திசையில் அமைந்துள்ள லிங்கோத்பவ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை பூஜைகள் நடைபெறும்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

CP Radhakrishnan: இந்தியாவின் 2ஆம் உயர் பதவி; தமிழ்நாட்டுக்கு கிடைத்த கவுரவம்; குடியரசு துணை தலைவரானார் சி.பி.ராதாகிருஷ்ணன்!
இந்தியாவின் 2ஆம் உயர் பதவி; தமிழ்நாட்டுக்கு கிடைத்த கவுரவம்; குடியரசு துணை தலைவரானார் சி.பி.ராதாகிருஷ்ணன்!
TVK Vijay Campaign: “வேட்டை ஆரம்பமாகுது டோய்.!“ - திருச்சியில் விஜய் பிரசாரத்திற்கு நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி
“வேட்டை ஆரம்பமாகுது டோய்.!“ - திருச்சியில் விஜய் பிரசாரத்திற்கு நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி
Sengottaiyan: அமித் ஷா, நிர்மலாவை சந்தித்து திரும்பிய செங்கோட்டையன்; அதிமுகவில் எகிறும் பரபரப்பு
அமித் ஷா, நிர்மலாவை சந்தித்து திரும்பிய செங்கோட்டையன்; அதிமுகவில் எகிறும் பரபரப்பு
CM Stalin: “தேர்தல்னு வந்துட்டா தி.மு.க.காரங்களை அடிச்சிக்க ஆளே இல்ல” - முதலமைச்சர் ஸ்டாலினின் ட்வீட் என்ன.?
“தேர்தல்னு வந்துட்டா தி.மு.க.காரங்களை அடிச்சிக்க ஆளே இல்ல” - முதலமைச்சர் ஸ்டாலினின் ட்வீட் என்ன.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kajal Agarwal : காஜல் அகர்வால் மரணம்?ஷாக்கில் ரசிகர்கள் உண்மை பின்னணி!
மல்லை சத்யா நிரந்தர நீக்கம்! ”ரொம்ப தப்பு பண்ணிட்ட” தூக்கியடித்த வைகோ
ஏர்போர்ட் மூர்த்தி கைது! இரவோடு இரவாக தூக்கிய POLICE! DGP அலுவலகம் முன் கைகலப்பு
செங்கோட்டையன் டெல்லி விசிட்! பாஜகவினருடன் முக்கிய MEETING? அடுத்த ப்ளான் என்ன?
Sexual Harassment | மாணவிக்கு பாலியல் சீண்டல் சிக்கிய தலைமை ஆசிரியர்! பணியிடை நீக்கம் செய்து அதிரடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CP Radhakrishnan: இந்தியாவின் 2ஆம் உயர் பதவி; தமிழ்நாட்டுக்கு கிடைத்த கவுரவம்; குடியரசு துணை தலைவரானார் சி.பி.ராதாகிருஷ்ணன்!
இந்தியாவின் 2ஆம் உயர் பதவி; தமிழ்நாட்டுக்கு கிடைத்த கவுரவம்; குடியரசு துணை தலைவரானார் சி.பி.ராதாகிருஷ்ணன்!
TVK Vijay Campaign: “வேட்டை ஆரம்பமாகுது டோய்.!“ - திருச்சியில் விஜய் பிரசாரத்திற்கு நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி
“வேட்டை ஆரம்பமாகுது டோய்.!“ - திருச்சியில் விஜய் பிரசாரத்திற்கு நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி
Sengottaiyan: அமித் ஷா, நிர்மலாவை சந்தித்து திரும்பிய செங்கோட்டையன்; அதிமுகவில் எகிறும் பரபரப்பு
அமித் ஷா, நிர்மலாவை சந்தித்து திரும்பிய செங்கோட்டையன்; அதிமுகவில் எகிறும் பரபரப்பு
CM Stalin: “தேர்தல்னு வந்துட்டா தி.மு.க.காரங்களை அடிச்சிக்க ஆளே இல்ல” - முதலமைச்சர் ஸ்டாலினின் ட்வீட் என்ன.?
“தேர்தல்னு வந்துட்டா தி.மு.க.காரங்களை அடிச்சிக்க ஆளே இல்ல” - முதலமைச்சர் ஸ்டாலினின் ட்வீட் என்ன.?
TVK Vijay: 13ம் தேதி முதல் மக்களைச் சந்திக்கும் விஜய்! எந்த தேதியில் எங்கே செல்கிறார்? முழு தகவல் உள்ளே
TVK Vijay: 13ம் தேதி முதல் மக்களைச் சந்திக்கும் விஜய்! எந்த தேதியில் எங்கே செல்கிறார்? முழு தகவல் உள்ளே
DIP, DNT மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பம்! கடைசி தேதி நெருங்குது! உடனே விண்ணப்பிங்க!
DIP, DNT மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பம்! கடைசி தேதி நெருங்குது! உடனே விண்ணப்பிங்க!
Chennai Power Cut: சென்னையில் நாளை செப்டம்பர் 10-ம் தேதி எங்கெல்லாம் பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.?
சென்னையில் நாளை செப்டம்பர் 10-ம் தேதி எங்கெல்லாம் பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.?
CAT 2025: கேட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் சில நாட்கள்தான்.. கட்டணம், தேர்வு தேதி, விண்ணப்ப விவரம்!
CAT 2025: கேட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் சில நாட்கள்தான்.. கட்டணம், தேர்வு தேதி, விண்ணப்ப விவரம்!
Embed widget