Maha Shivaratri 2023 : நலம் தரும் மகா சிவராத்திரி; நீலகண்டன் அருளின் மகிமை; எப்போது? கூடுதல் தகவல்கள்!
Maha Shivaratri 2023 Date : இந்தாண்டு சிவராத்திரி எப்போது, விரதம் எப்போது தொடங்குகிறது உள்ளிட்ட தகவல்களை இங்கே காணலாம்.
பொங்கிவந்த ஆல்கால விஷத்தினால் மக்கள் யாரும் பாதிக்கக்கூடாது என்று எண்ணிய சிவபெருமான், பாற்கடலிலிருந்து பொங்கிய ஆலகால விஷத்தினைத் தனது கழுத்தில் தாங்கி நீலகண்டனாக நின்றது சிவராத்திரி நாளன்றுதான்.. இப்படி மகா சிவராத்திரி தினத்திற்கு பல்வேறு கதைகளை புராணங்கள் கூறுகின்றன.
உலகம் நிலைப்பெற ஆதி காரணமாக இருக்கக் கூடிய சிவபெருமானுக்குரிய விரதங்களிலேயே தலைசிறந்தது சிவ ராத்திரி விரதம்...
எட்டுணையும் உளத்து அன்பிலேரேனும் உளரேனும் இந்நாள் எம்மை கண்டவர் நோற்றவர் பூஜை பண்ணினர் நற்கதி அடைவைர்’ - என்று சிவபெருமான் அருளியதாக வரதபண்டிதம் என்ற நூல் தெரிவிக்கிறது.
மகா சிவ ராத்திரி அன்று இரவு முழுவதும் கண் விழித்து ஈசன் சிவபெருமானை வழிபடுவதன் மூலம் அவரின் பரிபூரண அருளைப் பெற முடியும் என்பது இதிகாசங்களின் படி ஐதீகமாக சொல்லப்படுகிறது. இது தொடர்பான குறிப்புகள் திருவிளையாடல் புராணம், கருட புராணம், கந்த புராணம், பத்ம புராணம், அக்னி புராணம் உள்ளிட்ட பல்வேறு புராண நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மகா சிவ ராத்திரி எப்போது?
இந்தாண்டு புகழ்பெற்ற மகா சிவராத்திரி வரும் 18 ஆம் தேதி (பிப்ரவரி, 18,2023) கொண்டாடப்பட உள்ளது.
மகா சிவராத்திரி நாளன்று இரவு முழுவதும் சிவாலயங்களில் நடை திறந்திருக்கும். விடிய விடிய சிறப்பு பூஜைகள் நடைபெறும். இன்றைய தினத்தில் கண் விழித்து விரதம் இருப்பதும், சிவதரிசனம் செய்வது, அன்னதானம் செய்வது மிகுந்த புண்ணியங்களைத் தரும் என்று நம்பப்படுகிறது.
மகா சிவராத்திரி விரத நேரம்:
சிவராத்தி தினத்தன்று முழுவதும் விரதம் இருப்பது பல்வேறு நன்மைகளைத் தேடி தரும் என்று கூறப்படுகிறது.
தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் சிறப்பான நாளாக அமையும். அதன் அடிப்படையில், மாசி மாதத்தில் பௌர்ணமியுடன் கூடிய நாள் மஹாசிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை அனைத்து மாவட்டங்களிலும் இந்த மஹாசிவராத்திரி கொண்டாடப்பட்டு வந்தாலும், கோவையில் உள்ள ஈஷா மஹாசிவராத்திரிதான் கடந்த சில ஆண்டுகளாக அதிக முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.
நாம் சொன்னபடி நம் மனது கேட்கும். அதற்காகத் தான் விரதமே. அவ்வாறு கேட்கும் மனதை இறைவனிடத்தில் செலுத்தி, அவனோடு சிந்தையில் இரண்டறக் கலந்து நிற்க வேண்டும். மறுநாள் காலை குளித்து பூஜைகள் செய்து, மீண்டும் சிவாலயங்கள் சென்று விரதத்தை முடித்துக்கொள்ளலாம்.
புராணங்களில் சிவ ராத்திரி ஐந்து வகையாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அவை மகா சிவாரத்திரி. யோக சிவராத்திரி, நித்திய சிவராத்திரி, மாத சிவராத்திரி .
மகா சிவராரத்திரி
மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தி நாளே மகா சிவராத்தி எனப்படுகிறது. இதற்கு வருஷ சிவராத்திரி என்ற பெயரும் உண்டு.
யோக சிவராத்திரி
இந்த யோக சிவராத்திரியன்று விரதம் இருந்தாலும் அதகு மூன்று கோடி சிவராத்திரி விரதம் இருந்த பலன் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.
நித்திய சிவராத்திரி
ஆண்டின் பன்னிரண்டு மாதங்களிலும் வரும் தேய்பிறை- வளர்பிறைகளின் சதுர்த்தசி திதி வரும் 24 நாட்களும் நித்திய சிவராத்திரி என்று கூறப்படுகிறது.
பட்ச சிவராத்திரி
தை மாதம் தேய்பிறை பிரதமையன்று தொடங்கி பதிமூன்று நாட்கள் தினந்தோறும் முறைப்படி ஒரு வேளை உணவு உண்டு 14 ஆம் நாளில் சதுர்த்தசி திதியன்று முறைப்படி விரதம் இருப்பது பட்ச சிவராத்திரி எனப்படும்.
மாத சிவராத்திரி
பெரும்பாலான சிவராத்திரிகள், அமாவாசை அல்லது சதுத்தசியை அனுசரித்து வரும். ஆனால், இது மாத்தத்தின் மற்ற திதி நாட்களில் வருவதாகும்.
வாழ்த்துக்கள்:
- உங்களது அனைத்து வேண்டுதல்களையும் ஈசன் கேட்டு பூர்த்தி செய்து ஆசீர்வதிக்க மஹா சிவராத்திரி வாழ்த்துக்கள்
- வளம், நலம், மகிழ்ச்சி சூழ்ந்து வாழ மஹா சிவராத்திரி வாழ்த்துகள்
இன்று காலை உங்கள் வாழ்க்கையில் சாதகமான மாற்றத்தைக் கொண்டு வரட்டும். முழு பக்தியுடன் நாள் கொண்டாடுங்கள். உங்களுக்கு மகாசிவராத்திரி வாழ்த்துக்கள். - இனிய மகா சிவராத்திரி வாழ்த்துக்கள்! கடவுள் உங்கள் அனைவரையும் ஆசிர்வதிப்பார். மேலும் நிறைய மகிழ்ச்சிகள் உங்களை தேடிவர வாழ்த்துக்கள். ஓம் நமசிவாய...!
- சிவபெருமான் உங்கள் வாழ்க்கையில் நல்ல அதிர்ஷ்டத்தைக் கொண்டு வருவார். மகா சிவராத்திரி வாழ்த்துக்கள்!