மேலும் அறிய

Thaipoosam: வேண்டியதை நிறைவேற்றும் தைப்பூசம் விரதம்.. வீட்டில் முருகனை வழிபடுவது எப்படி?

தைப்பூசம் நன்னாளில் முருகனின் அறுபடை வீடுகளுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டில் வழிபட்டு அருகே இருக்கும் முருகன் கோயிலுக்கு செல்லலாம் என சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்து மதத்தைப் பொறுத்தவரை ஏராளமான வழிபாட்டு கடவுள்கள் உள்ளது. ஒவ்வொரு கடவுளுக்கும் ஏதேனும் ஒரு நாள் விசேஷமாக கருதப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் வரும் வளர்பிறை, தேய்பிறை திதிகள் தொடங்கி, வாரத்தில் ஒரு நாள் வரை கடவுளுக்கென அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. 

அந்த வகையில் தமிழ் கடவுள் முருகப்பெருமானுக்கு ஒவ்வொரு மாதமும் ஏதேனும் ஒரு விசேஷம் வரும். அந்த வகையில் தை மாதத்தில் வரும் தைப்பூசம் மிகவும் பிரசித்தி பெற்றது. முருகப் பெருமானின் அருளை பெற, வேண்டிய விஷயங்கள் இனிதே நடந்தேற இந்நாளில் விரதமிருந்து வழிபட்டால் பலன்கள் கிடைக்கும் என நம்பப்படுகிறது. இப்படியான தைப்பூசம் 2026ம் ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி கொண்டாடப்படுகிறது. முருகனின் அறுபடை வீடுகளில் தைப்பூசம் பழனியில் தான் வெகு சிறப்பாக நடைபெறும். 

இந்த நன்னாளில் முருகனின் அறுபடை வீடுகளுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டில் வழிபட்டு அருகே இருக்கும் முருகன் கோயிலுக்கு செல்லலாம் என சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த தைப்பூச நாளில் பௌர்ணமி திதியானது பிப்ரவரி 1ம் தேதி காலை 4.41 மணிக்கு தொடங்கி பிப்ரவரி 2ம் தேதி காலை 4.43 மணி வரை இருக்கும். அதேபோல் பூசம் திதி அதிகாலை 1.54 மணிக்கு தொடங்கி பிப்ரவரி 3ம் தேதி அதிகாலை 1.01 மணி வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அன்றைய நாள் முழுவதும் இரு திதிகளும் இருப்பதால் நாள் முழுக்க எப்போது வேண்டுமானாலும் முருகப்பெருமானை வழிபடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வீட்டில் வழிபடுவது எப்படி?

தைப்பூசம் நாளில் அதிகாலையில் எழுந்து புனித நீராட வேண்டும். புதிய அல்லது சுத்தமான ஆடைகளை அணிய வேண்டும். நேராக பூஜையறை சென்று அங்கு நெற்றியில் விபூதி பட்டையிட்டு முருகப்பெருமானை வணங்கி விரதத்தை தொடங்கலாம். விரதம் இருக்க முடியாதவர்கள் முருகனுக்குரிய பொருட்களை எல்லாம் படைத்து விளக்கேற்றி வழிபடலாம். வீட்டில் முருகன் படம், சிலை, வேல் ஆகியவை வைத்து வழிபடலாம். அதேபோல் முருகனுக்குரிய பூக்களான செவ்வரளி, செவ்வந்தி, துளசி ஆகியவை படைக்கலாம். நைவேத்தியமாக தேன், திணை மாவு போன்றவை படையலிடலாம். விரதமிருப்பவர்கள் இருவேளை உணவு எடுத்துக் கொள்ளாமல் நோன்பை தொடரலாம்.

மாலையில் வீட்டில் விரதம் முடிக்கும்போது முருகனுக்கு தீபம், தூபம் காட்டி வழிபட வேண்டும். நைவேத்தியமாக வைத்திருக்கும் உணவை சாப்பிட்டு விரதம் முடிக்கலாம். பின்னர் வீட்டின் அருகில் இருக்கும் ஏதேனும் ஒரு முருகன் கோயில் அல்லது முருகன் சன்னதிக்கு சென்று அங்கு அபிஷேகத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுக்கலாம். குறைந்தப்பட்சம் பால், சந்தனம் வழங்கலாம்.

வீட்டில் வழிபடும்போது முருகன் படம் முன் ஷட்கோண கோலமிட்டு அதில் ஆறு நெய் தீபம் ஏற்றி வழிபடலாம். அப்போது முருகனுக்குரிய மந்திரம், கந்த சஷ்டி கவசம் போன்றவற்றை பாராயணம் செய்யலாம்.

தலைப்பு செய்திகள்

ஆடி பரணி,ஆடி கிருத்திகை இணைந்து வந்த அபூர்வ நாள்! வல்லக்கோட்டையில் விமரிசையான பாலாபிஷேகம்!
ஆடி பரணி,ஆடி கிருத்திகை இணைந்து வந்த அபூர்வ நாள்! வல்லக்கோட்டையில் விமரிசையான பாலாபிஷேகம்!
வளர்பிறையில் உயரும்... தேய்பிறையில் குறையும் அதிசய கிணறு: எங்கு உள்ளது தெரியுங்களா?
வளர்பிறையில் உயரும்... தேய்பிறையில் குறையும் அதிசய கிணறு: எங்கு உள்ளது தெரியுங்களா?
ஆடி பரணியும் கிருத்திகையும் ஒரே நாளில்! வல்லக்கோட்டை கோயிலில் காத்திருக்கும் பேரதிசயம்!
ஆடி பரணியும் கிருத்திகையும் ஒரே நாளில்! வல்லக்கோட்டை கோயிலில் காத்திருக்கும் பேரதிசயம்!
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
Gold and silver rate today : சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
TN Govt Debt: தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
Ration Card : ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
Sheikh Hasina: இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
Ather Konarc Electric Scooter: 120KM ரேஞ்ச்..! குடும்பங்களுக்கான ஏதரின் புதிய மின்சார ஸ்கூட்டர் - பட்ஜெட், அம்சங்கள், வசதிகள் எப்படி?
120KM ரேஞ்ச்..! குடும்பங்களுக்கான ஏதரின் புதிய மின்சார ஸ்கூட்டர் - பட்ஜெட், அம்சங்கள், வசதிகள் எப்படி?
Embed widget