மேலும் அறிய
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
மீனாட்சியம்மன் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா: பொற்றாமரை குளத்தில் லட்ச தீபம்
கோயிலில் லட்சதீபம் ஏற்றப்பட்டதை தொடர்ந்து கோயில் வளாகம் முழுவதும் அகல் விளக்குகளால் ஜொலித்தது.
![மீனாட்சியம்மன் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா: பொற்றாமரை குளத்தில் லட்ச தீபம் Lakshadweep at Pottamarai Pond Karthigai Deepam Festival at Meenakshiyamman Temple TNN மீனாட்சியம்மன் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா: பொற்றாமரை குளத்தில் லட்ச தீபம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/07/648f3ec6e6f15f234a7296e00e6967db1670391014592184_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
விளக்கொளியில் ஜொலிக்கும் மீனாட்சியம்மன் கோயில்
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலுக்கு, உள்ளூர், வெளியூர், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். மதுரையின் பல நூற்றாண்டு கால அடையாளமாகவும், மதுரையின் நடுவிலும் மிகப் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. இந்நிலையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் திருக்கார்த்திகையை முன்னிட்டு கோயிலில் லட்சதீபம் ஏற்றப்பட்டதை தொடர்ந்து கோயில் வளாகம் முழுவதும் அகல் விளக்குகளால் ஜொலித்தது.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் லட்சம் தீபம் !#madurai | #மீனாட்சியம்மன் pic.twitter.com/t1YevNn33Q
— arunchinna (@arunreporter92) December 7, 2022
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கார்த்திகை உற்சவ விழா டிசம்பர் 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து தினமும் காலை , மாலை வேளைகளில் மீனாட்சி அம்மன் - சுந்தரேசுவரர், பஞ்சமூர்த்திகள் கோயில் வளாகத்தில் உள்ள ஆடி வீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
![மீனாட்சியம்மன் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா: பொற்றாமரை குளத்தில் லட்ச தீபம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/07/ca39b301c200c7b05cfee837d8786bf41670390791759184_original.jpeg)
திருக்கார்த்திகையை முன்னிட்டு நேற்று மீனாட்சியம்மன் கோயில் பொற்றாமரைகுளம், அம்மன் சன்னதி, சுவாமி சன்னதி, உள்பிரகாரங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் லட்ச தீபம் ஏற்றப்பட்டது. இந்த பணியில் கோயில் பணியாளர்கள், பக்த சபையினர் மற்றும் பக்தர்கள் என ஏராளமானோர் பங்கேற்று லட்ச தீபங்களை ஏற்றினர். இதனால் கோயில் வளாகம் முழுவதும் விளக்கொளியில் ஜொலித்தது.
![மீனாட்சியம்மன் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா: பொற்றாமரை குளத்தில் லட்ச தீபம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/07/6097a31b80b317e919ea87684c2f77ec1670390850985184_original.jpeg)
மீனாட்சி-சுந்தரேசுவர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தனர். தொடர்ந்து பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பாடாகி கிழக்கு சித்திரை வீதியில் அம்மன் சன்னதி, சுவாமி சன்னதி முன்பு எழுந்தருளுவார்கள். அங்கு சொக்கப்பனை தீபம் ஏற்றப்பட்டது. இதே போன்று மீனாட்சி அம்மன் கோயிலின் உப கோயில்களான தெப்பக்குளம் மாரியம்மன், முக்தீஸ்வரர் கோயில், செல்லூர் திருவாப்புடையார் கோயில், சிம்மக்கல் ஆதிசொக்கநாதர் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் கார்த்திகை தீப ஏற்றி திராளான பக்தர்கள் வழிபட்டனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - மதுரை அரிட்டாபட்டியில் மரக்கன்றுகள் நட்டு அரசுக்கு நன்றி தெரிவித்த சமூக ஆர்வலர்கள்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Khelo khul ke, sab bhool ke - only on Games Live
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தேர்தல் 2024
கல்வி
வணிகம்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion