மேலும் அறிய

குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா; கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடக்கம்

கங்கையில் நீராடி காசி விசுவநாதரையும் விசாலாட்சியையும் வழிபட்ட பயன் வங்கக்கடலில் நீராடி முத்தாரம்மனையும் ஞானமூர்த்தீஸ்வரரையும் வழிபட்டால் கிடைக்கும் என்பது ஐதீகம்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலங்களில் குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோயிலும் ஒன்று. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரிலிருந்து கன்னியாகுமரி செல்லும் சாலையில் 13 கி.மீ தொலைவில் உள்ளது குலசை. இத்திருக்கோயிலில் ஒரே பீடத்தில் சுவாமி ஞானமூர்த்தீஸ்வரரும் அம்பிகை முத்தாரம்மனும் அருள்பாலிக்கிறார்கள் இந்தியாவிலேயே மைசூருக்கு அடுத்தபடியாக தசரா திருவிழாவானது மிகச்சிறப்பாக தூத்துக்குடி மாவட்டம் குலசையில்தான் கொண்டாடப்பட்டு வருகின்றது. விழா நாட்களில் தினமும் இரவு 8.30 மணிக்கு அம்மன் பல்வேறு வேடங்களில், பல்வேறு திருக்கோலங்களில் எழுந்தருளி உள்பிரகார பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

குலசேகரபட்டினம்  முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா; கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடக்கம்

உலகப் புகழ்பெற்ற தசரா திருவிழா மைசூருக்கு அடுத்து தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயிலில் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் நவராத்திரி தினத்தை முன்னிட்டு கொண்டாடப்படும் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு காலை 5:30 மணிக்கு யானை மீது கொடி பட்டம் ஊர்வலம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது . தொடர்ந்து காலை 9 மணிக்கு  மேல் கொடி மரத்துக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து காலை 09.45 மணிக்கு தசரா திருவிழா பக்தர்கள் முன்னிலையில் கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. தொடர்ந்து கொடி மரத்துக்கு மகாதீராதனையும் நடைபெற்றது.  

குலசேகரபட்டினம்  முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா; கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடக்கம்

தசரா முதல் நாளான இன்று  துர்க்கை அலங்காரத்திலும், 2-வது நாள்   விசுவகாமேஷ்வரர் அலங்காரத்திலும், 3-வது நாள் பார்வதி அலங்காரத்திலும், 4-வது நாள் பாலசுப்பிரமணியர் அலங்காரத்திலும், 5-வது நாள் நவநீதகிருஷ்ணன் அலங்காரத்திலும், 6-வது நாள் மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்திலும், 7-வது நாள் ஆனந்த நடராசர் அலங்காரத்திலும், 8-வது நாள் அலைமகள் அலங்காரத்திலும், 9-வது நாள் கலைமகள் அலங்காரத்திலும் காட்சியளித்து, திருச்சப்பரத்தில் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடக்கும். 10-வது நாள் அம்பிகை மகிஷாசுரமர்த்தினி திருக்கோலத்தில் எழுந்தருள, தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகிஷா சூரசம்காரம் வரும் அக்டோபர் 05-ம் தேதி நள்ளிரவில் கோயில் கடற்கரையில் நடைபெறுகிறது. பத்து நாட்கள்  நடைபெறும் திருவிழாவில் நாள்தோறும் இரவில் அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 

குலசேகரபட்டினம்  முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா; கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடக்கம்

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தசரா திருவிழாவில்  பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலில் குவிந்து சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து மாலை அணிந்து விரதம் இருக்க கூடிய பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் காப்பு வழங்கப்பட்டது.

குலசேகரபட்டினம்  முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா; கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடக்கம்

பத்து நாட்கள் வெகு  விமரிசையாக நடைபெறும் தசரா திருவிழாவில் காப்பு அணிந்த பக்தர்கள் ராஜா வேடம், காளி வேடம்,  அம்மன் வேடம், ஆஞ்சநேயர் வேடம் மற்றும் பெண் வேடம் உள்ளிட்ட பல்வேறு விதமான வேடங்கள் அணிந்து பல்வேறு பகுதிகளுக்கும் சென்று காணிக்கை பெற்று அதனை மகிஷாசூரசம்காரம் நடைபெறக்கூடிய பத்தாம் திருநாளில் கோயில் உண்டியலில் காணிக்கையாக செலுத்தி தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றுவார்கள். மேலும், மாலை அணிந்த பக்தர்கள் அவர்களது ஊரில் தசரா குடில் அமைத்து அதில் தங்கி விரதம் இருப்பார்கள். இவ்வாறு விரதம் இருக்கும் பக்தர்கள் ஒருவேளை மதியம் மட்டுமே பச்சரிசி சாதம் உணவு சாப்பிடுவார்கள். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பக்தர்கள் அனுமதியுடன் தசரா திருவிழா நடைபெறுவதால் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், சிறப்பு பேருந்து வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள்  மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Update: 13 மாவட்டங்களில் கனமழை - இன்று எங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை? முழு லிஸ்ட் இதோ..!
TN Rain Update: 13 மாவட்டங்களில் கனமழை - இன்று எங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை? முழு லிஸ்ட் இதோ..!
TNPSC Group 2 Result: அடி தூள்.. 57 நாட்களில் வெளியான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள்- காண்பது எப்படி?
TNPSC Group 2 Result: அடி தூள்.. 57 நாட்களில் வெளியான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள்- காண்பது எப்படி?
TN Rain Alert: டிச.15 புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி; நாளை 16 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு; வானிலை முக்கிய அலர்ட்!
TN Rain Alert: டிச.15 புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி; நாளை 16 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு; வானிலை முக்கிய அலர்ட்!
Coolie : ரஜினிகாந்த் பிறந்தநாள் ஸ்பெஷல்...  கூலி குட்டி டீசர் வெளியிட்ட படக்குழு
Coolie : ரஜினிகாந்த் பிறந்தநாள் ஸ்பெஷல்... கூலி குட்டி டீசர் வெளியிட்ட படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK Survey On TVK : ‘’விஜய் தான் பெரிய MINUS’’.. DMK எடுத்த சீக்ரெட் சர்வே! வெளியான மெகா ட்விஸ்ட்TVK Vijay : ”2026-ல் விஜய் முதலமைச்சர்! என்.டி.ஆர் பாணியில் வெற்றி” வெளியான மெகா சர்வே!Trichy Suriya on Annamalai | Bussy Anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Update: 13 மாவட்டங்களில் கனமழை - இன்று எங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை? முழு லிஸ்ட் இதோ..!
TN Rain Update: 13 மாவட்டங்களில் கனமழை - இன்று எங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை? முழு லிஸ்ட் இதோ..!
TNPSC Group 2 Result: அடி தூள்.. 57 நாட்களில் வெளியான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள்- காண்பது எப்படி?
TNPSC Group 2 Result: அடி தூள்.. 57 நாட்களில் வெளியான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள்- காண்பது எப்படி?
TN Rain Alert: டிச.15 புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி; நாளை 16 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு; வானிலை முக்கிய அலர்ட்!
TN Rain Alert: டிச.15 புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி; நாளை 16 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு; வானிலை முக்கிய அலர்ட்!
Coolie : ரஜினிகாந்த் பிறந்தநாள் ஸ்பெஷல்...  கூலி குட்டி டீசர் வெளியிட்ட படக்குழு
Coolie : ரஜினிகாந்த் பிறந்தநாள் ஸ்பெஷல்... கூலி குட்டி டீசர் வெளியிட்ட படக்குழு
CBSE CTET Admit Card: சிபிஎஸ்இ சிடெட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு; பெறுவது எப்படி?
CBSE CTET Admit Card: சிபிஎஸ்இ சிடெட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு; பெறுவது எப்படி?
Seeman: விமானத்தில் சிக்கிய சீமான்; கனமழையால் தரையிறங்க முடியாமல் விமானம் தவிப்பு.!
Seeman: விமானத்தில் சிக்கிய சீமான்; கனமழையால் தரையிறங்க முடியாமல் விமானம் தவிப்பு.!
Poondi Dam: சென்னைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை... அபாய கட்டத்தை நெருங்கிய பூண்டி நீர்த்தேக்கம்.. திறந்துவிடப்பட்ட நீர்...!
சென்னைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை... அபாய கட்டத்தை நெருங்கிய பூண்டி நீர்த்தேக்கம்.. திறந்துவிடப்பட்ட நீர்...!
One Nation One Election: வரப்போகும் மாற்றம்; மாநிலங்கள் என்னவாகும்? ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்!
One Nation One Election: வரப்போகும் மாற்றம்; மாநிலங்கள் என்னவாகும்? ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்!
Embed widget