மேலும் அறிய

Koovagam Festival 2025: உலகப் புகழ் பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழா கோலாகல தொடக்கம்

உலகப்புகழ் பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா இன்று சாகை வார்த்தால் மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கள்ளக்குறிச்சி: உலகப்புகழ் பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா இன்று சாகை வார்த்தால் மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏழு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வீடுகளில் வந்த குழு கூடங்களை படையல் செய்து கூழ்கள் பக்தர்களுக்கு வழங்கினர்.
 
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கிராமத்தில் உலக பிரசித்தி பெற்ற அருள்மிகு கூத்தாண்டவர் திருக்கோவில் உள்ளது. திருநங்கைகள் தங்கள் கணவராக பாவித்து கொண்டு ஆண்டுதோறும் கொண்டாடும் கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா இன்று சாகைபார்த்தல் மற்றும் கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இதில் கூவாகம் நத்தம் சிவாலயாங்குளம் வேலூர் உட்பட ஏழு கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் தங்களது வீடுகளில் படையல் செய்து ஊர்வலமாக கொண்டு வந்த கூழ்குடங்களை கூத்தாண்டவர் கோவில் முன்பாக வைத்து சிறப்பு பூஜை செய்தனர். தொடர்ந்து பக்தர்கள் கொண்டு வந்திருந்த கூழ் பொது மக்களுக்கு  வழங்கப்பட்டது. இதில் கூவாகம் நத்தம் உள்ளிட்ட ஏழு கிராமங்கள் மட்டுமின்றி உளுந்தூர்பேட்டையை சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
 
மகாபாரதப் போரில் கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் போர் கொண்ட போது பாண்டவர்கள் வெற்றி பெற வேண்டுமென்றால் 32 சாமுத்திரிகா லட்சணம் பொருந்திய ஆண் மகனை பலி கொடுக்க வேண்டும் அதற்கு கிருஷ்ணனையும் அர்ஜுனனையும் பலி கொடுக்க முடியாத நிலையில் அதற்கு மூன்றாவது நபராக அரவணை தேர்ந்தெடுக்கின்றனர். இதற்காக அரவணை சந்தித்து கேட்டபோது தான் பலியாக ஒப்புக்கொண்ட அரவான் அதற்கு முதல் நாள் தனக்கு திருமணம் செய்து திருமண வாழ்க்கையை தான் அனுபவிக்க வேண்டும் என்ற நிபந்தனையை விடுக்கிறார். இடிந்தால் பலியாகப் போகும் ஒருவரை மணக்க எந்த பெண்ணும் முன் வராத நிலையில் கிருஷ்ண பரமாத்மா மோகினி அவதாரம் எடுத்து பெண்ணாக உருமாறுகிறார். தொடர்ந்து அரவணை திருமணம் செய்து கொண்டு இரவு முழுவதும் ஒரு பெண் கொடுக்கும் அனைத்து சுகத்தையும் மோகினி அரவனுக்கு கொடுத்த நிலையில் மறுநாள் காலை அரவான் பலி கொடுக்கிறார்.
 
இதுவே கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழாவின் வரலாறு. அதனால் கூவாகம் கூத்தாண்டவர் தங்கள் கணவராக பாவித்துக்கொண்டு ஒவ்வொரு ஆண்டும் டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள திருநங்கைகள் கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழாவிற்கு வருவார்கள். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருநங்கைகளுக்கு தாலி கட்டிடும் நிகழ்ச்சி வருகின்ற 13ஆம் தேதி இரவு நடக்கிறது. இந்த திருவிழாவில் தான் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் திருநங்கைகள் கோவில் முன்பாக பூசாரிகள் கையால் தாலி கட்டிக் கொண்டு தங்களை மணப்பெண்கள் போல் அலங்கரித்துக் கொண்டு அரவணை தங்கள் கணவராக பாவித்து கொண்டு கும்மியடித்து விடிய விடிய ஆட்டம் ஆடி பாட்டு பாடி மகிழ்வார்கள். மறுநாள் 14ஆம் தேதி காலை தேரோட்டம் நடைபெற உள்ளது.
 
இதில் உளுந்தூர்பேட்டை மட்டும் இன்றி பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள். பக்தர்களின் வசதிக்காக சென்னை, திருச்சி, சேலம் உட்பட தமிழகத்தின் பல்வேறு பெருநகரங்களில் இருந்து கூவாகம் கிராமத்திற்கு சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. அதேபோல் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட மாவட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர் குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட வசதிகளை ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

திருவையாறில் அப்பர் கயிலைக் காட்சி விழா: பக்தர்கள் வெள்ளத்தில் திளைத்த ஐயாறப்பர் திருத்தலம்
திருவையாறில் அப்பர் கயிலைக் காட்சி விழா: பக்தர்கள் வெள்ளத்தில் திளைத்த ஐயாறப்பர் திருத்தலம்
"அங்காளம்மா தாயே... அருள் புரிவாயே!" - ஆடி அமாவாசை ஊஞ்சல் உற்சவம்... மேல்மலையனூரில் விண்ணதிர முழங்கிய பக்தி கோஷம்!
"காசியை விட புனிதம்" - ஆனால் சொட்டு நீர் இல்லை... மயிலாடுதுறை துலா கட்டத்தில் சோகமான ஆடி அமாவாசை!
முன்னோர்களை நினைத்து வழிபடும் புனித நாள்... ஆடி அமாவாசை: திருவையாறில் குவிந்த மக்கள்
முன்னோர்களை நினைத்து வழிபடும் புனித நாள்... ஆடி அமாவாசை: திருவையாறில் குவிந்த மக்கள்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
CM Vijay: முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
Embed widget