மேலும் அறிய
"அங்காளம்மா தாயே... அருள் புரிவாயே!" - ஆடி அமாவாசை ஊஞ்சல் உற்சவம்... மேல்மலையனூரில் விண்ணதிர முழங்கிய பக்தி கோஷம்!
மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயிலில் ஆடி மாத அமாவாசை தின ஊஞ்சல் உற்சவம் நிகழ்வில் ஆடி மாத அமாவாசையையொட்டி ஆதி பரமேஸ்வரி அங்காளம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

மேல்மலையனூர் அங்காளம்மன் ஆடி அமாவாசை ஊஞ்சல் உற்சவம்
Source : ABP NADU
விழுப்புரம் : மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயிலில் ஆடி மாத அமாவாசை தின ஊஞ்சல் உற்சவம் நிகழ்வில் ஆடி மாத அமாவாசையையொட்டி ஆதி பரமேஸ்வரி அங்காளம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த மேல்மலையனூர் அங்காளம்மன். அமைச்சர்கள் ஆனந்த் மற்றும் தென்னரசு கலந்துக் கொண்டு அங்காளம்மனை தாலாட்டி வழிபட்டனர்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஆன்மீகத் திருத்தலமான ஸ்ரீ அங்காளம்மன் பரமேஸ்வரி ஆலயத்தில் ஆடி மாத அமாவாசை தினமான இன்று அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு மூலவர் மற்றும் உற்சவர் அங்காளம்மனுக்கு பால்,சந்தனம்,தயிர், வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து உற்ச்சவர் அங்காளம்மனுக்கு பல வண்ண மலர்கள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு ஆதி பரமேஸ்வரி அலங்காரத்தில் மேல்மலையனூர் அங்காளம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஆடி அமாவாசை தினம் என்பதால் வழக்கத்தை விட ஏராளமான பக்தர்கள் காலை முதலே மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயிலிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.
ஆடி மாத அமாவாசை தினத்தையொட்டி இரவு 10:30 மணிக்கு மேல் கோயில் வழக்கப்படி பூசாரிகள் உற்ச்சவர் அங்காளம்மனை தோலில் சுமந்து வந்து வடக்கு வாசல் பகுதியில் அமைந்துள்ள ஊஞ்சல் மண்டபத்தில் அங்காளம்மனை அமர வைத்து தாலாட்டு பாடி ஊஞ்சல் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் சுமார் 2 லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு கையில் தேங்காய் மற்றும் எலுமிச்சை சூடம் ஏற்றி அங்காளம்மா தாயே.. அருள் புரிவாயே.. என அங்காளம்மனை வழிபட்டனர். இந்நிகழ்வில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் தென்னரசு ஆகியோர் கலந்துக் கொண்டு அங்காளம்மனை தாலாட்டி வழிபாடு செய்தனர்.
ஆடி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நிகழ்வில் கலந்துகொள்ளும் பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 1190 சிறப்பு பேருந்துகள் மேல்மலையனூர் பகுதிக்கு இயக்கப்பட்டன. மேலும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி கூடுதலாக 90 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தலைமையில் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதேபோல் பக்தர்களின் நலன் கருதி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் அறிவுறுத்தல் பேரில் மேல்மலையனூர் பகுதியில் செயல்பட்டு வரும் இரண்டு அரசு மதுபான கடைகளை இன்று ஒருநாள் மூடி டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion




















