கரூர் புற்றுக்கண் மாரியம்மனுக்கு சித்திரை மாத திருவிழா - பக்தர்கள் நேர்த்திக்கடன்
ஸ்ரீ மகா புற்றுக்கண் மாரியம்மன் நவக்கிரக தளத்தில் 34 ஆம் ஆண்டு சித்திரை மாத திருவிழா சுவாமி கிணற்றிலிருந்து அக்னி சட்டி, பால்குடம், கரும்புத் தொட்டில்பல நேர்த்திக்கடனை பக்தர்கள் சிறப்பாக செய்தனர்.
அரசு காலணி அருள்மிகு ஸ்ரீ மகா புற்றுக்கண் மாரியம்மன் ஆலயத்தில் 34 ஆம் ஆண்டு சித்திரை திருவிழா.
கரூர் மாவட்டம், பஞ்சமாதேவி கிராமம், அரசு காலணி பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ மகா புற்றுக்கண் மாரியம்மன் நவக்கிரக தளத்தில் 34 ஆம் ஆண்டு சித்திரை மாத திருவிழாவை முன்னிட்டு சுவாமி கிணற்றிலிருந்து அக்னி சட்டி, பால்குடம், கரும்புத் தொட்டில் உள்ளிட்ட நேர்த்திக்கடனை பக்தர்கள் சிறப்பாக செய்தனர். இந்நிகழ்ச்சியை முன்னிட்டு சுவாமி கிணற்றில் பக்தர்கள் நீராடிய பிறகு அங்கு அக்னி சட்டி மற்றும் பால்குடம் ,கரும்புத் தொட்டில் உள்ளிட்ட நேர்த்திக்கடனை செய்ய ஏற்பாடுகள் செய்தனர்.
இந்நிகழ்ச்சியை முன்னிட்டு மூலவர் புற்றுக்கண் மாரியம்மன் க்கு பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று அதை தொடர்ந்து சுவாமி கிணற்றிலிருந்து மேல தாளங்கள் முழங்க பக்தர்கள் அக்னி சட்டி, பால்குடம், கரும்புத் தொட்டில் உள்ளிட்ட சுமந்தவாறு முக்கிய வீதியில் வழியாக வளம் வந்து ஆலயம் வந்து அடைந்தனர். அதை தொடர்ந்து பக்தர்கள் கொண்டு வந்த பாலால் மூலவர் புற்றுக்கண் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் அனைவருக்கும் விபூதி பிரசாதம் வழங்கிய பிறகு அன்னதானமும் வழங்கப்பட்டது. அரசு காலணி அருள்மிகு ஸ்ரீ புற்றுக்கண் மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற சித்திரை மாத திருவிழாவை காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
புன்னம் மாரியம்மன் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
நொய்யல், ஏப்ரல் 19 புன்னம் மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
மாரியம்மன் கோவில்
கரூர் மாவட்டம், புன்னம் பகுதியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் தேர் திருவிழாவை கடந்த 3ஆம் தேதி சிறப்பு அபிஷேகத்துடன் தொடங்கியது.அதனை தொடர்ந்து சாட்டுதல் நிகழ்ச்சியும், 15-ம் தேதி வரை அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேகமும் நடைபெற்று வந்தது. 16ஆம் தேதி படிசோறு நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று முன் தினம் பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்துக்கொண்டு மேளதாளம் முழக்க ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்.
தேரோட்டம்
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மாரியம்மனுக்கு பால், பன்னீர், இளநீர்,சந்தனம், மஞ்சள் உள்பட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது.பின்னர் 11 மணியளவில் உற்சவர் அம்மன் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார்.பின்னர் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டம் நடைபெற்றது. தேர் முக்கிய வீதிகள் வழியாக வந்து நிலையை வந்தடைந்தது.அதனைத் தொடர்ந்து அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. காலையில் கிடாய் வெட்டு பூஜை நடந்தது.
நேர்த்திக்கடன்
திரளான பெண்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்து வந்தும், தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இரவு வான வேடிக்கை நடந்தது. தேரோட்டத்தை ஒட்டி வேலாயுதம் பாளையம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். காலை கம்பம் பிடுங்கி காவிரி ஆற்றில் விடும் நிகழ்ச்சியும்,தொடர்ந்து மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. தேரோட்டத்திற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.