ஆன்மீகம்: ஸ்ரீ வீரகொண்டவ நாயக்கர் சுவாமி கோயில் திருவிழா - பக்தர்கள் தேவராட்டம்
சின்னதாராபுரம் அருகே எலவனூர் பகுதியில் ஸ்ரீ வீர கொண்டவநாயக்கர், ஸ்ரீ மாட்டுக்காரசுவாமி, ஸ்ரீ வீரபொம்மைக்கள் சுவாமி, ஸ்ரீ வீர ஜக்கம்மாள் சுவாமி, ஸ்ரீ வீர சின்னக்காள் சுவாமி கோவில் திருவிழா தொடங்கியது.
![ஆன்மீகம்: ஸ்ரீ வீரகொண்டவ நாயக்கர் சுவாமி கோயில் திருவிழா - பக்தர்கள் தேவராட்டம் Karur Festival at Sri Veerakondava Nayak Swamy Temple near Chinnadharapuram TNN ஆன்மீகம்: ஸ்ரீ வீரகொண்டவ நாயக்கர் சுவாமி கோயில் திருவிழா - பக்தர்கள் தேவராட்டம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/01/af6b264433bfda47c38080add923f5571688208776146113_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சின்னதாராபுரம் அருகே ஸ்ரீ வீரகொண்டவ நாயக்கர் சுவாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு 100க்கும் மேற்பட்டோர் தேவராட்டம் ஆடினர். மேலும், 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் அருகே உள்ள எலவனூர் பகுதியில் ஸ்ரீ வீர கொண்டவநாயக்கர், ஸ்ரீ மாட்டுக்காரசுவாமி, ஸ்ரீ வீரபொம்மைக்கள் சுவாமி, ஸ்ரீ வீர ஜக்கம்மாள் சுவாமி, ஸ்ரீ வீர சின்னக்காள் சுவாமி கோயில் திருவிழா 19 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த நிலையில் ஊர் முக்கியஸ்தர்கள் சார்பில் திருவிழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டதை தொடர்ந்து, கோயில் திருவிழா தொடங்கியது. சுவாமிகளுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
மாடு மாலை தாண்டும் விழா நடைபெறுவதை முன்னிட்டு 50 கிராம பொதுமக்களை வரவேற்கும் நிகழ்ச்சியில் பாரம்பரிய நடனமான தலைப்பாகை கட்டிக்கொண்டு கையில் குச்சியுடன் 100-க்கும் மேற்பட்டோர் தேவராட்டம் ஆடினர். சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)