மேலும் அறிய

Kandadevi Temple: 17 ஆண்டுக்கு பின் அமைதியான முறையில் நடந்த கண்டதேவி தேர் வெள்ளோட்டம்; பரவசமடைந்த பக்தர்கள்

Kandadevi Temple Car Festival: தேவகோட்டை அருகே கண்டதேவி சொர்ண மூர்த்தீஸ்வரர் ஆலய தேர் வெள்ளோட்டம், உயர்நீதிமன்ற உத்தரவால் நடைபெற்றது.

சொர்ணமூர்த்தீஸ்வரர்

Kandadevi Temple Car Festival: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்டதேவியில், சிவகங்கை சமஸ்தானம் மற்றும் அறநிலைத்துறை கட்டுப்பாட்டின் கீழ் சொர்ணமூர்த்தீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற இக்கோயிலில், 4 நாட்டார்கள் எனப்படும் உஞ்சனை, செம்பொன்மாரி, தென்னீர்வயல், இறகு சேரியை சேர்ந்த கிராம மக்கள் ஒன்று கூடி இக்கோயிலின் தேரோட்டத்தை வெகு விமரிசையாக நடத்தி வந்தனர்.

- Madurai: மீண்டும் ரூ.3 கோடி மதிப்பிலான நிலம் தானம்.. மதுரை ஆயி பூரணம்மாள் அடுத்தடுத்து அசத்தல்!

Kandadevi Temple: 17 ஆண்டுக்கு பின் அமைதியான முறையில் நடந்த கண்டதேவி தேர் வெள்ளோட்டம்; பரவசமடைந்த பக்தர்கள்

திருவிழாவில் ஏற்பட்ட சிக்கல்

இந்த சூழலில் 2006 -ம் ஆண்டு பழமையின் காரணமாக தேர் பழுதாகி தேரோட்டம் நிறுத்தப்பட்டது. பின்பு புதிய தேர் உருவாக்கப்பட்டு கடந்த 5 வருடங்களுக்கு முன்பு தேரோட்டம் நடத்த முற்பட்டபோது வடம் பிடித்து இழுப்பதில் இரண்டு சமூகத்தை சேர்ந்தவர்கள் இடையே பிரச்னை ஏற்பட்டதால் இந்து அறநிலை துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் அடிப்படையில் தேரோட்டம் நிறுத்தப்பட்டது. இதனை அடுத்து மகாதேவன் என்பவர் கடந்த 2019-ம் ஆண்டு தேரோட்டத்தை நடத்த கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்தார்.

Kandadevi Temple: 17 ஆண்டுக்கு பின் அமைதியான முறையில் நடந்த கண்டதேவி தேர் வெள்ளோட்டம்; பரவசமடைந்த பக்தர்கள்

உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, நீதிபதிகள் தேரோட்டத்தை நடத்துவதில் என்ன பிரச்னை? துணை ராணுவத்தை கொண்டு நானே தேரோட்டத்தை ஓடச் செய்யவா? எனக் கேள்வி எழுப்பினார். பின்னர் தேரோட்டம் நடத்தும் தேதி குறித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய  உத்தரவிட்ட நீதிபதி புகழேந்தி வழக்கை நவம்பர் 17-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். 17ம் தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், கண்டதேவி தேரோட்டத்தின் வெள்ளோட்டம் ஜனவரி 21 ஆம் தேதி நடத்தப்படும் என பதிலளிக்கப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் அதாவது பொங்கல் பண்டிகை ஒட்டி நடைபெற்ற மஞ்சுவிரட்டு மற்றும் திருவிழாக்களின் பாதுகாப்பிற்கு போலீசார் சென்று விட்டதால் நீதிமன்றம் குறிப்பிட்ட தேதியில் தேரோட்டம் நடத்தப்படவில்லை.

Kandadevi Temple: 17 ஆண்டுக்கு பின் அமைதியான முறையில் நடந்த கண்டதேவி தேர் வெள்ளோட்டம்; பரவசமடைந்த பக்தர்கள்

சிறப்பாக நடைபெற்ற தேர் வெள்ளோட்டம்

இந்நிலையில், நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கண்டதேவி சொந்த மூர்த்தீஸ்வரர் ஆலய தேர் வெள்ளோட்டம் சிறப்பாக நடைபெற்றது. இதற்காக நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், தேனி, சிவகங்கை ஆகிய தென் மாவட்டங்களில் இருந்து, ராமநாதபுரம் சிவகங்கை சரக டிஐஜி துரை, சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த், காரைக்குடி உதவி காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் ஆகியோர் தலைமையில் சுமார் 1500 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. தேரோட்டமானது கோயில் வாயிலிருந்து புறப்பட்டு கோயிலுக்குச் சொந்தமான குளத்தை சுற்றி சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் பயணித்து மீண்டும் கோயிலின் வாசலில் நிலைக்கு வந்தது. தேர் வெள்ளோட்டத்தைக் காண பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர். 17 ஆண்டுக்கு பிறகு நீதிமன்ற உத்தரவுப்படி தேர் வெள்ளோட்டம்  அமைதியான முறையில் நடைபெற்றது முடிந்தது.

மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Zak Crawley: 10 ஆண்டுகளில் இது மூன்றாவது முறை மட்டுமே.. இந்திய மண்ணில் ஜாக் கிராலி தனித்துவ சாதனை படைப்பு!

இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Ind vs Eng 2nd Test: இங்கிலாந்தை ஓடவிட்ட இந்தியா; இரண்டாவது டெஸ்ட்டில் 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

India vs Australia LIVE SCORE: அதிரடி காட்டும் இந்திய அணி.. திணறும் ஆஸ்திரேலியா!
India vs Australia LIVE SCORE: அதிரடி காட்டும் இந்திய அணி.. திணறும் ஆஸ்திரேலியா!
ரூ.50 லட்சம் செலவில் இந்திரா காந்திக்கு சிலை, அரசு விழாவாக அப்துல் கலாம் பிறந்தநாள்- தமிழ் வளர்ச்சித் துறை
ரூ.50 லட்சம் செலவில் இந்திரா காந்திக்கு சிலை, அரசு விழாவாக அப்துல் கலாம் பிறந்தநாள்- தமிழ் வளர்ச்சித் துறை
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
India Squad For Zimbabwe Series Announced: ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடர்.. ரோஹித், கோலிக்கு இடம் இல்லை..கேப்டனாக சுப்மன் கில்!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடர்.. ரோஹித், கோலிக்கு இடம் இல்லை..கேப்டனாக சுப்மன் கில்!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
India vs Australia LIVE SCORE: அதிரடி காட்டும் இந்திய அணி.. திணறும் ஆஸ்திரேலியா!
India vs Australia LIVE SCORE: அதிரடி காட்டும் இந்திய அணி.. திணறும் ஆஸ்திரேலியா!
ரூ.50 லட்சம் செலவில் இந்திரா காந்திக்கு சிலை, அரசு விழாவாக அப்துல் கலாம் பிறந்தநாள்- தமிழ் வளர்ச்சித் துறை
ரூ.50 லட்சம் செலவில் இந்திரா காந்திக்கு சிலை, அரசு விழாவாக அப்துல் கலாம் பிறந்தநாள்- தமிழ் வளர்ச்சித் துறை
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
India Squad For Zimbabwe Series Announced: ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடர்.. ரோஹித், கோலிக்கு இடம் இல்லை..கேப்டனாக சுப்மன் கில்!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடர்.. ரோஹித், கோலிக்கு இடம் இல்லை..கேப்டனாக சுப்மன் கில்!
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
'இத்தனை நாளா எங்கய்யா இருந்தே'... ரூ.600 செலவில் தஞ்சை பள்ளி மாணவரின் அட்டகாச கண்டுபிடிப்பு கருவி
'இத்தனை நாளா எங்கய்யா இருந்தே'... ரூ.600 செலவில் தஞ்சை பள்ளி மாணவரின் அட்டகாச கண்டுபிடிப்பு கருவி
Breaking News LIVE:நாகையில் கள்ளச்சாராயம் விற்ற 21 பேர் கைது - போலீஸ் அதிரடி
Breaking News LIVE: நாகையில் கள்ளச்சாராயம் விற்ற 21 பேர் கைது - போலீஸ் அதிரடி
Vijay: பிறந்தநாள் வாழ்த்து! சீமான், திருமா, அன்புமணிக்கு சிறப்பு நன்றி - வியூகம் வகுக்கும் விஜய்
Vijay: பிறந்தநாள் வாழ்த்து! சீமான், திருமா, அன்புமணிக்கு சிறப்பு நன்றி - வியூகம் வகுக்கும் விஜய்
Embed widget