மேலும் அறிய

Kandadevi Temple: 17 ஆண்டுக்கு பிறகு போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்ற கண்டதேவி கோயில் தேரோட்டம்

Kandadevi Temple: 17 ஆண்டுகளுக்குப் பிறகு அமைதியாக நடைபெற்று முடிந்த கண்டதேவி தேரோட்டத்தால் அதிகாரிகளும் சுற்றுவட்டார பகுதி மக்களும் நிம்மதி அடைந்தனர்.

தேவகோட்டை அருகே கண்டதேவி கோயில் தேரோட்டம் 17 ஆண்டுகளுக்குப் பிறகு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அமைதியாக நடைபெற்றது.
 

கண்டதேவி கோயில்

 
Kandadevi Temple: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்டதேவியில், சிவகங்கை சமஸ்தானம் மற்றும் அறநிலைத்துறை கட்டுப்பாட்டின் கீழ் சொர்ண மூர்த்தீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற இக்கோயிலில், 4 நாட்டார்கள் எனப்படும் உஞ்சனை, செம்பொன்மாரி, தென்னீர்வயல், இறகு சேரியை சேர்ந்த கிராம மக்கள் ஒன்று கூடி இக்கோயிலின் தேரோட்டத்தை வெகு விமரிசையாக நடத்தி வந்தனர். இந்த சூழலில் பழமையாகி பழுதானதன் காரணமாக 2006-ம் ஆண்டு தேரோட்டம் நிறுத்தப்பட்டது. பின்பு புதிய தேர் உருவாக்கப்பட்டு கடந்த 5 வருடங்களுக்கு முன்பு தேரோட்டம் நடத்த முற்பட்டபோது வடம் பிடித்து இழுப்பதில் இரண்டு சமூகத்தை சேர்ந்தவர்கள் இடையே பிரச்னை ஏற்பட்டதால், இந்து அறநிலை துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் அடிப்படையில் தேரோட்டம் நிறுத்தப்பட்டது.
 

தேர் வெள்ளோட்டம்

புதிய தேர் செய்யப்பட்ட நிலையில் தேர் வெள்ளோட்டம் நடத்தாமல் இருந்தது. தேர் வெள்ளோட்டம் நடத்த தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவுபடி கடந்த பிப்ரவரி 11-ம் தேதி தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. தேவஸ்தான ஊழியர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் இக்கோயில் ஆனித் திருவிழா ஜூன் 13-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருவாய்துறை காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்தைக்கு பின் அனைத்து சமூகத்தினரும் ஒற்றுமையுடன் வடம் பிடித்து தேரை இழுக்க முடிவு செய்தனர். 
 

அமைதியாக நடந்த தேர்திருவிழா

 
இந்நிலையில் இன்று தேரோட்டம் 17 ஆண்டுகளுக்குப் பிறகு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அமைதியாக நடைபெற்றது. இதற்காக முன்அனுமதி பெற்றவர்கள் மட்டுமே பலத்த சோதனைக்குப் பிறகு அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேளதாளங்கள் முழங்க சொர்ணமூர்த்தீஸ்வரர் திருத்தேரில் எழுந்தருள, நீதிமன்ற உத்தரவின் படி கோயிலில் இருந்து புறப்பட்ட தேர் கோயிலை சுற்றி சுமார் ஒன்னரை கிலோ மீட்டர் தூரம் வந்து  மீண்டும் நிலையை அடைந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு தென் மண்டல ஐ.ஜி கண்ணன் தலைமையில், 5 டி.ஐ.ஜி ,12 எஸ்.பி உட்பட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கண்டதேவியை சுற்றிலும் 18 சோதனை சாவடிகள், 50க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு விரிவானபாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு அமைதியாக நடைபெற்று முடிந்த கண்டதேவி தேரோட்டத்தால் அதிகாரிகளும் சுற்றுவட்டார பகுதி மக்களும் நிம்மதி அடைந்தனர்.
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

46 ஆண்டுகளுக்குப் பிறகு: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் மாசி மக திருவூரல் விழா மீண்டும் துவக்கம்!
46 ஆண்டுகளுக்குப் பிறகு: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் மாசி மக திருவூரல் விழா மீண்டும் துவக்கம்!
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில்: வெள்ளித் தேர் திருவிழாவில் குவிந்த பக்தர்கள்! கண்கவர் வானவேடிக்கை!
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில்: வெள்ளித் தேர் திருவிழாவில் குவிந்த பக்தர்கள்! கண்கவர் வானவேடிக்கை!
காசிக்கு இணையான திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் ஆலயத்தில் இந்திரப் பெருவிழா: மார்ச் 8-ல் தேரோட்டம்!
காசிக்கு இணையான திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் ஆலயத்தில் இந்திரப் பெருவிழா: மார்ச் 8-ல் தேரோட்டம்!
திருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமர் மோடி: எதிர்பாராத தரிசனம்.. பாதுகாப்பு, மரியாதை, சுவாரசியம் என்ன?
திருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமர் மோடி: எதிர்பாராத தரிசனம்.. பாதுகாப்பு, மரியாதை, சுவாரசியம் என்ன?
ABP Premium

வீடியோ

Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK
TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Surprise Gift: மீண்டும் அக்கவுண்ட்டுக்கு வந்த ரூ.2,000; முதலமைச்சரின் சர்ப்ரைஸ் கிஃப்ட்; யார் யாருக்கு தெரியுமா.?
மீண்டும் அக்கவுண்ட்டுக்கு வந்த ரூ.2,000; முதலமைச்சரின் சர்ப்ரைஸ் கிஃப்ட்; யார் யாருக்கு தெரியுமா.?
வங்கி கணக்கில் ரூ.8,000 டெபாசிட்.! மீனவர்கள் எதிர்பார்த்த அறிவிப்பை வெளியிட்ட ஸ்டாலின்
வங்கி கணக்கில் ரூ.8,000 டெபாசிட்.! மீனவர்கள் எதிர்பார்த்த அறிவிப்பை வெளியிட்ட ஸ்டாலின்
Trump Arab Countries Iran: “மெயின் அடியே இனிமே தான் இருக்கு“; ஈரானுக்கு ட்ரம்ப் வார்னிங்; தாக்குதலில் இணையும் அரபு நாடுகள்.?
“மெயின் அடியே இனிமே தான் இருக்கு“; ஈரானுக்கு ட்ரம்ப் வார்னிங்; தாக்குதலில் இணையும் அரபு நாடுகள்.?
Top 10 News Headlines: மீனவர்களுக்கு உதவித்தொகை, தங்கம் விலை குறைவு, மோடிக்கு சோனியா கண்டனம், அமெரிக்கா அறிவிப்பு - 11 மணி செய்திகள்
மீனவர்களுக்கு உதவித்தொகை, தங்கம் விலை குறைவு, மோடிக்கு சோனியா கண்டனம், அமெரிக்கா அறிவிப்பு - 11 மணி செய்திகள்
China Backs Iran: “ஈரானுக்கு நாங்க இருக்கோம்“ சீனுக்கு வந்த சீனா; அமெரிக்கா, இஸ்ரேலுக்கு மெசேஜ் - என்ன நடக்குமோ.?
“ஈரானுக்கு நாங்க இருக்கோம்“ சீனுக்கு வந்த சீனா; அமெரிக்கா, இஸ்ரேலுக்கு மெசேஜ் - என்ன நடக்குமோ.?
Tirunelveli: நெல்லையில் கண்ணில் பட்டவர்களை வெட்டிய கும்பல்.. இருவர் கொலை... பெரும் பதற்றம்!
Tirunelveli: நெல்லையில் கண்ணில் பட்டவர்களை வெட்டிய கும்பல்.. இருவர் கொலை... பெரும் பதற்றம்!
Smallpox Prevention : சின்னம்மை பாதிப்பா குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாதீங்க... பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன.?
சின்னம்மை பாதிப்பா குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாதீங்க... பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன.?
TN Assembly: போஸ்டர், பேனர்களுக்கு நோ.. அரசியல் கட்சிகளையே அலறவிடும் தமிழக கிராமம் - எந்த ஊருப்பா?
TN Assembly: போஸ்டர், பேனர்களுக்கு நோ.. அரசியல் கட்சிகளையே அலறவிடும் தமிழக கிராமம் - எந்த ஊருப்பா?
Embed widget