Chennai Rains: சென்னையில் திடீரென வரம் கொடுக்கும் வருணபகவான்.. ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கம் பகுதிகளில் கனமழை..!
சென்னையில் தி.நகர், மேற்கு மாம்பலம், அசோக் நகர், கே.கே. நகர், விருகம்பாக்கம், கிண்டி உள்ளிட்ட பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
சென்னையில் பகல் முழுவதும் வெயில் கொளுத்திய நிலையில், தற்போது திடீரென மழையானது வெளுத்து வாங்கி வருகிறது.
Thrashing in #keelkatlai #chennairains@ChennaiRains @RainStorm_TN @MasRainman pic.twitter.com/DBfw3hypUm
— Sucee1983 (@sucee1983) June 20, 2024
அதன்படி சென்னையில் ஆயிரம் விளக்கு, விருகம்பாக்கம், தி.நகர், மேற்கு மாம்பலம், அசோக் நகர், கே.கே.நகர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
நாளை, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வரும் 22 ஆம் தேதி, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
ஜூன் 23 ஆம் தேதி, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
அதேபோல் ஜூன் 24 மற்றும் 25 ஆம் தேதி, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 5 நாட்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
21.06.2024 முதல் 23.06.2024 வரை: அடுத்த ஐந்து தினங்களுக்கு, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்ப நிலை பொதுவாக இயல்பை ஒட்டி இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை / இரவு வேளையில், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25°-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
தேவாலா (நீலகிரி) 13, ஆற்காடு (ராணிப்பேட்டை) 11, தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி), ஆயிங்குடி (புதுக்கோட்டை) தலா 10, திண்டிவனம் (விழுப்புரம்), மண்டலம் 01 திருவொற்றியூர் (சென்னை) தலா 9, வாலாஜா (ராணிப்பேட்டை), மண்டலம் 08 அண்ணாநகர் (சென்னை), வடகுத்து (கடலூர்), பனப்பாக்கம் (ராணிப்பேட்டை), சென்னை நுங்கம்பாக்கம் (சென்னை), மண்டலம் 05 GCC (சென்னை), மண்டலம் 09 தேனாம்பேட்டை (சென்னை), மண்டலம் 06 திரு.வி.க.நகர் (சென்னை), அரிமளம் (புதுக்கோட்டை), கூடலூர் பஜார் (நீலகிரி) தலா 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள்:
21.06.2024 முதல் 23.06.2024 வரை: மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக்கடல் பகுதிகள்:
21.06.2024: தெற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
22.06.2024 மற்றும் 23.06.2024: தெற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அரபிக்கடல் பகுதிகள்:
21.06.2024 முதல் 23.06.2024 வரை: லட்சதீவு பகுதிகள், கேரள - கர்நாடக கடலோரப்பகுதிகள், தென்கிழக்கு மற்றும் மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.