மேலும் அறிய
Advertisement
kanchipuram: பௌர்ணமியை முன்னிட்டு தும்பவனம் அம்மன் கோயிலில் ஆனி மாத ஊஞ்சல் சேவை
Kanchipuram Temple: தும்பவனத்து அம்மன் கோயிலில் ஆனி மாத பௌர்ணமியை ஒட்டி ஊஞ்சல் சேவை நடைபெற்றது.
காஞ்சிபுரம் (kanchipuram News): காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட தும்பவனம் பகுதியில் உள்ள கிராம தேவதையான தும்பவனத்து அம்மன் ஆலயம் உள்ளது. இந்த தும்பவனத்து அம்மன் ஆலயம் பல்வேறு பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு குலதெய்வமாக விளங்கி வருகிறது. இதில் உள்ள மூலவர் தும்பவனத்து அம்மனுக்கு பௌர்ணமியை ஒட்டி பால், தேன், இளநீர், சந்தனம், தயிர், பல்வேறு பழங்களாலான சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தும்பவனத்து அம்மன் வெள்ளி உற்சவத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
கோயில் வளாகத்தில் ஆனி மாத பௌர்ணமியை ஒட்டி சிம்ம வாகனத்தில் தும்மவனத்தம்மன் ஊஞ்சல் சேவையில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் ஊஞ்சல் சேவையில் காட்சி அளித்த தும்பவனத்து அம்மனை தரிசனம் செய்து சென்றனர். இதேபோன்று, காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு, அபிஷேகங்கள் நடைபெற்றது. காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு சிவ ஆலயங்களிலும் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் மேற்கொண்டனர்.
நிகழ்வின் ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு தலைவர் C.விமல் தாஸ், உறுப்பினர்கள் ம.விஜயலட்சுமி சண்முகம் செய்து இருந்தனர். பூஜைக்கான உபயதாரர் G.கோதண்டம் குடும்பத்தினர், இந்நிகழ்வில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் V.மலர்மன்னன், தும்பவனம் G.பசுபதி தேனம்பாக்கம் K.செல்வம், மாமன்ற குழு தலைவரும் மாமன்ற உறுப்பினருமான மு.சங்கர், நாற்பத்தி ஒன்பதாவது வார்டு வட்ட கழக செயலாளர் V.சேகர், V.தணிகைவேல், ஸ்ரீ தினேஷ் ஸ்டுடியோ, அர்ச்சகர்கள் ரவி,ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் பொதுமக்கள் உடனிருந்தன.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
இந்தியா
உடல்நலம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion