தங்கத்தேரில் ஜொலித்த காஞ்சி காமாட்சி அம்மன்.. ஆவணி அவிட்டம், பௌர்ணமியை முன்னிட்டு கோலாகலம் ..
Kanchipuram Kamakshi Amman Temple : காமாட்சி அம்மன் கோவிலில் ஆவணி அவிட்டம் மற்றும் ஆவணி பௌர்ணமி ஒட்டி சிறப்பு தங்கத்தேர் பவனி விழா கோலாகலமாக நடைபெற்றது.
![தங்கத்தேரில் ஜொலித்த காஞ்சி காமாட்சி அம்மன்.. ஆவணி அவிட்டம், பௌர்ணமியை முன்னிட்டு கோலாகலம் .. Kanchipuram Kamakshi Amman Temple pecial Thangatheer Bhavani festival was held on the occasion of Avani Avitham and Avani Poornami தங்கத்தேரில் ஜொலித்த காஞ்சி காமாட்சி அம்மன்.. ஆவணி அவிட்டம், பௌர்ணமியை முன்னிட்டு கோலாகலம் ..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/31/d6088c522ee8840f71f75a08b7e902811693435592357113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
காஞ்சி காமாட்சி வரலாறு
காமாட்சி என்றால் கருணையும், அன்பும் நிறைந்த கண்களையுடையவள் என்றும் பொருள் உண்டு. இத்தகைய பெருமைகளை தன்னகத்தே கொண்ட காஞ்சி மாநகரத்தில் அன்னை காமாட்சி தேவி எழுந்தருளிய சம்பவம் ஒரு ஆற்றல்மிக்க வரலாறாக விரிகின்றது. முன்னொரு காலத்தில், பந்தகாசுரன் என்ற ஓர் அசுரன் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. பந்தகாசுரன் பிரம்மதேவனிடம் பல்வேறு வரங்களை பெற்று வந்துள்ளார் என நம்பப்படுகிறது
பிரம்ம தேவன் அளித்த வரங்களின் சக்தியாலும், ஆணவத்தாலும் அவன் மூவுலகங்களையும் கைப்பற்றித் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் பலவித துன்பங்களை உண்டாக்கி வந்தான். பந்தகாசுரனின் கொடுமைகள் நாள்தோறும் அதிகமாகி வந்ததால், அதிக துன்பமுற்ற தேவர்களும், முனிவர்களும் சிவபெருமானிடம் சென்று தங்கள் துன்பத்தைக் கூறி முறையிட்டார்கள் என கூறப்படுகிறது
பிரம்மாவின் வரங்களைப் பெற்றதால் பந்தகாசுரன் மிகுந்த வலிமை பெற்றிருப்பதை உணர்ந்த சிவபெருமான், “அந்தப் பந்தகாசுரனை அழிக்கும் ஆற்றல் அன்னை பராசக்தி தேவிக்குதான் உள்ளது“ என்று கூறி, அவர்களைப் பராசக்தியிடம் அனுப்பி வைத்தார். அத்தருணம், அன்னை பராசக்தி தேவி, காம கோட்டம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில், கிளி வடிவம் கொண்டு, ஒரு செண்பக மரத்தில் அமர்ந்து சிவபெருமானைக் குறித்து தவம் செய்து கொண்டிருந்தாள். தேவர்களும் முனிவர்களும் கீழே ஒரு வடிவத்தில் இருந்த பராசக்தியே சந்தித்த முறையிட்டனர். அவர்களின் துன்பத்தைக் கண்டு மனம் இரங்கி, பந்தகாசுரனைக் கொன்று, அவர்களின் துயரத்தைத் தீர்ப்பதாக பராசக்தி தெரிவித்தார். அதற்காக காத்திருந்தபோது ஒரு தருணத்தில், பந்தகாசுரன் கயிலாயத்தில், ஒரு இருண்ட குகையினுள்ளே, ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பதை அறிந்து, அவனைக் கொல்ல அதுவே தருணம் என்று முடிவு செய்த அன்னை, 18 கரங்களில், பதினெட்டு வகையான ஆயுதங்களைத் தாங்கிய பைரவ ரூபிணியாக, உக்கிர உருவம் கொண்டாள் என்பது நம்பிக்கை
இதனை அடுத்த அசுரனை வதம் செய்தார். உக்கிர கோப ரூபத்தில் வந்த அன்னையைக் கண்ட தேவர்களும், முனிவர்களும் பயத்தில் நடுங்கி மயங்கி வீழ்ந்தனர். அவர்களின் பயத்தைப் போக்க விரும்பிய அன்னை, உடனே, அழகிய பட்டாடை அணிந்த சிறு பெண்ணின் உருவத்தில், புன்னகை தவழும் முகத்துடன் அவர்களுக்குக் காட்சியளித்தாள் என நம்பப்படுகிறது. காஞ்சிபுர திருத்தலத்திலுள்ள எல்லா சிவாலயங்களுக்கும் காமாட்சி அம்மனே மூலவர் அம்மனாக விளங்குகிறாள். இதனால் காஞ்சிபுரத்தில் உள்ள சிவாலயங்களில், அம்பாளுக்குத் தனி சந்நிதிகள் இருப்பதில்லை. அம்மனின் உற்சவ மூர்த்திகள் மட்டுமே எல்லா சிவாலயங்களிலும் காட்சியளிக்கின்றனர். மூல மூர்த்தியான காமகோடி காமாட்சியின் இடது பக்கத்தில் வட திசை நோக்கியவாறு அரூப லட்சுமியாகிய அஞ்சன காமாட்சி காட்சியளிக்கின்றார். இது அன்னையின் சூட்சும வடிவமாகும். இந்த அன்னைக்கு வடிவம் கிடையாது என்பது நம்பிக்கை
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)