மேலும் அறிய

Diwali Rasi Palan 2023: இந்த தீபாவளி முதல் அடுத்த தீபாவளி வரை! துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்களுக்கு எப்படி?

Diwali 2023 Rasi Palan: இந்தாண்டு தீபாவளி முதல் அடுத்தாண்டு தீபாவளி வரை துலாம், விருச்சிகம் மற்றும் தனுசு ராசிக்காரர்களுக்கு என்ன பலன்கள் என்பதை கீழே காணலாம்.

தீபாவளி சிறப்பு ராசிபலன்:

2023  தீபாவளி தினத்தில் இருந்து 2024 தீபாவளி வரை  எந்தெந்த ராசிகளுக்கு என்ன பலன் ?

துலாம் ராசி : 90%

சிக்கல் விலகி சந்தோஷம் காண்பீர்கள் !!!

அன்பார்ந்த ABP நாடு வாசகர்களே,

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். லக்னத்தில் கேது  இருந்து உங்களுக்கு வர வேண்டிய நல்லவைகளை  உடனடியாக கிடைக்க விடாமல் சற்று தாமதப்படுத்தி இருப்பார். ஏழாம் இடத்தில் ராகு இருந்து எதிர்பார்த்த விஷயங்களில் ஏமாற்றம் அடைய செய்திருப்பார்.  கவலை வேண்டாம் துலாம் ராசிக்கு ஏற்றமான காலகட்டம்.  இந்த ஆண்டு முடிவடையும் வரை  உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்திலிருந்து குரு பகவான் அக்கரம் பெற்று ஆறாம் இடத்திற்கு செல்வதால்  நோய் முடி விலகி கடன் அடையும் சூழல் உருவாகும். 

வழக்கு வம்புகள் உங்களுக்கு சாதகமாக அமையும்.  எதிரிகள் உங்களிடத்தில் சரநடைவார்கள்.  புதிய தொழில் வாய்ப்புகள் உங்களுக்கு அமையப் போகிறது.  நிம்மதி இல்லாத வேலை,  தொழிலில் நஷ்டம்,  வேலை செய்தும் பெரிய லாபம் இல்லாத தன்மை.  போன்ற  கெடு பலன்கள் மாறும்,  உங்களுடைய ராசிக்கு  இரண்டாம் இடத்தை பார்ப்பதால் குடும்ப ஒற்றுமை  மேலோங்கும்   பணவரவு தாராளமாக இருக்கும். பகைவர் அடங்குவார்கள்,  கலைத்துறையினருக்கு  ஏற்றமான காலகட்டம். 

மே 1 வரை ஏழாம் இடத்து குரு : 

துலா ராசிக்கு ஏழாம் இடத்தில் குரு இருப்பதால் திருமணம் கைகூடிடும்.  நீண்ட நாட்களாக வரன் அமையவில்லையே என்ற இயக்கத்தில் இருந்த துலாம் ராசி வாசகர்களுக்கு திருமணம் நடக்கவிருக்கிறது.  ஒளிவு கூடி புத்துணர்ச்சி பெற போகிறீர்கள்.  லக்னத்தை குரு பார்ப்பதால் சுறுசுறுப்பாக இருப்பீர்கள்.  லக்னத்தை குரு பார்ப்பதால் உங்களுடைய பேச்சு தெளிவாக இருக்கும்.

எட்டாமிடத்தில்  குரு :

அஷ்டமத்து குருவை கண்டு அஞ்ச வேண்டாம். கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என்ற அமைப்பில்  ஆறாம் இடத்து அதிபதி எட்டாம் இடத்திற்கு செல்வது நல்லது. அதுவும்  சுக்ரனின் அதிகாரத்தைக் கொண்ட துலாம் ராசிக்கு குரு அஷ்டமத்தில் செல்வது அமோகம்.  எதிர்பாராத தன வரவு உண்டு. வீடு வண்டி வாகனம்  வாங்குவீர்கள் . புதிய முயற்சிகள் கைக்கூடி  வரும்.  யாரிடமும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். அடுத்த வருடம் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். வம்பு வழக்குகள் உங்களுக்கு எதிராக திரும்பக்கூடும். மனதில் ஒரு படபடப்பு பயம் ஏற்படலாம். வியாழக்கிழமை தோறும் குரு தட்சிணாமூர்த்தியை வழிபட  சிக்கல்கள் விலகும்  சந்தோசம் பிறக்கும் !!!

அதிர்ஷ்டமான நிறம் :  நீளம் 

அதிர்ஷ்டமான எண் : 5, 1

வணங்க வேண்டிய தெய்வம் :  திருநள்ளாறு சனீஸ்வர பகவான் 

விருச்சிக ராசி :     90%

அன்பார்ந்த ABP நாடு வாசகர்களே, 

உங்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் இந்த வருடம் அமோகமாக இருக்கும்.  ஐந்தாம் இடத்தில் உருவாக்க நிலையில் உங்களுக்கு அமோகமான பலனை வாரி வழங்கியிருப்பார். ஐந்தாம் இடத்தில் குரு நினைத்த காரியங்களில் வெற்றி அடைய செய்திருப்பார்.  2023ஆம் ஆண்டின் வருடம் முடிவின் உங்களுக்கு சாதகமான பலன்களே நடந்திருக்கும். ஆறாம் இடத்திற்கு வந்திருக்கக் கூடிய ராகு உங்கள் கடனை அடைப்பார்.  கடன் என்றால் என்னவென்றே தெரியாத அளவுக்கு பண வரவை உருவாக்குவார். 

வீட்டில் விற்று கடன் அடைக்கக்கூடிய சூழ்நிலை உருவாகும்.  புது வண்டி வாகனம் வாங்குவீர்கள்.  என் நண்பன் கேட்கிறான் என்று ஜாமின் கையெழுத்து போட வேண்டாம்.  காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பது போல நல்ல காலம் இருக்கும் பொழுது  அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.  ஆறாம் இடத்தில் வாழ்ந்து 12ஆம் இடத்தில்  கேதுவும் நல்ல பலன்களை கொடுத்து இருப்பார்கள்.  தற்போது ஐந்தாம் இடத்தில் ராகு வந்திருப்பது  உங்களுடைய பூர்வீகத்திலிருந்து உங்களை நகர்த்தி வேலை விஷயமாகவோ அல்லது வேறு ஏதேனும் காரணங்களுக்காக வெளியூர், வெளிநாடுகளுக்கு உங்களை அனுப்பி வைக்கும். 

லாபத்தை அபரிமிதமாக கொடுப்பார்.  குறிப்பாக மருத்துவர்கள் வழக்கறிஞர்கள் ஆன்மீகவாதிகளுக்கு இது ஏற்றமான காலகட்டம் என்றே சொல்ல வேண்டும்.  ஆராய்ச்சி துறையில் இருப்பவர்களுக்கு மேலும் பல ஆராய்ச்சிகள் செய்து மேல் அதிகாரியின் பாராட்டை பெறுவீர்கள்.  விருச்சிக ராசி  வாசகர்களே உங்களுடைய பிள்ளைகளிடம் கவனமாக  இருக்க வேண்டும்.  காதல் யோகாரங்களில் சற்று கவனமாக இருங்கள்.  பெற்றோர்களுக்கு தெரிய வந்து பெரிய பிரச்சனையில் போய் முடியவும் வாய்ப்பு உண்டு.  லாப ஸ்தானத்தில் கேது இருப்பதால் விநாயகர் வழிபாடு ஏற்றத்தை உண்டாக்கும். 

அதிர்ஷ்டமான நிறம் :  ஊதா கலர் 

அதிர்ஷ்டமான எண் : 3, 9

வணங்க வேண்டிய தெய்வம் :   சுப்பிரமணிய சுவாமி 

தனுசு ராசி பலன் : 90%

அன்பார்ந்த ABP  நாடு வாசகர்களே, 

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் . எதையும் தாங்கும் இதயம் கொண்ட தனுசு ராசி  வாசகர்களே  கடந்த ஒரு வருடம் ஆக உங்களுக்கு  நிம்மதி இல்லாத தன்மை இருந்திருக்கும்.  ஐந்தில் ராகு புத்திரர் வகையில் சோகத்தை கொடுத்திருப்பார்.  உத்தரபாக்கியம் தடைபட்டு போயிருக்கும்.  பதினொன்றாம் இடத்தில் கேது இருப்பதால் நீங்கள் நினைத்த லாபம் கிடைக்காமல் கைவிட்டு நழுவி போகின்ற சூழ்நிலை உருவாகி இருக்கும்.  ஆனால் வரப்போற காலங்கள் சிறப்பாக அமையும். நீண்ட நாட்களாக குழந்தை வரம் வேண்டி காத்திருக்கும் தனுசு ராசி வாசகர்களே  உங்களுக்கு பொன்னான காலம் வந்து விட்டது.  மழலைச் செல்வம்  கிடைக்கப் போகிறது.  நீண்ட நாட்களாக காத்திருந்த ஒரு விஷயம் உங்களுக்கு நிறைவேற போகிறது . 

ஐந்தாம் இடத்து குரு எதிலும் வெற்றி தான் செய்வார் ராசி அதிபதி ஐந்தாம் பாவத்தில் அமர்ந்திருப்பது நிச்சயமாக புத்திர பாக்கியத்தை உருவாக்கித் தருவார்.  அடுத்த வருடம் உங்கள் கையில் ஒரு குழந்தை இருக்கும்.  பூர்விக சொத்துக்கள் கைக்கு வரும்.  உந்திய சத்திரங்களுக்கு சென்று வருவீர்கள்  உண்மையை நீராடுதல் இருக்கும்  உங்களை பகைத்தவர்கள் நண்பர் ஆவார்கள் .  காதல் விவகாரங்கள் திருமணத்தில் முடியும்.  எண்ணம் சிந்தனை தெளிவாகும். 

நீங்கள் கூறும் கருத்துக்களுக்கு மரியாதை கிடைக்கும்.  உங்களுடைய ஆலோசனையின் படி நடந்து கொள்வார்கள் .  ஐந்தாம் இடத்து குரு பதினொன்றாம் வீட்டை பார்ப்பதால்  எதிலும் லாபகரமாகவே அமையும் .   கலைத்துறையினர் சாதிக்கப் போகிறார்கள்.  அரசியல்வாதிகளுக்கு முன்னேற்றம்.  இல்லத்தரசிகள் சௌகரியமாக இருப்பார்கள் .  மாணவ மாணவியர் படிப்பில் கவனம் செலுத்துவார்கள்.  அனைத்தும் சுபமாகவே முடியும் !!!

அதிர்ஷ்டமான நிறம் :   மஞ்சள் 

அதிர்ஷ்டமான எண் : 3

வணங்க வேண்டிய தெய்வம் :  குரு பகவான் 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | CollectorNainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்Mayiladuthurai Murder | சாராய விற்ற கும்பல் தட்டிக்கேட்ட இளைஞர்கள் படுகொலை செய்த சம்பவம் | Crime

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.