வாழைப் பழங்களை சூறையிட்டு வழிபாடு செய்த கிராம மக்கள்
விவசாயம் செழிக்கவும் பெருமாளை வேண்டிக்கொள்கின்றனர். தங்களது வேண்டுதல் நிறைவேறும் பொருட்டு விழாவில் கிராம மக்கள் வாழைப்பழங்களை சூறையிட்டு வழிபடுகின்றனர்.
tதிண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே சேவுகம்பட்டி கிராமத்தில் 600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த ஊர் மக்களுக்கு விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. இந்தநிலையில் சேவுகம்பட்டி கிராம மக்கள் சார்பில் விவசாயம் செழிக்க வேண்டியும், தங்களது வேண்டுதல் நிறைவேறவும் ஒவ்வொரு ஆண்டும் கிராமத்தில் உள்ள பழமையான சோலைமலை அழகர் பெருமாள் கோவிலில் ஒன்றாக கூடி வாழைப்பழம் சூறையிடும் விழா நடத்துவது வழக்கம்.
இந்த விழா ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் 3-ந்தேதி நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் கிராம மக்கள் சோலைமலை அழகர் பெருமாள் கோவிலில் தங்களது குறைகளை நிவர்த்தி செய்யவும், விவசாயிகள் விவசாயம் செழிக்கவும் பெருமாளை வேண்டிக்கொள்கின்றனர். தங்களது வேண்டுதல் நிறைவேறும் பொருட்டு விழாவில் கிராம மக்கள் வாழைப்பழங்களை சூறையிட்டு வழிபடுகின்றனர்.
ராமஜெயம் கொலை வழக்கு : முதற்கட்டமாக 4 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை.. துப்பு துலங்குமா?
இந்தநிலையில் தை மாதம் 3-ந் தேதியான நேற்று சேவுகம்பட்டி சோலைமலை அழகர் பெருமாள் கோவிலில் வாழைப்பழம் சூறைவிடும் விழா நடைபெற்றது. இதையொட்டி கிராம மக்கள், ஊரில் உள்ள காவல் தெய்வமான ரெங்கம்மாள் கோவிலில் ஒன்றாக கூடினர். அப்போது அவர்கள் பெரிய பாத்திரங்களில் வாழைப்பழங்களை நிரப்பி, அந்த பாத்திரங்களுக்கு மாலை அணிவித்தனர். பின்னர் வாழைப்பழங்கள் நிரம்பிய பாத்திரங்களை ஆண்கள் தங்களது தலைகளில் சுமந்தபடி ஊர்வலமாக புறப்பட்டனர்.
Kerala : கேரளாவில் அதிர்ச்சி...ஒரே உணவகத்தில் சாப்பிட்ட 68 பேருக்கு வாந்தி மயக்கம்...காரணம் என்ன?
ஊரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்ற இந்த ஊர்வலம், மேளதாளம் மற்றும் வாணவேடிக்கையுடன் சோலைமலை அழகர் பெருமாள் கோவிலுக்கு வந்தது. பின்னர் வாழைப்பழங்கள் நிரம்பிய பாத்திரங்களை பெருமாள் கோவிலில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. அதன்பிறகு கிராம மக்கள் தாங்கள் கொண்டு வந்த வாழைப்பழங்களை சூறையிட்டனர். அப்போது கீழே விழுந்த வாழைப்பழங்களை பெருமாளின் பிரசாதமாக எண்ணி வயது வித்தியாசம் இன்றி பொதுமக்கள் போட்டிப்போட்டு தங்களது வீட்டிற்கு எடுத்துச்சென்றனர். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்