மேலும் அறிய

அண்டா , அண்டாவா ஆட்டுக்கறி... ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து திருவிழா - எங்கு தெரியுமா?

100 அண்டா.. மலை போல் கிடா கறி..! விடிய விடிய அணையாமல் எரிந்த அடுப்பு.. ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே கோயில் திருவிழாவில் ஆண்கள் மட்டும் பங்கேற்ற கறி விருந்து வெகு விமரிசையாக நடைபெற்றது.

அண்டா , அண்டாவா ஆட்டுக்கறி... ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து திருவிழா - எங்கு தெரியுமா?

கறி விருந்து

கோவில் திருவிழாக்களில் மட்டுமல்லாமல், விசேஷ வீடுகள் மற்றும் விசேஷங்கள் கொண்டாடக்கூடிய மண்டபங்கள் உட்பட பல்வேறு பகுதிகளில் திருவிழாக்களில், விருந்துகள் வைப்பது ஏராளமாக நடந்து வருகிறது. அதிலும் குறிப்பாக, கறி விருந்து நடப்பது என்றால் சொல்லவா வேண்டும். அப்படி திருவிழா என்றாலே, குறிப்பாக தென் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற  கோவில் திருவிழாக்களில் கறி விருந்துடன் படையல் வைக்கப்படுவதும், அதில் போட்டி போட்டுக் கொண்டு கோவில் பிரசாதங்களை வாங்கக்கூடிய பக்தர்களும், மக்களும் கூடிய திருவிழாக்கள் பல உள்ளன . அதில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே வேட்டைக்காரன் கோவில் திருவிழாவை ஒட்டி ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து நடைபெற்றது. 50க்கும் மேற்பட்ட ஆட்டுக்கிடாய்கள் 100 முட்டை அரிசி, சாதம் சமைக்கப்பட்டு அங்கு வந்திருந்த பக்தர்களுக்கு விடிய,  விடிய விருந்து நடைபெற்றது. 

Minister Anbil Mahesh: ரூ.2.152 கோடி என்ன உங்கள் வீட்டுப் பணமா?- அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்!

அண்டா , அண்டாவா ஆட்டுக்கறி... ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து திருவிழா - எங்கு தெரியுமா?

தென் மாவட்டங்களில் இது போன்ற கறி விருந்து திருவிழாக்கள் பல கோவில்களில் உள்ளன. அப்படி பார்க்கையில் மதுரை உட்பட்ட திருப்பரங்குன்றம் அருகே உள்ள கருப்புசாமி கோவில் திருவிழா நடைபெறுவதும், குறிப்பாக ஆண்கள் மட்டுமே நடத்தக்கூடிய வினோத திருவிழாக்களில் கறி விருந்து சமைக்கப்பட்டு கொடுக்கப்படுவதும் அவ்வப்போது நடைபெற்று வருகிறது.  அதே போல ராமநாதபுரம் மாவட்டம் கமுதி முதல் நாடு கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் இரண்டாவது வாரத்தில் எல்லை பிடரி அம்மன் குலதெய்வத்தை ஆண்கள் மட்டுமே கூடி வழிபடுவது வழக்கம். இப்படி பல்வேறு பகுதிகளில் ஆண்கள் மட்டும் கலந்து கொள்ளும் திருவிழாக்கள்    நடைபெற்று வருகிறது. இது போன்ற கோவில்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ளது. அப்படி ஒரு கோவில் தான் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உலுப்பகுடியில் வேட்டைக்காரன் கோயில் உள்ளது. 

வில்லனாக நடிக்கமாட்டேன் என்ற வித்யுத் ஜம்வால்..சிவகார்த்திகேயன் படத்திற்கு ஓக்கே சொன்னது எப்டி

அண்டா , அண்டாவா ஆட்டுக்கறி... ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து திருவிழா - எங்கு தெரியுமா?

விடிய, விடிய கறி விருந்து

இந்த கோவிலில் பல நூறு ஆண்டுகளாக மாசி மாதம் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழா பாரம்பரியமாக நடந்து வருகிறது. இந்த திருவிழாவில் பிறந்த பெண் குழந்தை முதல் வயதான மூதாட்டி வரையிலான பெண்கள் பங்கேற்க அனுமதி கிடையாது. விழாவில் ஆடுகள் நேர்த்திக்கடனாக கோவிலுக்கு வழங்கப்படும். இவ்வாண்டிற்கான விழாவையொட்டி நேற்று இரவு 1 மணிக்கு பொங்கல் வைத்து வழிபாட்டை துவக்கினர். பின்னர் நேர்த்திக் கடனாக செலுத்தப்பட்ட 50 ஆடுகள் பலியிடப்பட்டு சமைக்கப்பட்டன. 100 மூட்டை அரிசியில் சாதம் தயாரானது. இந்த கறி விருந்து அங்கு கூடியிருந்த சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களுக்கு சாதமும், ஆட்டுகறி குழம்பும் பிரசாதமாக பறிமாறப்பட்டது. இந்த கறி விருந்தில் புண்ணாபட்டி, காட்டுவேலம்பட்டி, முளையூர், வேலாயுதம்பட்டி, குட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆண்கள் கலந்து கொண்டனர்.

தலைப்பு செய்திகள்

திங்கட்கிழமையில் சிவபெருமானை வழிபட்டால் இவ்வளவு நன்மைகளா? - வழிபடும் முறை இதோ!
திங்கட்கிழமையில் சிவபெருமானை வழிபட்டால் இவ்வளவு நன்மைகளா? - வழிபடும் முறை இதோ!
மானாமதுரை வீர அழகர் கோயில் ஆடி பிரம்மோத்ஸவம்: சுந்தரராஜப் பெருமாள் திருக்கல்யாணம்!
மானாமதுரை வீர அழகர் கோயில் ஆடி பிரம்மோத்ஸவம்: சுந்தரராஜப் பெருமாள் திருக்கல்யாணம்!
ஆடி மாத பிரதோஷம்: சீர்காழி ஆதி ஸ்ரீ நாகேஸ்வரமுடையார் திருக்கோயிலில் திரண்ட பக்தர்கள் கூட்டம்..!
ஆடி மாத பிரதோஷம்: சீர்காழி ஆதி ஸ்ரீ நாகேஸ்வரமுடையார் திருக்கோயிலில் திரண்ட பக்தர்கள் கூட்டம்..!
சதுரகிரி ஆடி அமாவாசை: பக்தர்களுக்கு பாதுகாப்பு, வசதிகள் உறுதி செய்யப்பட்டுள்ளது !
சதுரகிரி ஆடி அமாவாசை: பக்தர்களுக்கு பாதுகாப்பு, வசதிகள் உறுதி செய்யப்பட்டுள்ளது !

வீடியோ

Thanjavur Viral Video : ”உன்ன DISMISS பண்ணியாச்சே நீ எப்படி வேலை செய்ற” ரணகளமான அரசு அலுவலகம்
Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கரூர் சம்பவம்: விஜய் வழங்கிய அரசுப்பணி ஆணை ரத்து! ஆர்டர் போட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை!
கரூர் சம்பவம்: விஜய் வழங்கிய அரசுப்பணி ஆணை ரத்து! ஆர்டர் போட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை!
CAT 2026: IIM கனவை நனவாக்கலாம்- எம்பிஏ படிப்பில் சேர ஆக.3 முதல் பதிவு, முழு விவரம்!
CAT 2026: IIM கனவை நனவாக்கலாம்- எம்பிஏ படிப்பில் சேர ஆக.3 முதல் பதிவு, முழு விவரம்!
Thirumavalavan - Vijay: முதலமைச்சர் விஜய்க்கு திருமாவளவன் திடீர் கோரிக்கை! என்ன தெரியுமா?
Thirumavalavan - Vijay: முதலமைச்சர் விஜய்க்கு திருமாவளவன் திடீர் கோரிக்கை! என்ன தெரியுமா?
CM Vijay Karnataka Visit : ’கர்நாடகா செல்லும் முதல்வர் விஜயின் பயணம் ரத்து?’ தீவிர ஆலோசனையில் முதல்வர் அலுவலகம்..!
’கர்நாடகா செல்லும் முதல்வர் விஜயின் பயணம் ரத்து?’ தீவிர ஆலோசனையில் முதல்வர் அலுவலகம்..!
US Iran War: “நிறுத்தி இருக்கோம், ஆனா நிறுத்தல“ ஈரான் மீதான தாக்குதல் குறித்து வெள்ளை மாளிகை முக்கிய அறிக்கை
“நிறுத்தி இருக்கோம், ஆனா நிறுத்தல“ ஈரான் மீதான தாக்குதல் குறித்து வெள்ளை மாளிகை முக்கிய அறிக்கை
Maruti Safest Cars: 5 ஸ்டார் ரேட்டிங் இருக்குற மாருதியோட பாகுபலி கார்கள் எது எதுன்னு தெரியுமா.? இந்தாங்க லிஸ்ட்
5 ஸ்டார் ரேட்டிங் இருக்குற மாருதியோட பாகுபலி கார்கள் எது எதுன்னு தெரியுமா.? இந்தாங்க லிஸ்ட்
Iran Vs Ukraine: இது என்னடா புது தலைவலி.?! வர்த்தக கப்பல் மீது தாக்குதல்; உக்ரைனுக்கு ஈரான் எச்சரிக்கை; நடந்தது என்ன.?
இது என்னடா புது தலைவலி.?! வர்த்தக கப்பல் மீது தாக்குதல்; உக்ரைனுக்கு ஈரான் எச்சரிக்கை; நடந்தது என்ன.?
ஒரே சார்ஜில் 140 கி.மீட்டர் மைலேஜ்.. இளைஞர்களின் இதயமாகும் Odysse Evoqis இ பைக் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 140 கி.மீட்டர் மைலேஜ்.. இளைஞர்களின் இதயமாகும் Odysse Evoqis இ பைக் - விலை எவ்ளோ?
Embed widget