மேலும் அறிய

தந்தை இறந்த 2 நாட்களில் சிரித்தாரா? வைரலான வீடியோவால் விமர்சனத்தில் பிரதீப் ராவத்தின் மகன்

பிரதீப் ராவத் மறைவுக்கு பின் சிரித்ததாக ட்ரோல் செய்யப்பட்ட மகன் விக்ரமாதித்யா, பின்னர் அழுத காட்சி வெளியாகி கவனம் பெற்றுள்ளது.

பிரபல நடிகர் பிரதீப் ராவத் மறைந்து இரண்டு நாட்களே ஆன நிலையில், அவரது மகன் விக்ரமாதித்யா ராவத் வீட்டின் முன்பு பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்கள் திரண்டிருந்தபோது சிரித்தபடி காணப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்தக் காட்சியை பார்த்த பலரும், தந்தையின் மரணத்துக்கு பிறகும் அவர் சிரிப்பது ஏன் எனக் கேள்வி எழுப்பி, கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

ஆனால், இதே நிகழ்வைச் சேர்ந்த மற்றொரு வீடியோவில் விக்ரமாதித்யா உணர்ச்சிவசப்பட்டு அழுதபடி காணப்படுகிறார். இதனால், கேமராக்கள் சூழ்ந்திருந்த அந்த நேரத்தில் அவர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று தெரியாமல் சிரித்திருக்கலாம் என்றும், அந்த ஒரு காட்சியை மட்டும் வைத்து அவரது துக்கத்தை மதிப்பிடுவது சரியல்ல என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பிரதீப் ராவத்தின் மரணம்

பிரதீப் ராவத் ஆகஸ்ட் 4ஆம் தேதி தனது 74வது வயதில் உயிரிழந்தார். நீண்ட காலமாக புற்றுநோயுடன் போராடி வந்த அவருக்கு நோய் மீண்டும் தீவிரமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது மகன் விக்ரமாதித்யா, தந்தையின் இறுதி தருணங்களை நினைவுகூரும்போது, மருத்துவர்கள் அவருக்கு CPR வழங்கியதை பார்த்தபோதுதான் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்ததாக தெரிவித்துள்ளார்.

பிரதீப் ராவத் இந்திய சினிமாவில் வில்லன் கதாபாத்திரங்களுக்காக தனி அடையாளத்தை உருவாக்கியவர். இந்தி திரையுலகில் லாகான், சர்ஃபரோஷ், கஜினி உள்ளிட்ட படங்களில் நடித்த அவர், தொலைக்காட்சியில் மகாபாரதம் தொடரில் அஸ்வத்தாமா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகப்பெரிய கவனத்தை பெற்றார்.

தமிழில் நடித்த் படங்கள்

தமிழ் சினிமாவிலும் பிரதீப் ராவத்தின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. தொட்டி ஜெயா, கஜினி, சபரி, வாத்தியார், அசல் உள்ளிட்ட படங்களில் அவர் நடித்துள்ளார். குறிப்பாக சூர்யா நடித்த கஜினி படத்தில் லக்ஷ்மண் மற்றும் ராம் என்ற இரட்டை வேடங்களில் அவர் நடித்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

மேலும் எலி, ஜில்லா, வீரம், குலுகுலு, டிடி ரிட்டர்ன்ஸ் உள்ளிட்ட படங்களிலும் அவர் நடித்துள்ளார். தென்னிந்திய மொழிப் படங்களிலும் தொடர்ந்து வலுவான கதாபாத்திரங்களில் தோன்றியவர் பிரதீப் ராவத்.

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
Karthigai Deepam: மாட்டிக்கொண்ட மாயா, மகேஷ்.. உஷாரான கார்த்திக்! அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: மாட்டிக்கொண்ட மாயா, மகேஷ்.. உஷாரான கார்த்திக்! அடுத்து நடக்கப்போவது என்ன?
Actress Kasthuri: சகோதரரிடம் பேசுவதை கூட வக்கிரமாகச் சித்தரிப்பதா? - நெட்டிசன்களுக்கு கஸ்தூரி கடும் கண்டனம்!
Actress Kasthuri: சகோதரரிடம் பேசுவதை கூட வக்கிரமாகச் சித்தரிப்பதா? - நெட்டிசன்களுக்கு கஸ்தூரி கடும் கண்டனம்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்
Abhijeet Dipke : ”பாட்டி இறந்ததை சொல்லலயா?”பொய் சொன்னாரா அபிஜீத் திப்கேவீடியோ ஆதாரத்துடன் வந்த போலீஸ்
Car bike accident : மொத்தமாக பறந்த பைக்! நூலிழையில் தப்பிய இளைஞர்! பகீர் சிசிடிவி காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
ஒரே சார்ஜில் 625 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகியது வால்வோவின் புதிய Volvo EX90 மின்சார கார்! விலை எம்புட்டு?
ஒரே சார்ஜில் 625 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகியது வால்வோவின் புதிய Volvo EX90 மின்சார கார்! விலை எம்புட்டு?
’சத்துணவிற்கான கொண்டக்கடலை, பச்சை பயிறு கொள்முதலில் சுணக்கம்’ கேக் வாங்க டெண்டர் விட்ட தவெக அரசு..!
’சத்துணவிற்கான கொண்டக்கடலை கொள்முதலில் சுணக்கம்’ கேக் டெண்டருக்கு துரிதம்..!
Embed widget