“கேட்டது கிடைக்கும், நினைத்தது நடக்கும்” ; கருப்பணசாமிக்கு 3 ஆயிரம் அரிவாள்கள் நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
உலோகத்தால் செய்த அரிவாள்களில் பித்தளை மணிகளுடன் 2-அடி முதல்-15 அடி வரை காணிக்கை செலுத்துகின்றனர்.
வத்தலகுண்டு அருகே ஆயிரம் அரிவாள் கருப்பணசாமி கோவிலுக்கு பக்தர்கள் நேர்த்திக்கடனாக 3000 அரிவாள்களை செலுத்தி வழிபாடு நடத்திய வினோத திருவிழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகில் உள்ளது சிறிய கிராமம் முத்துலாபுரம். இங்கே பிரசித்தி பெற்ற ஆயிரம் அரிவாள் கோட்டை கருப்பண சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலில் மக்கள் தங்களது நேர்த்திக் கடன்களை அரிவாளை காணிக்கையாக செலுத்துகின்றனர். மேலும் தங்களது பிரார்த்தனை நிறைவேறும் என்ற நம்பிக்கை இக்கோயிலுக்கு வரும் அனேக பக்தர்களுக்கும் உள்ளது.
இக்கோயிலில் சுமார் 50-வருடங்களுக்கு முன்னால் கோயில் அமைந்திருக்கும் வேப்பமரத்தில் பால் வந்ததாகவும் அதை கொண்டு போய் தங்களுக்கு ஏற்பட்ட பிணிகளை தீர்க்க அந்த பாலியினை பயன்படுத்தியதாகவும் அதனால் தங்களது பிணிகள் தீர்ந்ததாகவும் இவ்வூர் மக்கள் கூறுகின்றனர். தற்பொழுதும் அந்த வேப்பமரம் உள்ளது. மேலும் இக்கோயிலில் காணிக்கையாக செலுத்தும் அரிவாள்கள் கோவிலில் சுமார் 200, 300 வருடங்களாக வழக்கத்தில் உள்ளது. கேட்டது கிடைக்கும் நினைத்தது நடக்கும் என்ற நம்பிக்கை ஊர் மக்களிடம் உள்ளது.
இக்கோயில் ஒவ்வொரு வருடமும் தை 3-ம் தேதி சிறப்பாக திருவிழா நடைபெறுகிறது. அச்சமயத்தில் உள்ளூர் மக்களும் வெளியூர் மக்களும் கலந்து கொள்வார்கள். கிடா வெட்டி அன்னதானமும் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து இரவு விழாவின் சிறப்பு நிகழ்வாக பட்டு கட்டுதல் அதைத்தொடர்ந்து பரம்பரை ஆசாரியர்கள் செய்த அரிவாளை மக்கள் காணிக்கையாக ஊர்வலமாக வந்து கருப்பணசாமிக்கு செலுத்துவார்கள்.
Sri Sri Ravishankar: ராமரே அதைத்தான் செஞ்சார்.. அது ஒன்னும் தப்பில்ல..ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் விளக்கம்!
அந்த அரிவாளை கோவிலில் மேல்புறத்தில் காணிக்கையாக கொண்டு வந்து அரிவாளை மேலே அடுக்கி வைத்து விடுகின்றனர். உலோகத்தால் செய்த அரிவாள்களில் பித்தளை மணிகளுடன் 2-அடி முதல்-15 அடி வரை காணிக்கை செலுத்துகின்றனர். ஒவ்வொரு வருடமும் ஒரே நாளில் கொண்டாடப்படும் இத்திருவிழாவில் நூற்றுக்கணக்காக இருந்த காலம் மாறி தற்போது 1000 முதல் 3000 என்ற கணக்கில் வருடாவருடம் காணிக்கை செலுத்தும் பொதுமக்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகின்றது.