மேலும் அறிய

T20I Rankings: வெளியான ஐசிசி டி20 தரவரிசை பட்டியல்.. டாப் 10க்குள் நுழைந்த ஜெய்ஸ்வால், அக்சர் படேல்..!

யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஏழு இடங்கள் முன்னேறி 739 ரேட்டிங் புள்ளிகளுடன் டாப்-10க்குள் நேரடியாக நுழைந்து ஆறாவது இடத்தை பிடித்தார்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம், அக்சர் படேல் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் டி20 தரவரிசை பட்டியலில் டாப் 10க்குள் நுழைந்துள்ளனர். இந்தியாவின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் அக்சர் படேல், சமீபத்திய ஐசிசி ஆடவர் டி20 பந்துவீச்சாளர் தரவரிசையில்  ஐந்தாவது இடத்தை எட்டியுள்ளார். அதே நேரத்தில் தொடக்க பேட்ஸ்மேன் யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் ஆறாவது இடத்தை அடைந்துள்ளார். 

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் இரண்டு டி20 சர்வதேசப் போட்டிகளில் அக்சர் படேல் 23 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்து 2 விக்கெட்டுகளையும், 16 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்து 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். இதன்மூலம், டி20 ஆல்ரவுண்டர்கள் தரவரிசை பட்டியலில் இரண்டு இடங்கள் முன்னேறி 16வது இடத்தை பிடித்தார்.

பேட்டிங் தரவரிசை: 

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரின் முதல் போட்டியில் யஷஸ்வி விளையாட முடியவில்லை. இரண்டாவது டி20யில் களமிறங்கிய அவர், 68 ரன்கள் குவித்து அற்புதமான இன்னிங்ஸை விளையாடினார். இதன்மூலம், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஏழு இடங்கள் முன்னேறி 739 ரேட்டிங் புள்ளிகளுடன் டாப்-10க்குள் நேரடியாக நுழைந்து ஆறாவது இடத்தை பிடித்தார். இதற்கிடையில், இடது கை பேட்ஸ்மேன் ஷிவம் துபே 60 மற்றும் 63 ரன்கள் என்ற தொடர்ச்சியான அரை சதங்களால் 265 வது இடத்தில் இருந்து 58 வது இடத்திற்கு முன்னேறினார்.

இந்திய அணியை சேர்ந்த மூன்று பேட்ஸ்மேன்கள் இப்போது டாப்-10க்குள் உள்ளனர். தரவரிசையில் பட்டியலில் இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் 869 ரேட்டிங் புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். சூர்யா ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரில் விளையாடவில்லை. இருப்பினும், தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.

இந்திய அணியின் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் 7 இடங்கள் முன்னேறி 60வது இடத்தையும், இடது கை பேட்ஸ்மேன் திலக் வர்மா 3 இடங்கள் முன்னேறி 61வது இடத்தையும் அடைந்துள்ளனர்.

பேட்டிங் தரவரிசை பட்டியல்: 

டி20 பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலில் சூர்யகுமார் யாதவ் 869 ரேட்டிங் புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். இங்கிலாந்து பேட்ஸ்மேன் பில் சால்ட் 802 ரேட்டிங் புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வான் 775 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் பாபர் அசாம் ஒரு இடம் முன்னேறி 763 ரேட்டிங் புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும், தென்னாப்பிரிக்காவின் எய்டன் மார்க்ரம் ஒரு இடத்தை இழந்து 755 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளனர்.

யஷஸ்வி ஜெய்ஸ்வாக் ஆறாவது இடத்திலும், தென்னாப்பிரிக்காவின் ரிலே ரூசோ ஏழாவது இடத்திலும் உள்ளனர். அவர் 689 புள்ளிகள் பெற்றுள்ளார். இங்கிலாந்து கேப்டன் பட்லர் 680 ரேட்டிங் புள்ளிகளுடன் எட்டாவது இடத்துக்கும், கெய்க்வாட் 661 ரேட்டிங் புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்துக்கும் சரிந்துள்ளனர். தென்னாப்பிரிக்காவின் ரீசா ஹென்ட்ரிக்ஸ் 660 ரேட்டிங் புள்ளிகளுடன் 10வது இடத்தில் உள்ளார்.

பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியல்: 

பந்துவீச்சு தரவரிசையில் இங்கிலாந்தின் அனுபவமிக்க லெக் ஸ்பின்னர் அடில் ரஷித் முதலிடத்தில் உள்ளார். அதேசமயம், வெஸ்ட் இண்டீஸின் அகில் உசேன் இரண்டாவது இடத்தில் உள்ளார். இந்தியாவின் ரவி பிஷ்னோய் ஆறாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இந்திய அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் 4 இடங்கள் முன்னேறி 21வது இடத்தைப் பிடித்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Sooryavanshi: யாரு போட்டாலும் அடிப்பேன்! லெஜண்ட் பவுலர்களுக்கே தலைவலியாக உருவெடுத்த சூர்யவன்ஷி!
Sooryavanshi: யாரு போட்டாலும் அடிப்பேன்! லெஜண்ட் பவுலர்களுக்கே தலைவலியாக உருவெடுத்த சூர்யவன்ஷி!
Mukul Choudhary: குட்டிப்பயா யாருடா நீ? ”பிறப்பதற்கு முன்பே கிரிக்கெட்டராக சபதம்” தோனியின் சிஷ்யன் முகுல் சவுத்ரி
Mukul Choudhary: குட்டிப்பயா யாருடா நீ? ”பிறப்பதற்கு முன்பே கிரிக்கெட்டராக சபதம்” தோனியின் சிஷ்யன் முகுல் சவுத்ரி
GT Vs DC: கடைசி ஓவரில் போட்டியை புரட்டிய குஜராத் - மில்லர் செய்த தவறு, டெல்லி வீழ்ந்தது எப்படி? புள்ளிப்பட்டியல்
GT Vs DC: கடைசி ஓவரில் போட்டியை புரட்டிய குஜராத் - மில்லர் செய்த தவறு, டெல்லி வீழ்ந்தது எப்படி? புள்ளிப்பட்டியல்
மதுபோதையில் வாகனம் ஓட்டிய டேவிட் வார்னர்! போலீஸ் சோதனையில் கைது... ஷாக்கில் கிரிக்கெட் ரசிகர்கள்
மதுபோதையில் வாகனம் ஓட்டிய டேவிட் வார்னர்! போலீஸ் சோதனையில் கைது... ஷாக்கில் கிரிக்கெட் ரசிகர்கள்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay Manifesto: “சட்டமன்ற நிகழ்வுகளில் மாற்றம், ஏஐ பல்கலைக்கழகம், ஏஐ அமைச்சகம்“; விஜய் அள்ளிவிட்ட வாக்குறுதிகள்
“சட்டமன்ற நிகழ்வுகளில் மாற்றம், ஏஐ பல்கலைக்கழகம், ஏஐ அமைச்சகம்“; விஜய் அள்ளிவிட்ட வாக்குறுதிகள்
TVK Vijay: “லஞ்சம் இல்லாமல் நலத்திட்டங்கள், அதிகாரிகள் மீது நடவடிக்கை“ அதிரடி வாக்குறுதிகளை அளித்த விஜய்
“லஞ்சம் இல்லாமல் நலத்திட்டங்கள், அதிகாரிகள் மீது நடவடிக்கை“ அதிரடி வாக்குறுதிகளை அளித்த விஜய்
Mojtaba Khamenei: “உயிரோட தான் இருக்கார், ஆனா...“; ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி பற்றி வெளியான முக்கிய தகவல்
“உயிரோட தான் இருக்கார், ஆனா...“; ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி பற்றி வெளியான முக்கிய தகவல்
Asha Bhosle Death: 12 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடிய பாடகி ஆஷா போஸ்லே மறைவு.. திரையுலகினர் சோகம்!
Asha Bhosle Death: 12 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடிய பாடகி ஆஷா போஸ்லே மறைவு.. திரையுலகினர் சோகம்!
TVK Vijay: விஜய்க்கு தகுதியே இல்ல.. இளைஞர்களை ஏமாற்றுகிறார்.. கார்த்தி சிதம்பரம் விமர்சனம்!
TVK Vijay: விஜய்க்கு தகுதியே இல்ல.. இளைஞர்களை ஏமாற்றுகிறார்.. கார்த்தி சிதம்பரம் விமர்சனம்!
Akshaya Tritiya 2026: அட்சய திருதியை - எந்த 4 ராசிக்காரர்களுக்கு பணம் கொட்டும்? தங்கம் வாங்க சரியான நேரம் என்ன?
Akshaya Tritiya 2026: அட்சய திருதியை - எந்த 4 ராசிக்காரர்களுக்கு பணம் கொட்டும்? தங்கம் வாங்க சரியான நேரம் என்ன?
USA Iran War: இஷ்டத்துக்கு ரூல்ஸ் போட்ட அமெரிக்கா..! ஈரானுடன் தோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தை - என்ன கேட்டாங்க?
USA Iran War: இஷ்டத்துக்கு ரூல்ஸ் போட்ட அமெரிக்கா..! ஈரானுடன் தோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தை - என்ன கேட்டாங்க?
Jana Nayagan: ஜனநாயகன் ரிலீஸ்.. பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Jana Nayagan: ஜனநாயகன் ரிலீஸ்.. பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Embed widget