மேலும் அறிய

கடன் தொல்லையா? ஒரே ஒரு தடவை இந்த கோயில்களுக்கு போயிட்டு வாங்க.. அப்புறம் பாருங்க

வாழ்வில் கடன் பிரச்சினை தீர கட்டாயம் செல்ல வேண்டிய திருக்கோயில்கள் என்னென்ன? என்பதை கீழே காணலாம்.

ஒவ்வொரு திருத்தலங்களுக்கும் ஒவ்வொரு தனித்தன்மையும், ஸ்தல வரலாறும் உள்ளது. ஒவ்வொரு கோயில்களுக்கும் நாம் சென்று வரும்போது நாம் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் தீரும் என்பது பக்தர்களின் ஐதீகம் ஆகும்.

இன்று பலரும் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சினையாக இருப்பது கடன் பிரச்சினை. கடன் பிரச்சினையில் இருந்து மீள்வதற்கு எந்தெந்த கோயில்களுக்கு செல்லலாம்? என்பதை கீழே காணலாம்.

சவுரிராஜ பெருமாள் கோயில்:

நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஏராளமான புண்ணிய தலங்கள் உள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ளது திருமருகல். இந்த பகுதிக்கு அருகே அமைந்துள்ள திருக்கோயில் திருக்கண்ணாபுரம் சவுரிராஜப் பெருமாள் திருக்கோயில் ஆகும். திருமாலின் 108 திவ்யதேசங்களில் ஒன்றாக இந்த கோயில் உள்ளது. இந்த கோயிலில் உள்ள மூலவர் நீலமேகப் பெருமாள் என்று அழைக்கப்படுகிறார். இந்த கோயிலுக்குச் சென்று பெருமாளை மனமுருக வேண்டினால் நமது கடன் தொல்லை தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும். இந்த பெருமாள் பக்தர்களின் பாவங்களை தானமாக வாங்கிக்கொண்டு, பக்தர்களின் தோஷங்களை நீக்கும் வல்லமை கொண்டவராக கருதப்படுகிறார்.

திருச்சேறை சாரபரமேஸ்வரர் கோயில்:

கோயில் நகரமான கும்பகோணம் அருகே அமைந்துள்ள கோயில் திருச்சேறை சாரபரமேஸ்வரர் திருக்கோயில். புகழ்பெற்ற சிவன் கோயிலான இந்த கோயிலில் வீற்றிருக்கும் சிவபெருமானை கடன் நிவர்த்தீஸ்வரர் என்று பக்தர்கள் போற்றுகின்றனர். இந்த கோயில் 11 சோமவாரங்களில் அதாவது 11 திங்கட்கிழமையில் தொடர்ந்து சிவபெருமானை வணங்கி கடன் தொல்லைகள் நீங்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கையாக உள்ளது.

கடும்பாடி சின்னம்மன் கோயில்:

சென்னையின் முக்கியமான நகரமாக திகழும் சைதாப்பேட்டையில் அமைந்துள்ள கடும்பாடி சின்னம்மன் கோயில். புற்றுவடிவில் சுயம்பாக தோன்றியதால் இந்த கோயில் மிக மிக பிரபலமான கோயிலாக திகழ்கிறது. இந்த கடும்பாடி சின்னம்மன் கோயில் சைதை மக்களின் குலதெய்வமாகவும், இஷ்ட தெய்வமாகவும், காவல் தெய்வமாகவும் உள்ளது. இந்த கோயிலில் மனமுருகி வேண்டிக்கொண்டால் கடன் பிரச்சினை தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும். 

தாண்டிக்குடி பாலமுருகன் கோயில்:

திண்டுக்கல் மாவட்டத்தில் புகழ்பெற்ற கொடைக்கானலில் அமைந்துள்ளது தாண்டிக்குடி. இங்கு அமைந்துள்ளது பாலமுருகன் கோயில். இந்த கோயிலுக்கு நேரில் சென்று இங்குள்ள முருகனை வழிபட்ட பிறகு, அங்குள்ள பைரவரை வணங்கினால் கடன் தொல்லை நீங்கும் என்பது நம்பிக்கை. மேலும், கடன் தொல்லைகளில் இருந்தும் விடுபடலாம் என்பதும் நம்பிக்கை ஆகும். 

Advertisement

தலைப்பு செய்திகள்

Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
கும்பகோணம் அருகே நூதன அக்னி ஆணி தீமிதி திருவிழா: நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
கும்பகோணம் அருகே நூதன அக்னி ஆணி தீமிதி திருவிழா: நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
அனல் பறந்த தீக்குண்டம்... சிலிர்க்க வைத்த பக்தி! மாமாகுடி மாரியம்மன் கோயிலில் திரண்ட பக்தர்கள்!
அனல் பறந்த தீக்குண்டம்... சிலிர்க்க வைத்த பக்தி! மாமாகுடி மாரியம்மன் கோயிலில் திரண்ட பக்தர்கள்!
Aadi Perukku: ஆகஸ்ட் 3ம் தேதி ஆடிப்பெருக்கு.. தாலிக்கயிறு மாற்ற உகந்த நேரம் எது? - நோட் பண்ணுங்க!
Aadi Perukku: ஆகஸ்ட் 3ம் தேதி ஆடிப்பெருக்கு.. தாலிக்கயிறு மாற்ற உகந்த நேரம் எது? - நோட் பண்ணுங்க!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vs DMK:
"கொத்தூஸ் ஐடி விங் கவனத்திற்கு" திமுகவிற்கு டேட்டாக்களுடன் பதிலடி கொடுத்த தவெக..! எது உண்மை?
TN Weather News: 6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
CNG SUV: 28.51KM மைலேஜ்..! டாப் 5 சிஎன்ஜி எஸ்யுவிக்கள் - விலை, வசதி , அம்சங்கள், ரேட்டிங் - முழு விவரம் இதோ
28.51KM மைலேஜ்..! டாப் 5 சிஎன்ஜி எஸ்யுவிக்கள் - விலை, வசதி , அம்சங்கள், ரேட்டிங் - முழு விவரம் இதோ
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
Embed widget