மேலும் அறிய

அனல் பறந்த தீக்குண்டம்... சிலிர்க்க வைத்த பக்தி! மாமாகுடி மாரியம்மன் கோயிலில் திரண்ட பக்தர்கள்!

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே மாமாகுடி ஸ்ரீ சீதளா பரமேஸ்வரி மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

தரங்கம்பாடி: மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகாவிற்கு உட்பட்ட மாமாகுடி கிராமத்தில் அமைந்திருக்கும் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சீதளா பரமேஸ்வரி மாரியம்மன் திருக்கோவிலில், ஆண்டின் முக்கியத் திருவிழாவான தீமிதி உற்சவம் நேற்றிரவு வெள்ளிக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தீமிதித்தும், சுவாமி தரிசனம் செய்தும் அம்மனின் அருளைப் பெற்றனர்.

பத்து நாள் உற்சவம் மற்றும் வீதி உலா

ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் நடைபெறும் இத்திருக்கோவில் தீமிதி பெருவிழா, கடந்த 23-ஆம் தேதி திங்கள்கிழமை அதிகாலை கணபதி ஹோமத்துடன் தொடங்கி கொடியேற்றம் மற்றும் காப்புக்கட்டுதலுடன் முறைப்படி தொடங்கியது. விழா நாட்களில் நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு, பல்வேறு வாகனங்களில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விழாவின் ஒன்பதாம் நாளான நேற்று முன்தினம் அம்மனுக்கு சிறப்பு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நேற்றிரவு நடைபெற்றது.

பெருமாள் கோயில் குளக்கரையில் சக்தி கரகம் புறப்பாடு

தீமிதி விழாவை முன்னிட்டு அதிகாலை முதலே அம்மனுக்கு சிறப்பு மஞ்சள், பால், தயிர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் அம்மன் சிறப்பு மலர் அலங்காரத்தில் அருள் பாலித்தார். மாலை விரதம் இருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் மாமாகுடி பெருமாள் கோயில் குளக்கரையில் ஒன்று திரண்டனர். அங்கு அவர்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, சக்தி கரகம் மற்றும் பூங்கரகம் ஜோடிக்கப்பட்டு புறப்பாடு நடைபெற்றது. காப்பு கட்டி, கடுமையான விரதமிருந்த பக்தர்கள் சக்தி கரகம் முன்னே செல்ல, மேளதாள வாத்தியங்கள் மற்றும் அதிர்வேட்டுகள் முழங்க ஊர்வலமாகப் புறப்பட்டனர்.

பக்தி பரவசத்தில் தீமிதித்த பக்தர்கள்

சக்தி கரகம் முக்கிய வீதிகள் வழியாக ஆலயம் வந்தடைந்தது. கோவில் வளாகத்தின் எதிரே பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில், அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி காட்சி தந்தார். தீக்குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டதும், முதலில் சக்தி கரகம் ஏந்திய பூசாரி தீக்குண்டத்தில் இறங்கி தீமிதியை தொடக்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து காப்பு கட்டிய ஆயிரக்கணக்கான ஆண் மற்றும் பெண் பக்தர்கள் பக்தியுடன் அம்மா மகமாயி..." என்ற பக்தி கோஷங்கள் விண்ணைப் பிளக்க, ஒன்றன்பின் ஒன்றாக இறங்கி தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினர். சில பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனாகக் குழந்தைகளை ஏந்தியபடியும், அலகு குத்தியபடியும் தீமிதித்து பக்தி பரவசத்தை வெளிப்படுத்தினர்.

சிறப்பு வீதி உலா மற்றும் அன்னதானம்

தீமிதி விழா நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, இரவு அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டு, புஷ்ப பல்லக்கில் அம்மன் வீதி உலா நடைபெற்றது. மாமாகுடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த திரளான பொதுமக்கள் இந்த விழாவில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

கோவில் நிர்வாகம் சார்பில் வந்திருந்த அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் மற்றும் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. விழாவிற்கான ஏற்பாடுகளை மாமாகுடி கிராம முக்கியஸ்தர்கள், திருக்கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் இணைந்து மிகச் சிறப்பாகச் செய்திருந்தனர். அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க காவல்துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

திருச்செந்தூர் செல்லும் பக்தர்களுக்கு குட் நியூஸ்...'நோ கட்டணம்'!.. அமைச்சரின் அசத்தல் அறிவிப்பு!
திருச்செந்தூர் செல்லும் பக்தர்களுக்கு குட் நியூஸ்...'நோ கட்டணம்'!.. அமைச்சரின் அசத்தல் அறிவிப்பு!
தொட்டில் கட்டினால் குழந்தை பாக்கியம் நிச்சயம்! - வேலூர் ஆதி பச்சையம்மன் கோவிலின் மகிமை!
தொட்டில் கட்டினால் குழந்தை பாக்கியம் நிச்சயம்! - வேலூர் ஆதி பச்சையம்மன் கோவிலின் மகிமை!
பக்தர்கள் கவனத்திற்கு! செப்.1 முதல் காஞ்சிபுரம் கோயிலில் அமலுக்கு வரும் செக் மேட்.. நிர்வாகத்தின் அதிரடி முடிவு!
பக்தர்கள் கவனத்திற்கு! செப்.1 முதல் காஞ்சிபுரம் கோயிலில் அமலுக்கு வரும் செக் மேட்.. நிர்வாகத்தின் அதிரடி முடிவு!
மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் 2026: பாதுகாப்பு, வசதிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு!
மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் 2026: பாதுகாப்பு, வசதிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
தலைமைச் செயலாளர் மீது அதிருப்தி: நாளை போராட்டத்தில் குதிக்கும் சிபிஎம் - காரணம் என்ன?
தலைமைச் செயலாளர் மீது அதிருப்தி: நாளை போராட்டத்தில் குதிக்கும் சிபிஎம் - காரணம் என்ன?
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
Mahindra Car Offers: ரூபாய் 1.25 லட்சம் ஆஃபர்.. 6 கார்களுக்கு தள்ளுபடியை அள்ளித் தந்த மஹிந்திரா - எந்தெந்த காருக்கு?
Mahindra Car Offers: ரூபாய் 1.25 லட்சம் ஆஃபர்.. 6 கார்களுக்கு தள்ளுபடியை அள்ளித் தந்த மஹிந்திரா - எந்தெந்த காருக்கு?
Embed widget