மேலும் அறிய

Aadi Perukku: ஆகஸ்ட் 3ம் தேதி ஆடிப்பெருக்கு.. தாலிக்கயிறு மாற்ற உகந்த நேரம் எது? - நோட் பண்ணுங்க!

ஆடிப்பெருக்கு 2026 வரும் ஆகஸ்ட் 3ம் தேதி திங்கட்கிழமை வருகிறது. இந்நாளில் தாலிக்கயிறு மாற்றுதல், தாலிச்சரடு மாற்றுதல், நகை மற்றும் நிலம் வாங்குதல், புது காரியங்களை தொடங்குதல் ஆகியவை செய்வார்கள்.

2026ம் ஆண்டு ஆடிப்பெருக்கு வெகுவிமரிசையாக கொண்டாடப்பட உள்ள நிலையில் அன்றைய நாளில் தாலிக்கயிறு மாற்ற நல்ல நேரம் எதுவென்று காணலாம். 

ஆடிப்பெருக்கு - ஆடி 18ம் நாள்

ஆடி மாதம் என்றாலே ஆன்மிக மாதம் என அழைப்பார்கள். இத்தகைய ஆடி மாதம் பெண் தெய்வங்களுக்குரியது. ஆடி மாதம் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமை ஆகியவை வெகு விசேஷ தினங்களாக கருதப்படும். அதுமட்டுமல்லாமல் இம்மாதத்தில் ஆடி பௌர்ணமி, ஆடி அமாவாசை, ஆடிப்பெருக்கு, ஆடித்தபசு, ஆடி இறுதி ஆகியவை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த நாளாக இந்து மதத்தில் பார்க்கப்படுகிறது. 

இதில் ஆடி மாதம் 18ம் நாள் கொண்டாடப்படும் ஆடிப்பெருக்கு திருவிழா மிகச் சிறப்பான முறையில் தமிழர்களால் கடைபிடிக்கப்படும். மற்ற இந்து மத பண்டிகைகள் அனைத்தும் திதி அடிப்படையில் கொண்டாடப்படும் நிலையில் ஆடிப்பெருக்கு மட்டும் தான் நாள் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும் ஒரு விசேஷ நாளாக பார்க்கப்படுகிறது. 

2026ல் ஆடிப்பெருக்கு எப்போது?

ஆடிப்பெருக்கு 2026 வரும் ஆகஸ்ட் 3ம் தேதி திங்கட்கிழமை வருகிறது. தேய்பிறை பஞ்சமி திதியில் உத்திரட்டாதி நட்சத்திரத்துடன் கூடிய இந்நாளில் தாலிக்கயிறு மாற்றுதல், தாலிச்சரடு மாற்றுதல், நகை மற்றும் நிலம் வாங்குதல், புது காரியங்களை தொடங்குதல் ஆகியவை செய்வார்கள். ஆடி மாதம் எவ்வித நல்ல காரியம் செய்ய மாட்டார்கள் என பொதுவாக சொல்லப்பட்டாலும் ஆடிப்பெருக்கு நாளில் செய்வதால் அதன் பலன் பல மடங்கு பெருகும் என்பது ஐதீகமாக பார்க்கப்படுகிறது. 

Also Read: கடன் தொல்லையா? ஒரே ஒரு தடவை இந்த கோயில்களுக்கு போயிட்டு வாங்க.. அப்புறம் பாருங்க

தாலிக்கயிறு மாற்ற நல்ல நேரம் எது?

திங்கட்கிழமை என்பதால் அன்றைய நாளில் காலை 9.15 முதல் 10.15 மணி வரை உள்ளது. மாலையில் 04.45 மணி முதல் 05.45 மணி வரை உள்ளது. அதேசமயம் கௌரி நல்ல நேரம் மதியம் 1.45 முதல் 2.45 மணி வரையும் உள்ளது. இராகு காலம் காலை 7.30 மணி முதல் 9 மணி வரையும், குளிகை மதியம் 1.30 மணி முதல் 3 மணி வரையும், எமகண்டம் காலை 10.30 மணி முதல் 12 மணி வரையும் உள்ளது. 

இன்றைய நாளில் அந்த நாளில் இராகு காலம், குளிகை, எமகண்டம்  தவிர்த்து மற்ற நேரங்களில் நாம் வீட்டிலோ, நீர் நிலைகளின் கரைகளிலோ அல்லது கோவிலிலோ தாலிக்கயிறு மாற்றிக் கொள்ளலாம். சூரிய உதயமான பிறகு காலை 6 மணி முதல் 7.30 மணிக்குள்ளும் தாலிக்கயிறு அல்லது சரடு மாற்றி விடலாம். இன்றைய நாளில் தங்கம், நிலம், நல்ல காரியம் செய்ய நினைப்பவர்கள் மேற்குறிப்பிட்ட நேரங்களில் செய்யலாம். ஆடிப்பெருக்கு நாளில் எது செய்வதாக இருந்தாலும் அதற்குரிய பூஜை மற்றும் நடைமுறைகளை மேற்கொண்டு செய்ய வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது. 

 

Advertisement

தலைப்பு செய்திகள்

ஆழ்வார் காய்கறி பயிரிட்ட பெருந்தோட்ட கிராமத்தில் நடைபெற்ற மகா கும்பாபிஷேகம் விழா - ஆதிகேசவ பெருமாள் அருளை பெற்ற பக்தர்கள்..!
ஆழ்வார் காய்கறி பயிரிட்ட பெருந்தோட்ட கிராமத்தில் நடைபெற்ற மகா கும்பாபிஷேகம் விழா - ஆதிகேசவ பெருமாள் அருளை பெற்ற பக்தர்கள்..!
வானில் வட்டமிட்ட கருடன்... சேத்திரபாலபுரம் பெருமாள் கோயில் பக்தர்கள் பரவசம்..
வானில் வட்டமிட்ட கருடன்... சேத்திரபாலபுரம் பெருமாள் கோயில் பக்தர்கள் பரவசம்..
மதுரை மீனாட்சி கும்பாபிஷேகம்: பக்தர்கள் வசதிகளுக்கான பணிகள் தீவிரம் !
மதுரை மீனாட்சி கும்பாபிஷேகம்: பக்தர்கள் வசதிகளுக்கான பணிகள் தீவிரம் !
வேளாங்கண்ணி பெருவிழா: பக்தர்களின் வசதிக்காக கூடுதல் ஏசி பெட்டிகளுடன் இயங்கும் சிறப்பு ரயில்கள்..இதோ முழு விவரம்...
வேளாங்கண்ணி பெருவிழா: பக்தர்களின் வசதிக்காக கூடுதல் ஏசி பெட்டிகளுடன் இயங்கும் சிறப்பு ரயில்கள்..இதோ முழு விவரம்...
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Gold rate today : தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு.! சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு- வெள்ளி விலையும் இப்படியா.!!
தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு.! சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு- வெள்ளி விலையும் இப்படியா.!!
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM Vijay Amit Shah: ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
MRTC Metro: மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
Police Bribe Complaint : போலீஸ் லஞ்சம் கேட்கிறார்களா? உடனே புகார் கொடுங்க! மாவட்டம் வாரியாக மொபைல் எண்கள் வெளியீடு
போலீஸ் லஞ்சம் கேட்கிறார்களா? உடனே புகார் கொடுங்க! மாவட்டம் வாரியாக மொபைல் எண்கள் வெளியீடு
Embed widget