மேலும் அறிய

பழனி கிரிவல பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிய வழக்கு ; கால அவகாசம் கொடுத்து அகற்ற நீதிபதி உத்தரவு !

ஆக்கிரமிப்புகளை எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து  தாசில்தார்  தரப்பில் பதில் மனு  தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்

பழனி கோயில் சுற்றி, கோயிலுக்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமித்து உள்ள ஆக்கிரமிப்பாளர்களில்   மாற்று இடம் செல்ல மறுக்கும் ஆக்கிரமிப்பாளர்களை கண்டறிந்து,  அவர்களுக்கு 24 மணிநேர கால அவகாசம் வழங்க வேண்டும். அதன் பின்  மாற்று இடம் செல்ல மறுக்கும் ஆக்கிரமிப்பாளர்களை,  தாசில்தார் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற கிளை உத்தரவு.
 
பழனி கிரிவல பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிய வழக்கு
 
ராதாகிருஷ்ணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில்,”திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயில் உலகப்பிரசித்தி பெற்ற கோயிலாகும். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பழனி முருகன் கோயிலுக்கு வருடம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.
 
இந்நிலையில் கிரிவலப்பாதையில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளன. ஆக்கிரமிப்புகள் காரணமாக பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. ஆக்கிரமிப்பு அகற்றுவது குறித்து  நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு ஆக்கிரமிப்புகளை, அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும் ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் அறநிலையத்துறை அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் தெரிவித்திருந்தார்.
 
இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் “139 ஆக்கிரமிப்பாளர்களை பழனி கோயில் அடிவாரத்தை சுற்றி , கோயிலுக்கு  சொந்தமான இடங்களில் ஆக்கிரமித்து உள்ளனர். உயர்நீதிமன்ற உத்தரவுபடி ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று இடம் வழங்கியவுடன் , ஆக்கிரமிப்பு நிலங்களை காலி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மாற்று இடத்திற்கு செல்ல விருப்பம் தெரிவித்து ஆக்கிரமிப்பாளர்களிடம் கையெப்பம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால்  பெரும்பாலான ஆக்கிரமிப்பாளர்கள்,  தங்கள் பெயரில் மாற்று இடத்திற்கான பட்டா வழங்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கூறி மறுக்கின்றனர்.
 
அப்போது தான் மாற்று இடத்திற்கு செல்ல சம்மதிப்போம் என  கையொப்பம்மிடுவோம்” என மறுக்கின்றனர்.  எனவே கோயில் நில ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் தாமதமாகிறது என அரசு வழக்கறிஞர் வாதிட்டார்.
 
இதை தொடர்ந்து நீதிபதிகள், பழனி கோயிலை சுற்றி , கோயிலுக்கு  சொந்தமான இடங்களில் ஆக்கிரமித்து உள்ள 139 ஆக்கிரமிப்பாளர்களிடம் , மாற்று இடம் செல்ல சம்மதம் தெரிவித்து கையொப்பம் இடும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு,  கால அவகாசம் கொடுங்கள். மாற்று இடம் செல்ல மறுக்கும் ஆக்கிரமிப்பாளர்களை கண்டறிந்து,  அவர்களுக்கு 24 மணிநேர கால அவகாசம் வழங்க வேண்டும்.
 
அதன் பின்  ஆக்கிரமிப்பாளர்களை,  தாசில்தார் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து  தாசில்தார்  தரப்பில் பதில் மனு  தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.
 
 

தலைப்பு செய்திகள்

சதுரகிரியில் மீண்டும் காட்டுத்தீ: பக்தர்களுக்கு அனுமதி ரத்து - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
சதுரகிரியில் மீண்டும் காட்டுத்தீ: பக்தர்களுக்கு அனுமதி ரத்து - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
முடியப்போது ஆடி.. தாலி கட்ட ரெடியாகும் புது மாப்பிள்ளைங்க..! ஆவணி முதல் முகூர்த்தத்திற்கு வெயிட்டிங்!
முடியப்போது ஆடி.. தாலி கட்ட ரெடியாகும் புது மாப்பிள்ளைங்க..! ஆவணி முதல் முகூர்த்தத்திற்கு வெயிட்டிங்!
Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
Embed widget