Ayodhya Ram Temple: ராமர் கோயில் திறப்பு; விழுப்புரத்தில் 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு பூஜை
விழுப்புரத்தில் 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆஞ்சநேயர் கோவிலில் வெள்ளி கவசம் அணிவித்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது, இதில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்.
![Ayodhya Ram Temple: ராமர் கோயில் திறப்பு; விழுப்புரத்தில் 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு பூஜை Ayodhya Ram Temple Inauguration Special Pooja at 300 years old Anjaneyar temple in Villupuram Devotees in long queues for Sami darshan- TNN Ayodhya Ram Temple: ராமர் கோயில் திறப்பு; விழுப்புரத்தில் 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு பூஜை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/22/8674ca0f36d225b1f6cd0a2ef329951b1705910807457113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
விழுப்புரம்: அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழாவினை முன்னிட்டு விழுப்புரத்தில் முன்னூறு ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வெள்ளி கவசம் பொருத்தபட்டிருப்பதை பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள ராமர் கோவில் இன்று குடமுழுக்கு நடைபெற்றது. அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழாவினை முன்னிட்டு பல்வேறு இடங்களில் பொதுமக்கள் குடமுழக்கு விழாவினை பார்ப்பதற்காக எல்இடி திரையில் ஒளிபரப்பவும், கோவில்களில் சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விழுப்புரம் திருவிக வீதியிலுள்ள மூன்னூறு ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆஞ்சநேயர் கோவிலில் ராமர் கோவில் குடமுழக்கு விழாவினை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு வெள்ளி கவசம் பொருத்தப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இதே போன்று ராமர் சிலைக்கும் அபிஷேக செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் குடமுழக்கு ராமருக்கு செய்யப்பட உள்ளதால் விழுப்புரம் ஆஞ்சநேயர் கோவிலில் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளிக்கும் ஆஞ்சநேயரை பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
அயோத்தி குழந்தை ராமர்
அயோத்தி ராமர் கோயிலில் குழந்தை ராமர் சிலையை பிரதமர் மோடி பிராண பிரதிஷ்டை செய்து வைத்தார். ராமர் கோயிலின் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ், உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் உள்ளிட்டோர் முன்னிலையில் கருவறையில் ராமர் சிலையை பிரதமர் மோடி பிராண பிரதிஷ்டை செய்தார்.
மலர்களாலும் விலை மதிப்பற்ற உபகரணங்களாலும் அலங்கரிக்கப்பட்ட ராமர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டதை உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் நேரலையில் கண்டு களித்தனர்.
ஷியாமல் (கருப்பு நிறம்) கல்லில் வடிவமைக்கப்பட்ட ஐந்து வயது குழந்தை ராமர், தாமரையின் மீது நிற்பது போன்று சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. தாமரை மற்றும் ஒளிவட்டம் இருப்பதுபோல் செதுக்கப்பட்டுள்ள இந்த சிலையின் எடை 150 கிலோ எனக் கூறப்படுகிறது. சிலையின் மொத்த உயரம் ஏழு அடி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோயிலின் தரை தளத்தில் குழந்தை ராமர் சிலை வைக்கப்பட்டுள்ளது. கோயிலின் முதல் தளம் இன்னும் கட்டப்படவில்லை. முதல் தளம் கட்டப்பட்ட பிறகு, ராமர், சீதை, லட்சுமணன் மற்றும் அனுமன் ஆகியோரின் சிலை அங்கு வைக்கப்பட உள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)