கரூர் ஸ்ரீ ஞானஸ்கந்தன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா
பக்தர்கள் அரோகரா, அரோகரா கோஷத்துடன் பூஜிக்கப்பட்ட புனித தீர்த்தத்தால் கோபுர கலசத்திற்கு மகா கும்பாபிஷே விழா நடைபெற்றது.
![கரூர் ஸ்ரீ ஞானஸ்கந்தன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா Ashtabandana Maha Kumbabishekam ceremony at KVP Nagar Gnanaskandan temple TNN கரூர் ஸ்ரீ ஞானஸ்கந்தன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/10/4ec855ceb9adda9e87f0731e604ac9b51678435255380183_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கேவிபி நகர் ஞானஸ்கந்தன் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கேவிபி நகர் பகுதியில் பிரசித்தி பெற்ற முருகன் ஆலயமான ஸ்ரீ ஞானஸ்கந்தன் ஆலயத்தில் ஆலய பணிகள் நடைபெற்று வந்தது. ஆலய பணிகள் முடிவுற்ற நிலையில் கும்பாபிஷேக விழா ஏற்பாடு செய்யப்பட்டு ஆலயம் அருகே பிரத்தியேக யாக சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கடந்த 8-ம் தேதி புதன்கிழமை காவிரி ஆற்றில் இருந்து புனித தீர்த்தம் கொண்டு வந்தனர்.
அதைத் தொடர்ந்து தொடர்ச்சியாக முளைப்பாரி மற்றும் வாஸ்து பூஜைகள் நடைபெற்றது. பின்னர் முதல் கால யாக வேள்வி, இரண்டாம் கால யாக வேள்வி, மூன்றாம் கால யாக வேள்வி, நான்காம் கால யாக வேள்வி நடைபெற்றது. பின்னர் நான்கு கால யாக வேள்வியில் வைக்கப்பட்டிருந்த புனித கலசத்திற்கு மகா தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து சிறப்பு யாகத்திற்கு பூரணாஷூதி நடைபெற்றுது. அதன் தொடர்ச்சியாக மேல தாளங்கள் முழங்க நான்கு கால யாக வேள்வியில் பூசிக்கப்பட்ட புனித தீர்க்க கலசத்தை ஆலயத்தின் சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்தவாறு ஆலயம் முக்கிய வீதியில் வழியாக வலம் வந்து கோபுர கலச வந்தடைந்தன. தொடர்ந்து பக்தர்கள் அரோகரா, அரோகரா கோஷத்துடன் பூஜிக்கப்பட்ட புனித தீர்த்தத்தால் கோபுர கலசத்திற்கு மகா கும்பாபிஷே விழா நடைபெற்றது.
அதை தொடர்ந்து மூலவர் ஞானஸ் கந்தன் சுவாமிக்கும் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் பூஜிக்கப்பட்ட புனித தீர்த்தத்தால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டு புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டது.
கரூர் கேவிபி நகர் பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ ஞானஸ் கந்தன் திருக்கோவில் நடைபெற்ற அஷ்ட வந்தன மகா கும்பாபிஷேக விழாவை காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)