Aadi Pooram 2024: அம்மன் அருள் கிடைக்கும் ஆடிப்பூரம்; வாழ்த்து மெசேஜ் தொகுப்பு!
Aadi Pooram 2024: ஆடிப்பூரம் சிறப்பு தினத்தில் அன்பிற்குரியவர்களுக்கு அனுப்ப வாழ்த்து செய்திகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் மாதங்களில் ஒவ்வொன்றிற்கும் தனிச் சிறப்பு உண்டு.அப்படி ஆடி மாதம் என்றால் அம்மனுக்கு மிகவும் சிறப்பு வாந்தது. ஆடி மாதத்தின் தனிச்சிறப்பு இது. ஆன்மீக ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஆடி மாதத்தில் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். பெரும்பாலானோர் ஆடி மாதத்தில் வீடுகளில் அம்மன் வழிபாடு நடத்துவர். ஆடி மாதத்தில் நிறைய சிறப்பு நாட்கள் இருந்தாலும் ஆடிப்பூரம் முக்கியத்துவம் வாய்ந்தது.
ஆடிப்பூரம் சிறப்பு வாய்ந்தது ஏன்?
ஆடி மாதத்தில் வரும் பூர நட்சத்திரத்தில் சக்தியாகிய சொல்லப்படுகிற உமாதேவி அவதரித்ததாக சிவபுராணம் தெரிவிக்கிறது. இதே நாளில் ஸ்ரீவில்லிபுத்தூரில் துளசி மாடத்தில் பூமாதேவியே ஆண்டாளாக அவதரித்தார் என்று புராணங்களில் கதை சொல்கிறது. ஆடிப்பூர நாளில் சைவ மற்றும் வைணவ தலங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். ஆடிப்பூரம் அம்பாளுக்குரிய நாள் என்று சொல்லப்படுகிறது.
ஆடிப்பூரத்தன்று அம்மனை வழிபட்டால் பல்வேறு நன்மைகள் நடைபெறும் என்று நம்பப்படுகிறது.
திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும்; ஆடிப்பூர தினத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாளை வணங்கினால் பல்வேறு நன்மைகள் இருப்பதாகவும் நம்பிக்கை இருக்கிறது.
அதேபோல, ஸ்ரீவில்லிபுத்தூர் மட்டுமின்றி ஸ்ரீரங்கம் ரங்கநாதரை வணங்கினாலும் கணவன் -மனைவி உறவுக்கு நன்மைகள் தரும் என்று சொல்லப்படுகிறது. தம்பதிகள் மட்டுமின்றி தொழில், வியாபார போட்டி, பண விவகாரங்கள் காரணமாக மனக்கசப்பால் பிரிந்த கூட்டாளிகள் மற்றும் நண்பர்களும் ஆடிப்பூர தினத்தில் ஆண்டாளையும், பெருமாளையும் வணங்கினால் மீண்டும் ஒன்று சேர்வார்கள் என நம்பப்படுகிறது
சிறப்பு வாய்ந்த ஆடிப்பூர தினத்தில் அம்பாளுக்கு வளைகாப்பு சடங்கு நடத்தப்படுகிறது. ஏனெனில், இந்த உலகத்தில் உயிர் ஜீவிக்கும் நிகழ்வு அம்பாள் கருணையால் நிகழ்வதாக சொல்லப்படுகிறது. நம்மைப் படைத்த அன்னைக்கு வளைகாப்பு நடத்தி மகிழ்ச்சியுடன் வழிபடுவது என்று நம்பப்படுகிறது. அம்பாளுக்கு வளைகாப்பு நடத்துகிற வைபவத்தைக் கண்ணாரத் தரிசித்தால், கல்யாண வரம் அமையும். சந்தான பாக்கியம் நிகழும் என்பது ஐதீகம். மயிலாப்பூர் கற்பகவல்லி அம்மன் கோயில், திருவாரூர் கமலாம்பாள் கோயில், நாகப்பட்டினம் நீலாயதாட்சி அம்மன் கோயில், திருக்கருவாவூர் கர்ப்பரட்சாம்பிகை கோயில் உள்ளிட்ட பல கோயில்களில் அம்மனுக்கு ஆடிப்பூர தினத்தில் சந்தனக்காப்பு அலங்காரமும் அன்றைய தினத்தின் இரவில் ஆயிரக்கணக்கான வளைகாப்பு நிகழ்வும் நடைபெறும்.
ஆடிப்பூர தினத்தில் குடும்ப உறவினர்கள், நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள வாழ்த்து செய்திகள்:
- மங்களம் நிறைந்த ஆடிப்பூர நாளில், அம்மனின் அருள் அனைவருக்கும் பரிபூரணமாக கிடைக்க வாழ்த்துகள்.
- அளவில்லாத செல்வங்களை அள்ளித் தரும் நாள் ஆடிப்பூரம்! வேண்டுதல்கள் நிறைவேற வாழ்த்துகள்.
- அம்பாள் அனைவரையும் காப்பாள்! ஆடிப்பூர வாழ்த்துகள்.
- நீர்நிலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதுபோல ஆடிப்பூரம் எல்லா வளங்களையும் நல்ல நாட்களையும் உங்களுக்கு வழங்க வாழ்த்துகள்.
- பூரம் என்றால் பெருக்கு. நல்ல காரியங்களில் செழிப்படைய செய்ய ஆடிப்பூர வழிபாடு உதவும். எல்லா வேண்டுதல்களும் கைகூட வாழ்த்துகள்.
- ஆடிப்பூர நாளில் சிறப்பு பூஜைகளால் மனம் குளிர்ந்து அம்மான் வரம் உங்களுக்கு கிடைக்கடும். வாழ்வு செழிக்கட்டும். வாழ்த்துகள்.
- ஆடிப்பூர தினம் எல்லா செல்வங்களையும் உங்களுக்கு வழங்கட்டும்.
- மங்களம் நிறைந்த ஆடிப்பூர நாளில், ஆண்டாளின் அருள் அனைவருக்கும் பரிபூரணமாக கிடைக்க வாழ்த்துகள்.
- ஆடிப்பூர நாளில் சிறப்பு பூஜைகளால் மனம் குளிர்ந்து அம்மான் வரம் உங்களுக்கு கிடைக்கடும். வாழ்வு செழிக்கட்டும். வாழ்த்துக்