மேலும் அறிய
Indonesia open Badminton: இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டனில் கலக்கி வரும் இந்திய வீரர்கள்..!
இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டியின் இரண்டாம் சுற்றில் வெற்றி பெற்ற ஸ்ரீகாந்த், பிரணாய் காலிறுதிக்கு முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

பிரணாய், ஸ்ரீகாந்த்
1/6

ஜகார்தாவில் நடைப்பெற்று வரும் இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டியின் இரண்டாம் சுற்று நேற்று நடைப்பெற்றது.
2/6

அதன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் பிரணாய் 21-18, 21-16 என்ற நேர்செட்டில் ஹாங்காங் வீரர் ஆங்குஸ் லாங்கை வெற்றிப் பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
3/6

அதே போன்று மற்றோரு 2 ஆவது சுற்று ஆட்டத்தில் ஸ்ரீகாந்த் 21-17, 22-20 என்ற நேர்செட்டில் லக்ஷயா ஷென்னை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
4/6

மேலும் இரட்டையர் பிரிவில் களமிறங்கிய இந்திய இணை சாத்விக் சாய்ராஜ் - சிராக் ஷெட்டி ஆகியோர் 21-17, 21-15 என்ற நேர்செட்டில் சீன வீரர்களான ஜி டிங் ஹீ - ஹோ டோங் சூ ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
5/6

அதே சமயம் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனையான சிந்து 18-21, 16-21 என்ற நேர்செட்டில் சீன தைபே வீராங்கனையான சூ யிங் டாயிடம் வீழ்ந்தார்.
6/6

மேலும் மற்றோரு இந்திய வீரரான ப்ரியன்ஷூவும் 2 ஆவது சுற்றுடன் வெளியேறி உள்ளார்.
Published at : 16 Jun 2023 05:12 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
உலகம்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion