மேலும் அறிய
Super Six: ஓமன் அணியை கடைசி ஓவரில் கஷ்டப்பட்டு வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்ற ஜிம்பாப்வே அணி!
2023 ஆம் ஆண்டின் உலக கோப்பை போட்டிக்கு 8 அணிகள் தேர்வாகி உள்ள நிலையில், மீதம் உள்ள கடைசி இரண்டு அணிகளை தேர்வு செய்யும் சூப்பர் சிக்ஸ் போட்டி நேற்று தொடங்கியது.
திரில் வெற்றி பெற்ற ஜிம்பாப்வே
1/6

உலக கோப்பை போட்டி இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது. இதற்காக சூப்பர் சிக்ஸ் ஆட்டம் நேற்று தொடங்கியது. இதில் ஜிம்பாப்வே மற்றும் ஓமன் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்தது ஜிம்பாப்வே.
2/6

ஜிம்பாப்வே தொடக்க ஆட்டக்காரர்கள் ஓரளவு நல்ல தொடக்கத்தை கொடுத்து ஆட்டமிழந்தார்.பின்னர் களமிறங்கிய சீன் வில்லியம்ஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவருக்கு உறுதுணையாக சிக்கந்தர் ராசா, லூக் ஜோங்வே ஆகியோர் களத்தில் நின்றனர்
3/6

50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 332 ரன்கள் எடுத்திருந்தது ஜிம்பாப்வே. அதிகபட்சமாக சீன் வில்லியம்ஸ் 103 பந்துகளில் 14 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 142 ரன்கள் அடித்திருந்தார்.
4/6

பின்னர் களமிறங்கிய ஓமன் அணி யாரும் எதிர்பார்க்காத வகையில் சிறப்பாக ஆடினர். தொடக்க ஆட்டகாரர் ஆன காஷ்யப் பிரஜாபதி 97 பந்துகளில் 12 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 103 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்
5/6

பின்னர் களமிறங்கிய அகிப் இல்யாஸ்,அயான் கான் ஆகியோர் அவர்களின் பங்களிப்பை கொடுத்தனர். இதனால் ஓமன் அணி 333 இலக்கை நோக்கி நகர்ந்தது.
6/6

கடைசி 8 ஓவரில் 5 விக்கெட்டுகளை தானமாக கொடுத்து வெற்றி வாய்ப்பை தவறவிட்டது ஓமன். இதனால் சூப்பர் சுற்றில் முதல் வெற்றியை பதிவு செய்தது ஜிம்பாப்வே.
Published at : 30 Jun 2023 03:40 PM (IST)
மேலும் படிக்க





















