மேலும் அறிய
TSK Vs LAKR: எம்.எல்.சி தொடரின் முதல் போட்டியில் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணியை அபாரமாக வீழ்த்திய டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ்!
ஐ.பி.எல் போலவே அமெரிக்காவில் எம்.எல்.சி (மேஜர் லீக் கிரிக்கெட்) போட்டியை தொடங்கியுள்ளனர். இதன் முதல் போட்டியில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

வெற்றி பெற்ற டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி
1/6

ஐ.பி.எல் பாணியில் அமெரிக்காவில் எம்.எல்.சி (மேஜர் லீக் கிரிக்கெட்) என்ற கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. இதில் முதல் போட்டியில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணியை எதிர் கொண்டது. டாஸ் வென்ற ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் முதலில் சூப்பர் கிங்ஸை பேட்டிங் செய்ய அழைத்தது.
2/6

தொடக்க ஆட்டக்காரர்களாக டெவோன் கான்வே, டு பிளெசிஸ் களமிறங்கினர். ஐபிஎலில் டு பிளெசிஸ் அதிரடியாக ஆடியதால் அதனை மீண்டும் எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. டெவோன் கான்வே, டு பிளெசிஸ் முதல் பந்திலேயே அவுட் ஆனார்
3/6

பின்னர் வந்தவர்கள் அதிரடியாக ஆட அணியின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது. 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது சூப்பர் கிங்ஸ்.
4/6

டெவோன் கான்வே (55), டேவிட் மில்லர்(61) ,மிட்செல் சான்ட்னர்(21), டுவைன் பிராவோ(16) ஆகியோர் அதிரடியாக ஆடி அணிக்கு ரன்களை சேர்த்தனர். பின்னர் இந்த இலக்கை நோக்கி ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் களமிறங்கியது
5/6

தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பான ஆட்டத்தை கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்
6/6

14 ஓவருக்கு 112 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ். இதன் மூலம் 69 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ்
Published at : 14 Jul 2023 01:45 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கிரிக்கெட்
கிரிக்கெட்
உலகம்
Advertisement
Advertisement