மேலும் அறிய
DD Vs CSG : ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற திண்டுக்கல் டிராகன்ஸ்!
11வது டிஎன்பிஎல் லீக் போட்டியில் நேற்று திண்டுக்கல் அணியும் சேப்பாக்கம் அணியும் மோதின. இதில் கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது திண்டுக்கல் டிராகன்ஸ்.
வெற்றி பெற்ற திண்டுக்கல் டிராகன்ஸ்
1/6

7-வது சீசன் டிஎன்பிஎல் போட்டி தற்போது திண்டுக்கலில் நடந்து வருகிறது. நேற்று 11வது லீக் போட்டி சேப்பாக்கம் - திண்டுக்கல் இடையே நடந்தது. டாஸ் வென்ற சேப்பக்கம் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
2/6

முதலில் களமிறங்கிய திண்டுக்கல் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ராகுல் மற்றும் சிவம் நன்றாக தொடங்கினர். 34 ரன்கள் எடுத்த ராகுல் ஆட்டம் இழந்தார். பின்னர் களம் இறங்கிய பாபா இந்திரஜித், பூபதி குமார், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து பெவிலியன் திரும்பினர்.
3/6

இவர்களை தொடர்ந்து களமிறங்கிய ஆதித்யா கணேஷ், சரத் குமார் ஆகியோர் பொறுப்புடன் ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்திருந்தது திண்டுக்கல் அணி. அதிகபட்சமாக ஆதித்யா கணேஷ் 44 ரன்கள் அடித்திருந்தார்.
4/6

பின்னர் களமிறங்கிய சேப்பாக்கம் அணியின் தொடக்க ஆட்டக்காரர் எஸ் சந்தோஷ் ஷிவ் ஆரம்பத்திலேயே ஒரு ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். திண்டுக்கல் அணியின் சிறப்பான பந்துவீச்சால் அடுத்தடுத்து சேப்பாக அணி வீரர்கள் ஆட்டம் இழக்க, பாபா அபராஜித் ஒன் மேன் ஆர்மியாக போராடினார்.
5/6

18 வது ஓவரில் வருண் சக்ரவர்த்தி பந்து வீச, பாபா அபராஜித் 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசி 2 ஓவரில் 27 ரன்கள் தேவை ப்பட்டது. இதில் 19 ஓவரில் மட்டும் 15 ரன்கள் எடுக்கப்பட்டது.
6/6

20வது ஓவரை திண்டுக்கல் அணியின் வேகப்பந்து வீச்சாளர் சரவணகுமார் பந்து வீச ஆர்.ரோகித் அதனை எதிர்கொண்டார். முதல் பந்தில் பவுண்டரி அடிக்க இரண்டாவது பந்தில் ஆட்டம் இழந்தார்.அடுத்து வந்த லோகேஷ் ராஜ் 3வது பந்தை பவுண்டரிக்கு விலாச 4வது பந்தில் ஒரு ரன் எடுத்தார், 5வது பந்தை எதிர்க்கொண்ட சசிதேவ் பந்தை தவறவிட விக்கெட் கீப்பர் அவரை ரன்-அவுட் செய்தார். கடைசி பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அந்த பந்தை எதிர்கொண்டார் ரஹில் ஷா. ஆனால் அவரால் ஒரு ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் தனது மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது திண்டுக்கல் டிராகன்ஸ்.
Published at : 22 Jun 2023 01:02 PM (IST)
மேலும் படிக்க





















