மேலும் அறிய
MINY vs SEO: அனைவரின் கவனத்தை ஈர்த்த ஹென்ரிச் கிளாசன்.. கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது சியாட்டில் ஓர்காஸ்!
110 ரன்கள் எடுத்த சியாட்டில் ஓர்காஸ் வீரரான ஹென்ரிச் கிளாசனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

ஹென்ரிச் கிளாசன்-நிக்கோலஸ் பூரன்
1/6

அமெரிக்காவில் எம்எல்சி (மேஜர் லீக் கிரிக்கெட்) தொடர் நடந்து வருகிறது. நேற்று நடந்த 15வது போட்டியில் எம்ஐ நியூயார்க், சியாட்டில் ஆர்காஸ் மோதின. இதில் டாஸ் என்ற சியாட்டில் ஆர்காஸ் முதலில் பந்து வீசியது.
2/6

இதனை தொடர்ந்து களமிறங்கிய நியூயார்க் அணியின் தொடக்க ஆட்டக்காரர் மோனாங்க் படேல்(2)சயான் ஜஹாங்கீர் (19) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
3/6

பின்னர் வந்த நிக்கோலஸ் பூரன் அதிரடியாக ஆடி அணியை நல்ல நிலைக்கு கொண்டு வந்தார். 20 ஓவர் முடிவில் எம்ஐ நியூயார்க் 8 விகெட்டுகளுக்கு194 ரன்கள் எடுத்திருந்தது.
4/6

195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது சியாட்டில் ஆர்காஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் நௌமான் அன்வர் சிறப்பாக ஆடி அரைசதம் எடுத்தார். இவருடன் கைகோர்த்த ஹென்ரிச் கிளாசன் அதிரடியாக ஆடினார்
5/6

அவர்களின் பார்ட்னர்ஷிப் கிட்டத்தட்ட 50 ரன்கள் வரை நீடித்தது. பின்னர் ஒற்றை ஆளாக நின்ற ஹென்ரிச் கிளாசன் எம் ஐ வீரர்கள் வீசிய பந்துகளை நாளாபுறமும் சிதரடித்தார்.
6/6

சதம் விளாசிய ஹென்ரிச் கிளாசனால் 19.2 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்து திரில் வெற்றி பெற்றது சியாட்டில் ஓர்காஸ். அத்துடன் ஹென்ரிச் கிளாசனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
Published at : 26 Jul 2023 04:15 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement