மேலும் அறிய
Modi Chennai Visit: சென்னை விமான நிலைய புதிய முனையத்தை திறந்து வைத்த பிரதமருக்கு 5 அடுக்கு பாதுகாப்பு!
Modi Chennai Visit: சென்னை விமான நிலையத்தில் ரூ.1,260 கோடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டடத்தை பிரதமர் மோடி நேற்று திறந்துவைத்தார்.

சென்னை விமான நிலையத்தின் புதிய முனையத்தை பிரதமர் திறந்து வைத்தார்
1/9

பிரதமர் மோடி நேற்று மதியம் 1.35 மணிக்கு ஹைதராபாத் பேகம்பேட் விமான நிலையத்திலிருந்து விமானப்படைக்கு சொந்தமான விமானம் மூலம் சென்னைக்கு 2.45 மணிக்கு வந்தார்.
2/9

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு வந்த பிரதமர் மோடி, 2,400 கோடி ரூபாய் திட்ட மதிப்பில், 2.36 லட்சம் சதுர மீட்டரில் கட்டப்பட்ட, ஒருங்கிணைந்த விமான முனையத்தை திறந்து வைத்தார்.
3/9

இந்த முனையம் செயல்பாட்டுக்கு வந்ததும், சென்னை விமான நிலையத்தில், மேலும் பல உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்கள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
4/9

தற்போது சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை 2.2 கோடியாக உள்ளது. புதிய முனையம் செயல்பாட்டுக்கு வந்த பின்பு, 3.5 கோடியாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
5/9

புதிய முனையத்தின் கீழ் தளத்தில், பயணியர் உடைமைகள் கையாளப்பட உள்ளன. தரை தளத்தில், சர்வதேச பயணிகள் வருகை பகுதியாக, பயணியருக்கான, வழக்கான நடைமுறைகள் கையாளப்படும்.
6/9

தமிழ் கலாசாரத்தை பறைசாற்றும் வகையில் இந்த சென்னை விமான நிலையத்தின் புதிய முனையம் கட்டப்பட்டுள்ளது.
7/9

பிரதமர் மோடியின் வருகையையொட்டி, டி.ஜி.பி சைலேந்திர பாபுவின் உத்தரவின் பேரில் 22ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பிரதமர் மோடி கலந்துக்கொள்ளும் நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டன.
8/9

தமிழக அரசின் தலைமையில் நடைப்பெற்ற இவ்விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.
9/9

இவ்விழாவில், பல முக்கிய அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்
Published at : 09 Apr 2023 09:26 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சேலம்
இந்தியா
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion