வாடகை வீட்டில் குடியேறீங்களா.! மாத வாடகை, அட்வான்ஸ் எவ்வளவு கொடுக்கனும்- வெளியான குஷியான விதிமுறைகள்
வீட்டு உரிமைதாரர்களுக்கும். வீட்டு வாடகைதாரர்களுக்கும் இடையே வாடகை தொடர்பாக மோதல் ஏற்பட்டு வரும் நிலையில், வீட்டு வடகை, முன்பணம் தொடர்பாக புதிய விதிமுறைகள் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

சொந்த ஊரில் வேலை இல்லாத காரணத்தால் பலரும் வெளியூர்களுக்கு வேலைக்கு செல்லும் நிலை உள்ளது. இதன் காரணமாக தனியாக வாடகைக்கு வீடு எடுத்து குடும்பத்தோடு தங்கும் சூழ்நிலை உள்ளது. ஆனால் வாடகை என்ற பெயரில் பல ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது. குறிப்பாக மாத சம்பளத்தில் பாதியை வாடகைக்கே கொடுக்கும் நிலை உள்ளது. இது மட்டுமில்லாமல் அட்வான்ஸ் என பல லட்சங்களையும் முன் கூட்டியே வாங்கப்படுகிறது. இதனால் புதிதாக வீடு குடியேறுபவர்கள் மிகுந்த சிரமம் அடையும் நிலை உள்ளது. இது மட்டுமில்லாமல் திடீரென வாடகையை உயர்த்தியும் வாடகைக்கு குடியிருப்பவர்களை வீட்டு உரிமையாளர்கள் நெருக்கடி கொடுக்கும் நிலையும் உள்ளது. இந்த நிலையில் இதற்கு கட்டப்பாடுகள் கொண்டு வரும் வகையில் புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது.
வீட்டு வாடகை விதிமுறைகள் சட்டம் 2025 விரைவில் செயல்பாட்டிற்கு வரவுள்ளது. அந்த வகையில் வீட்டு வாடகை விதிமுறைகள் சட்டம் 2025-ன் படி வாடகைக்கு குடியேறுவோர் மற்றும் வீடுகளை வாடகைக்கு விடுவோருக்கு புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து வெளியாகியுள்ள புதிய விதிமுறைகளில் வாடகைக்கு குடியேறுவோர் மற்றும் வீட்டு உரிமையாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளும், புதிய விதிமுறைகளையும் கட்டாயமாக்கியுள்ளன.
வீட்டை வாடகைக்குவிட்டால், வாடகை எவ்வளவு, அட்வான்ஸ் எவ்வளவு என ஒப்பந்தந்தை உரிமையாளர் பதிவு செய்திருக்க வேண்டும். அந்த வகையில் ஒப்பந்தத்தை எழுதி கையெழுத்திட்டால் மட்டும் போதாது.புதிய சட்டத்தின்படி 2 மாதங்களுக்குள் வாடகை ஒப்பந்தத்தை பதிவு செய்ய வேண்டும். இல்லையென்றால் ரூ.5 ஆயிரம்வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவிதிக்கப்பட்டுள்ளது.
- ஆதார் அடிப்படையில் மின்னணு சரிபார்ப்பு முறையில் ஒப்பந்தங்களை பதிவு செய்ய வேண்டும். கைப்பட எழுதி கையெழுத்திடக்கூடாது.
- வீட்டு வாடகைக்கு 2 மாத வாடகைக்கு மேல் முன்பணமாக கேட்கக்கூடாது. வணிக கட்டிடங்களுக்கு 6 மாத வாடகையை முன்பணமாக வசூலிக்கலாம்.
- வாடகை உயர்த்துவதிலும் கட்டுப்பாடுகள் உள்ளன. ஒருவர் வாடகைக்கு வந்த 12 மாதங்கள் கழித்துதான் வாடகையை உயர்த்த வேண்டும்.மேலும் 2 மாதங்கள் முன்பே நோட்டீசு அளிக்கப்பட வேண்டும்.
- வாடகைக்கு இருப்போரை காரணமின்றி காலி செய்ய வலியுறுத்தக்கூடாது. சேதம் ஏற்படுத்துதல் ,வாடகை செலுத்தாமல் இருத்தல் என குறிப்பிடப்பட்ட காரணங்கள் இல்லாமல் காலி செய்ய தொந்தரவு கொடுக்க கூடாது.
- வாடகைக்கு வீட்டை விட்ட பிறகு வீட்டின் உரிமையாளர் நினைக்கும்போதெல்லாம் வீட்டிற்குள் நுழையமுடியாது. 24 மணிநேரத்துக்கு முன்னதாக எழுத்துப்பூர்வமாக எழுதிக்கொடுக்க வேண்டும்.
- வாடகைக்கு இருக்கும் வீட்டில் பழுது ஏற்பட்டால், உரிமையாளர்கள் 30 நாட்களுக்குள் சரி செய்ய வேண்டும். அப்படி வீட்டின் உரிமையாளர் சரி செய்து கொடுக்கவில்லையென்றால் வாடகைக்கு குடியிருப்போர் சரி செய்த பின்பு பணத்தை வாடகையில் கழித்து கொள்ளலாம்.
- வீட்டு வாடகை தொடர்பாக தகராறு, வீட்டை காலி செய்யாமல் இழுத்தடிக்கும் வழக்கு போன்றவற்றுக்கு காலம் தாழ்த்தாமல் இனி 2 மாதங்களில் தீர்ப்பு வழங்கப்படும். இதற்காக சிறப்பு தீர்ப்பாயம் அமைக்க முடிவு.
மேலும் முக்கியமாக வாடகைதாரரும், உரிமையாளரும் சேர்ந்து ஒப்பந்தம் எழுத வேண்டும். இதனை சாா் பதிவாளர் அலுவலகத்தில் அல்லது இணைய வழியில் பதிவு செய்ய வேண்டும் என புதிய வழிகாட்டு நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





















