மேலும் அறிய
75th Republic Day : தாயின் மணிக்கொடி பாரீர்... தமிழ்நாடெங்கும் சிறப்பாக நடந்த 75-வது குடியரசு தின விழா!
75th Republic Day : 75வது குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களின் ஆட்சியர் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினர்.

75வது குடியரசு தின விழா
1/10

இந்திய நாட்டின் 75 வது குடியரசு தினத்தினை முன்னிட்டு ஆட்சியர் பழனி விழுப்புரத்தில் தேசிய கொடியினை ஏற்றி வைத்து காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். அதனை தொடர்ந்து நடைபெற்ற மாணவர்களின் கண்கவர் கலைநிகழ்ச்சியினை பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
2/10

சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு மரியாதை செய்து நலத்திட்டங்கள் மற்றும் சிறப்பாக பணிபுரிந்த காவலர்கள் செவிலியர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை ஆட்சியர் பழனி வழங்கினார்.
3/10

திருச்சி ஆயுதப்படை வளாகத்தில் 75 ஆவது குடியரசு தினத்தை ஒட்டி திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தேசிய கொடி ஏற்றி, வெள்ளை புறாக்கள், வண்ணப் பலூன்கள் பறக்க விட்டார்
4/10

ராமநாதபுரம் ஆயுதப்படை வளாகத்தில் அமைந்துள்ள தேசிய கொடியை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் ஏற்றி வைத்தார்.
5/10

தூத்துக்குடி தருவை மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமிபதி தேசிய கொடியினை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
6/10

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உடன் உள்ளார்.
7/10

கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற 75 குடியரசு தின விழா நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் தேசிய கொடியை ஏற்றி வைத்து சமாதான புறா மற்றும் வண்ண பலூன்களை பறக்க விட்ட பிறகு காவலர்களுக்கு பதக்கங்கள் சான்றிதழை வழங்கினார்.
8/10

மயிலாடுதுறை மாவட்ட சாய் விளையாட்டு மைதானத்தின் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி 75 வது ஆண்டு குடியரசு தினவிழாவில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை.
9/10

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பெருந்திடல் வளாகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தின் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் 75 வது ஆண்டு குடியரசு தினவிழாவில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை.மேலும் சமாதான புறாவை பறக்கவிட்டார்
10/10

சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழா நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் கொடியேற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
Published at : 26 Jan 2024 10:47 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement