மேலும் அறிய
World Diabetes Day:உலக நீரிழிவு நோய் தினம் - நிபுணர்கள் சொல்லும் அறிவுரைகள் என்ன?
World Diabetes Day: நீரிழிவு பாதிப்பு குறித்து நிபுணர்கள் தெரிவிக்கும் கருத்துகளை இங்கே காணலாம்.

உலக நீரிழிவு தினம்
1/5

உலக நீரிழிவு நோய் தினம் ஆண்டுதோறும் நவம்பர் 14-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. நீரிழிவு நோய்க்குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும் என்ற நோக்கத்துடன் 1991 ஆம் ஆண்டு உலக நீரிழிவு நோய் கூட்டமைப்பு மற்றும் உலக சுகாதார நிறுவனமும் இணைந்து இந்த நாளை அறிவித்தது. 2006 ஆம் ஆண்டு இதை ஐக்கிய நாடுகள் சபை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. சிறப்பு நாளன்று நீரிழிவு நோய் மற்றும் அது தொடர்பான சிகிச்சை, தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடிக்கைகள் தொடர்புடைய பல்வேறு தலைப்புகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
2/5

நம் உடல் உள்ளுறுப்புகள் தொடங்கி, சுரப்பிகள் வரை அனைத்தும் சீராக செயல்பட வேண்டும். இல்லையேல் நமக்கு ஏதாவது பிரச்சினை ஏற்படும். நீரிழிவும் நோயும் அப்படியே! இன்சுலின் அளவு அதிகமாவது அல்லது அதில் ஏற்படும் சீரற்ற தன்மை ஆகியவற்றினால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு அதிகரித்து நீரிழிவு நோய் ஏற்படுகிறதுஎந்தவித இடையூறும் இல்லாமல் தூங்குவது நீரிழிவு நோயை உருவாக்கும் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. ஒழுங்கற்ற தூக்கப் பழக்கம் கார்டிசோலின் அளவை அதிகரித்து, இரத்தத்தில் சர்க்கரையை உருவாக்கும் வாய்ப்புகளை அதிகரிக்கிறது.
3/5

அடிக்கடி சிறுநீர் கழித்தல், எப்போதும் பசி ஏற்படுவது அல்லது பசிப்பது போன்ற உணர்வு, தண்ணீர் அதிகமாகக் குடிப்பது, பெரும்பாலும் சோர்வான உணர்வு இருக்கும், உடலில் ஏற்படும் காயங்கள் ஆறுவதற்கு நீண்ட காலம் எடுக்கும், காரணமில்லாமல் எடை குறைதல், மிகக் கூடுதல் எடை, கால் மரத்துப் போய் உறுத்துதல், மங்கலான பார்வை உள்ளிட்டவைகள் இவற்றின் அறிகுறிகளாக சொல்கிறது மருத்துவ உலகம்.
4/5

நீரிழிவு நோய்க்கான அறிகுகள் தென்படுமாயின் உடனடியாக மருத்துரை அணுகு அதை கண்டறிவது முக்கியம். இன்றைய மருத்துவ உலகில் பல சிகிச்சைகள் இருந்தாலும் நோய் வராமல் தடுப்பதே சிறந்தது.
5/5

ரெகுலரான உடற்பயிற்சி நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. உடற்பயிற்சியின் போது தசை அசைவுகள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையை பயன்படுத்துகிறது. எனவே நீரிழிவு நோய் வராமல் தடுக்க சில எளிய உடற்பயிற்சிகள் விறுவிறுப்பான நடைபயிற்சி, ஓட்டம், நீச்சல், நடனம், சைக்ளிங் போன்றவை உதவும்.காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள் மற்றும் முழு தானியங்கள் ஆகிய நார்ச்சத்து கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். நார்ச்சத்து கார்போஹைட்ரேட்டுகளின் சர்க்கரை செரிமானத்தையும் சர்க்கரையை உறிஞ்சுவதையும் மெதுவாக்குகிறது, இது இரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது.
Published at : 14 Nov 2024 07:55 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement