மேலும் அறிய
Cutting Off Sugar : ஒரு மாதம் முழுக்க உணவில் சர்க்கரையே சேர்க்காமல் இருந்தால், என்ன ஆகும் தெரியுமா?
நேரடியாக ஜீனி, சர்க்கரை, வெல்லம், தேன், கரும்பு, அதிக கொண்ட இனிப்பு பண்டங்கள், கார்பனேடட் ட்ரிங்க்ஸில் மூலம் கிடைக்கும் சர்க்கரையை நாம் தவிர்க்கலாம். .

சர்க்கரை
1/7

அவ்வாறாக ஒரு மாதம் தவிர்த்தால் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்று விவரிக்கிறார் டாக்டர் அம்ரிதா கோஷ்.
2/7

சர்க்கரை அதிக கலோரி கொண்ட உணவுப் பொருள் என்பதால் இது உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். அதனால் சர்க்கரையை உணவில் தவிர்க்க ஆரம்பித்தால் உடல் எடை குறையும்.
3/7

அதிக சர்க்கரை டைப் 2 வகை நீரிழிவு நோய்க்கு வழி வகுக்கிறது. அதனால் சர்க்கரையை தவிர்க்கும்போது உடலில் ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் வருகிறது. ஒரு மாதம் இதை நீங்கள் பரிசோதித்து பார்க்கும் போது உடலில் சக்தி அதிகரிப்பதை நீங்களே உணர்வீர்கள்.
4/7

சர்க்கரையை தவிர்க்கும் போது உடல் நாள் முழுவதும் உற்சாகம் கொள்ளும். விழிப்புடன் இயங்குவதை நீங்களே உணர்வீர்கள். உங்கள் மனநிலையில் நல்ல மாற்றம் தெரியும்.
5/7

சர்க்கரை நேரடியாக ரத்த அழுத்தத்திற்கு வழி வகுக்கும், உயர் கொலஸ்ட்ராலையும் ஊக்குவிக்கும். இவையெல்லாம் இதயத்திற்கு ஆபத்தானது. ஆகையால் ஒருமாதம் சர்க்கரையை தவிர்த்தால் உங்கள் உடலில் பல்வேறு நன்மைகளை நீங்கள் உணர முடியும்.
6/7

அதிக நார்ச்சத்து, குறைந்த ட்ரான்ஸ் ஃபேட் மற்றும் சர்க்கரை கொண்ட உணவை உட்கொள்ளுங்கள். அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்யுங்கள். இப்படி லைஃப்ஸ்டைலை மாற்றிவிட்டால் சர்க்கரையை தள்ளிவைக்கலாம்.
7/7

லோ க்ளைசிமிக் இண்டக்ஸ் கொண்ட பழங்களையும், நிறைய காய்கறிகளையும் சேர்த்துக் கொண்டால் உடல் ஆரோக்கியம் உறுதி.
Published at : 04 Oct 2023 10:36 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement