மேலும் அறிய
Tamarind Dates Chutney : எந்த ஒரு சாட் உணவையும் சூப்பராக மாற்ற இந்த ஒரு சட்னி போதும்!
Tamarind Dates Chutney : நீங்கள் சாப்பிடும் சாட் உணவு எதுவும் சிறந்த டேஸ்ட்டை கொடுக்கவில்லையா? எதோ ஒரு சுவை குறைவதை போல இருக்கிறதா..? இந்த புளி சட்னி ஒன்று போதும் ருசி தூள் கிளப்பும்.

புளி பேரீச்சம்பழம் சட்னி
1/6

தேவையான பொருட்கள் : பேரிச்சம்பழம் - 10, கரைத்த புளி - 1/2 கப், மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி, சீரகம் தூள் - 1/2 தேக்கரண்டி, மல்லி தூள் - 1/2 தேக்கரண்டி, இஞ்சி தூள் -1/2 தேக்கரண்டி, உப்பு - 1/2 தேக்கரண்டி, தூள் வெல்லம் - 2 தேக்கரண்டி, தண்ணீர்.
2/6

முதலில் 10 பேரிச்சம்பழங்களை கொட்டை நீக்கி சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளவும். பிறகு ஒரு பேனில் சிறிது தண்ணீர் ஊற்றி பேரிச்சம்பழங்களை அதனுள் போடவும்.
3/6

5 நிமிடங்கள் கழித்து அதனுள் புளி கரைசலை ஊற்றி கொள்ளுங்கள்.
4/6

இரண்டு நிமிடங்கள் கழித்து, மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி, சீரகம் தூள் - 1/2 தேக்கரண்டி, மல்லி தூள் - 1/2 தேக்கரண்டி, இஞ்சி தூள் -1/2 தேக்கரண்டி, உப்பு - 1/2 தேக்கரண்டி, தூள் வெல்லம் - 2 தேக்கரண்டி இவை அனைத்தையும் அந்த கலவையில் சேர்த்து கொள்ளவும்.
5/6

இந்த கலவையில் சிறிது தண்ணீர் ஊற்றி 5 நிமிடங்கள் விட்டால் புளி சட்னி தயார்.
6/6

இதனை, பேல் பூரி, பானி பூரி போன்ற சாட் உணவுகளோடு கலந்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்
Published at : 07 Feb 2024 05:01 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
உலகம்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion