மேலும் அறிய
Jackfruit Biriyani : மட்டன் பிரியாணியின் சுவையை மிஞ்சும் பலாக்காய் பிரியாணி..இன்றே செய்யுங்கள்!
Jackfruit Biriyani : சைவ பிரியர்களே..வெஜிடெபில் பிரியாணி சாப்பிட்டு போர் அடித்துவிட்டதா..? இந்த சுவையான பலாக்காய் பிரியாணியை செய்து அசத்துங்கள்.

பலாப்பழ பிரியாணி
1/6

தேவையான பொருட்கள் : பலாக்காய், பாஸ்மதி அரிசி - 2 கப், நெய் - 3 மேசைக்கரண்டி, எண்ணெய் - 1 மேசைக்கரண்டி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, அன்னாசி பூ, வெங்காயம் - 4 நீளமாக நறுக்கியது, தக்காளி - 3 நறுக்கியது, உப்பு, மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி, மிளகாய் தூள் - 3 தேக்கரண்டி, தனியா தூள் - 2 தேக்கரண்டி, கொத்தமல்லி இலை, புதினா இலை, தேங்காய் பால் - 2 கப் நீர் சேர்த்தது, தண்ணீர். மசாலா விழுது அரைக்க : பூண்டு - 12 பற்கள், இஞ்சி - 2 இன்ச் துண்டு நறுக்கியது, சின்ன வெங்காயம் - 10, துருவிய தேங்காய் - 1 மேசைக்கரண்டி, பச்சை மிளகாய் - 4, காய்ந்த மிளகாய் - 5, புதினா இலை, கொத்தமல்லி இலை, தண்ணீர்.
2/6

செய்முறை : முதலில் பலாக்காயை வெட்டி மஞ்சள் தூள் கலந்த வெந்நீரில் வேக வைக்கவும். பிறகு பாஸ்மதி அரிசியை நன்கு கழுவி 30 நிமிடம் ஊறவைக்கவும்.
3/6

பிறகு மிக்ஸியில் பூண்டு, இஞ்சி, சின்ன வெங்காயம், துருவிய தேங்காய், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், புதினா மற்றும் கொத்தமல்லி சேர்த்து, நன்கு விழுதாக அரைக்கவும். தேங்காயை அரைத்து, பிரியாணிக்கு தேவையான தேங்காய் பால் தயார் செய்யவும்.
4/6

பிரஷர் குக்கரில், நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி, இதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ, பிரியாணி இலை மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன் நிறமானதும், அரைத்த மசாலா விழுது சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.அடுத்து இதில் தக்காளி சேர்த்து வதக்கவும்.
5/6

தக்காளி நன்கு மசிந்த பின், இதில் உப்பு, மஞ்சள் தூள், தனியா தூள் சேர்த்து வதக்கவும். அடுத்து இதில் வேக வைத்த பலக்காயை சேர்த்து கிண்டவும். குறைந்த தீயில், தேங்காய் பால் ஊற்றி கிளறவும். அடுத்து இதில் ஊறவைத்த அரிசி சேர்த்து கிண்டவும்.
6/6

குக்கரை மூடி, ஆவி வந்ததும், வெயிட் போட்டு 8 நிமிடம் வேகவைக்கவும். குக்கரின் பிரஷர் இறங்கியதும், திறக்கவும். அவ்வளவு தான் சுவையான பலாக்காய் பிரியாணி தயார்.
Published at : 10 Mar 2024 10:58 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
வேலைவாய்ப்பு
அரசியல்
கல்வி
Advertisement
Advertisement