மேலும் அறிய
Wheat Rava Idly Recipe : சுவையும் சத்துகளும் நிறைந்த கோதுமை ரவா இட்லி..இன்றே செய்யுங்கள்!
Wheat Rava Idly Recipe : ஒரே இட்லி சாப்பிட்டு போர் அடித்துவிட்டதா..? கவலை வேண்டாம்..இன்றே இந்த சுவையான கோதுமை ரவா இட்லியை செய்து அசத்துங்கள்.
கோதுமை ரவா இட்லி
1/6

தேவையான பொருட்கள் : கோதுமை ரவா - 1 கப், உப்பு - 1/2 தேக்கரண்டி, தயிர் - 1 கப், எண்ணெய் - 2 தேக்கரண்டி, கடலை பருப்பு - 1 தேக்கரண்டி, உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி, கடுகு - 1 தேக்கரண்டி, சீரகம் - 1 தேக்கரண்டி, இஞ்சி - 1 துண்டு நறுக்கியது, பச்சை மிளகாய் - 1 நறுக்கியது, பெருங்காய தூள் - 1/4 தேக்கரண்டி, கறிவேப்பிலை.
2/6

செய்முறை : முதலில் ஒரு பாத்திரத்தில் ரவையை சேர்த்து 5 நிமிடம் வறுத்து கொள்ளவும். ரவை ஆறிய உடன் உப்பு, தயிர் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து 1 மணி நேரம் ஊறவைக்கவும்.
3/6

பிறகு ஒரு பேனில் எண்ணெய், கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம் சேர்த்து கலந்து விடவும்.
4/6

கடுகு பொறிய ஆரம்பித்ததும் இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காய தூள் சேர்த்து கலந்து விடவும். பிறகு தாளித்த பொருட்களை ஊறவைத்த ரவையுடன் சேர்த்து கலந்து விடவும்.
5/6

இட்லி தட்டில் எண்ணெய் தடவி, வறுத்த முந்திரியை வைத்து, ரவை கலவையை ஊற்றி இட்லி பாத்திரத்தில் வைத்து 15 நிமிடம் ஆவியில் வேகவைக்கவும்.
6/6

அவ்வளவுதான் சுவையான கோதுமை ரவா இட்லி தயார்.
Published at : 13 Jan 2024 03:50 PM (IST)
மேலும் படிக்க





















